Just In
- 5 min ago
உங்க எடை டக்குனு குறையவும் தொப்பை காணமா போகவும்... இந்த உணவுகள சாப்பிட்டா போதுமாம்...!
- 1 hr ago
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- 1 hr ago
மாதுளையை 'இப்படி' சாப்பிட்டா தொப்பை குறையுமாம்... அட இத்தன நாள் இது தெரியாம போச்சே...
- 8 hrs ago
Today Rasi Palan 23 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கிடும்...
Don't Miss
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. கமல்ஹாசனுடன் விஜய் வசந்த் சந்திப்பு.. காங்கிரஸ் கட்சிக்கு மநீம ஆதரவு?
- Technology
WhatsApp மெசேஜ்ஜை அடுத்தவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி? இந்த சீக்ரெட் மோட்-ஐ ON செய்யுங்க.!
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Automobiles
கண் தெரியாமல் லாரியை ஓட்டும் டிரைவர்கள்! டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- Movies
அசீம் ரசிகர்களுக்கு அல்டிமேட்டாக வாழ்த்து சொன்ன நெட்டிசன்கள்... இதுக்குபேரு தான் மரண கலாய்
- Finance
இது மட்டும் நடந்துட்டா..? மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் கொண்டாட்டம் தான்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
2023 புத்தாண்டிற்கு முன் இந்த பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தால் செல்வம் பலமடங்கு பெருகுமாம்...!
2023 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது. நாம் ஒவ்வொருவருமே ஒரு புதிய ஆண்டு தொடங்கும் போது, அந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். மேலும் வரக்கூடிய புதிய ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் கொள்வோம். இது தவிர புதிய ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து அவற்றை செய்யவும் முயற்சிப்போம்.
அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு புதிய ஆண்டு தொடங்குவதற்கு முன் ஒரு சில பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தால், வாழ்க்கை செல்வ செழிப்போடு சிறப்பாக இருக்கும். இப்போது ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க எந்தெந்த பொருட்களை புத்தாண்டிற்கு முன் கொண்டு வர வேண்டும் என்பதைக் காண்போம்.

துளசி செடி
2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன் வீட்டிற்கு துளசி செடியை கொண்டு வந்து வைத்து வளர்த்து வாருங்கள். ஏனெனில் வீட்டில் துளசி செடியை நடுவதன் மூலம் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும் .அதே வேளையில் துளசி செடியில் லட்சுமி தேவி வாசம் செய்வாள் என்று கூறுவார்கள். எனவே துளசி செடியை வீட்டில் வைப்பதன் மூலம், லட்சுமி தேவியின் அருளால் வீட்டில் செல்வம் பெருகும். ஆனால் வீட்டில் துளசி செடியை வைத்தால், தினமும் தவறாமல் வழிபட வேண்டும்.

சிறிய தேங்காய்
புத்தாண்டு தொடங்குவதற்கு முன் வரும் புதன்கிழமை அன்று ஒரு சிறிய தேங்காயை வாங்கி, சிவப்பு துணியில் வைத்து சுற்றி, வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் வீட்டில் மகிழ்ச்சியும் எப்போதும் நிரம்பியிருக்கும்.

உலோக ஆமை அல்லது யானை
புத்தாண்டு தொடங்குவதற்கு முன் உலோக ஆமை அல்லது யானையை வீட்டிற்கு கொண்டு வருவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் ஆமையும், யானையும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் சின்னங்களாக கருதப்படுகின்றன. எனவே வருகிற 2023 ஆம் ஆண்டு வருவதற்கு முன் செம்பு, வெண்கலம் அல்லது வெள்ளியால் ஆன யானை அல்லது ஆமையை வாங்கி வந்து, வீட்டின் ஹாலில் வடக்கு திசையில் வையுங்கள். இப்படி செய்வதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும்.

முத்து சங்கு
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் முத்து சங்கு வைத்திருப்பது நல்லதாக கூறப்படுகிறது. எனவே 2023 புத்தாண்டு வருவதற்கு முன் உங்கள் வீட்டில் முத்து சங்கு வையுங்கள். ஏனெனில் முத்து சங்கு லட்சுமி தேவிக்கு பிரியமானது. இதை பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். இதனால் வீட்டில் பணம் அதிகம் சேர்வதோடு, வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களும் நீங்கும்.

சிரிக்கும் புத்தர்
2023 புத்தாண்டு உங்களுக்கு செழிப்பாக இருக்க வேண்டுமா? அப்படியானால் புத்தாண்டிற்கு முன் சிரிக்கும் புத்தரை வாங்கி வந்து வீட்டில் வையுங்கள். அதுவும் சிரிக்கும் புத்தரை வீட்டில் வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். இதனால் வாஸ்து தோஷங்கள் நீங்குவதோடு, வீட்டின் பொருளாதார நிலையும் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)