For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல் டாக்டர்கிட்ட போன இந்த பெண்ணுக்கு நடந்த கொடுமைய பார்த்துட்டு போங்க... என்ன கொடுமைப்பா இது

பல் மருத்துவர் போலியாக கிளிப் வாங்கி, பயன்படுத்தியதால் நிகழ்ந்த விபரீதம் பற்றி தான் இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம். அது பற்றிய உண்மைக் கதை தான் இது.

|

அஜிலா என்னும் ஒரு பல் மருத்துவர் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு இடுகையைப் பதிவிட்டார். அதில் ஒரு மலேசியப் பெண்மணி சமீபத்தில் வீங்கிய உதடுகள் மற்றும் அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். இந்த பெண்மணி தனது பற்களை இழுத்து கட்டுவதற்கு ஒரு போலியான க்ளிப்பைப் பொருத்திய ஒரு வார காலத்தில் இந்த பாதிப்பை எதிர்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

Woman Bought Fake Braces And Landed In Hospital

போலியான மற்றும் தரம் குறைந்த பல் க்ளிப்பை பயன்படுத்துவதால் உண்டாகும் விளைவு குறித்த விழுப்புணர்ச்சி ஏற்படுவதற்காக இந்த மருத்துவர் இந்த இடுகையைப் பதிவிட்டுள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஷனுக்காக பல் க்ளிப்

பேஷனுக்காக பல் க்ளிப்

பாதிக்கப்பட்ட பெண்மணி ஜோகர் என்ற குடும்பப் பெயரைக் கொண்டவர். இவருடைய நண்பர்களும், இவருடன் வேலை செய்பவர்களும் பல் க்ளிப் அணிவதால் இவரும் ஆசைப்பட்டுத் தரக் குறைவான பல் க்ளிப் அணிய முற்பட்டதாக இவர் கூறுகிறார்.

MOST READ: ஆண்களுக்கு பெரிய ஆபத்தைக் கொடுக்கும் தைராய்டு பிரச்சினையை நீங்களே எப்படி கண்டுபிடிக்கலாம்?

மருத்துவர் விவரங்களை பகிர்ந்து கொள்கிறார்

மருத்துவர் விவரங்களை பகிர்ந்து கொள்கிறார்

பேஷன் காரணமாக பல பெண்களும் இன்று பல் க்ளிப் அணிந்து கொள்கின்றனர். பற்களை சீராக வரிசை படுத்துவதற்காகப் பயன்படும் க்ளிப்பை ஸ்டைலுக்காக இன்று பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் மட்டுமே இதனை சரியான காரணத்திற்காக பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் இந்த பல் க்ளிப் அணிவது ஸ்டைலுக்காக மட்டுமே என்று இந்த மருத்துவர் கூறுகிறார்.

மோசமான பல் மருத்துவர்

மோசமான பல் மருத்துவர்

பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது, தான் நீண்ட தேடல் மற்றும் ஆராய்ச்சிக்கு பின் ஒரு தரக்குறைவான பல் மருத்துவரிடம் சென்று தன் பற்களுக்கு க்ளிப் அணிந்ததாகக் கூறுகிறார். அடுத்த ஒரு வாரத்தில் அவருடைய உடல்நிலை நலிவடையும் என்பது அப்போது அவருக்குத் தெரியாது.

MOST READ: எந்தெந்த ராசிக்காரர்கள் பணத்தை ஊதாரித்தனமா செலவழிப்பார்கள்? தெரிஞ்சா வசதியா இருக்கும்ல

உதடுகள் வீங்கியது

உதடுகள் வீங்கியது

பற்களில் க்ளிப் பொருத்திய ஒரு வாரத்தில் அந்த பெண்மணியின் உதடு வீங்கி, காய்ச்சல் அதிகரித்தது. அவருடைய நிலை மோசமாக இருப்பதாகவும், அவருடைய உதடுகளில் சீழ் நிரம்பி இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். அடுத்த மூன்று நாட்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வகையில் அவருடைய உடல்நலம் பாதித்தது. மருத்துவ சிகிச்சைக்கு பின், தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.

நீங்களும் இது போன்ற போலியான தரக்குறைவான சிகிச்சையை பெற்றிருக்கிறீர்களா? உங்களுடைய அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Woman Bought Fake Braces And Landed In Hospital

A dentist by the name of Azila shared a post on her Facebook page about a Malaysian woman who had recently suffered from swollen lips and high fever. The patient had apparently suffered from this condition within just a week of wearing fake braces.
Story first published: Tuesday, March 26, 2019, 11:40 [IST]
Desktop Bottom Promotion