For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா?

இறந்தவர்கள் மரணத்திற்கு பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அனைத்து இறுதிச்சடங்குகளும் நடத்தப்படுகிறது.

|

இறுதி சடங்குகள் என்பது இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதி சடங்குகள் நடத்தப்டுகிறது. ஆனால் இந்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னரும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர்.

Why should the dead body be preferably cremated during the daytime

இறந்தவர்கள் மரணத்திற்கு பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அனைத்து இறுதிச்சடங்குகளும் நடத்தப்படுகிறது. ஆனால் பல இறுதி சடங்குகள் ஏன் செய்யப்படுகிறது என்பதே நமக்கு தெரியாது. இந்த பதிவில் அனைத்து இறுதி சடங்குகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூக்கில் பஞ்சு வைப்பது

மூக்கில் பஞ்சு வைப்பது

இறந்தவர்களின் உடல் என்பது பாக்டீரியாக்கள் அதிகம் வசிக்கும் இடமாக மாறிவிடும். எனவே அவர்களின் உடலில் இருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிவரும். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும். இதனை தடுக்கத்தான் நாடிகட்டு என்னும் பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுகிறார்கள். மேலும் மூக்கில் பஞ்சு வைக்கப்பட காரணமும் நுண்ணுயிர்கள் உடலில் பரவாமல் இருக்கத்தான்.

விளக்கேற்றுவது

விளக்கேற்றுவது

இறந்தவர்கள் வீட்டில் கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பது முக்கியமான சடங்காகும். உயிர் சக்தியானது உடலை விட்டு பிரிந்து விட்டால் உடலானது வெற்றுடலாக மாறிவிடும். அவர்கள் உடலில் இருந்து வாயுக்கள் வெளியேற தொடங்கிவிடும். ஆன்மீகரீதியாக அவர்கள் உயிர் அலைகள் அந்த இடத்திலேயே சுற்றிவரும். இந்த அலைகள் மற்றவர்கள் உடலில் நுழைந்தால் அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதனை தடுக்கவே விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இந்த விளக்கு தெற்கு திசை நோக்கி ஏற்றிவைக்கப்பட வேண்டும், ஏனெனில் இதுதான் மரணத்தின் கடவுளான எமனுக்கான திசையாகும். விளக்கேற்றி வைத்தபின் எமதர்மரிடம் அந்த அலைகள் தன்னை நெருங்காமல் விளக்கின் தீபத்திற்கு செல்லும்படி வேண்டிகொள்ள வேண்டும்.

ஒரு திரி மட்டும் உபயோகிக்க வேண்டும்

ஒரு திரி மட்டும் உபயோகிக்க வேண்டும்

ஒருவர் இறந்த பிறகு பஞ்ச பூதங்களால் நிறைந்த அவரின் உடலானது உயிரற்றதாகிவிடும். அதன்பின் ஒரே ஆன்மா மட்டுமே ஒளிரும். விளக்குகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை திரியானது ஒளிரும் ஆன்மாவை குறிக்கும்.

MOST READ: துளியும் யோசிக்காமல் அடுத்தவர் மனதை காயப்படுத்த இந்த ராசிக்காரர்களால்தான் முடியும் தெரியுமா?

ஏன் பகலில் மட்டுமே செய்யப்படுகிறது?

ஏன் பகலில் மட்டுமே செய்யப்படுகிறது?

அனைத்து இறுதி சடங்குகளும் பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும், ஏனெனில் உடலை தகனம் செய்வது முதன்மையானதாகும். ஏனெனில் இரவு என்பது எதிர்மறை சக்திகள் அதிகம் உலவும் மேலும் அவற்றின் பலமும் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும். இறந்த எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் மற்ற உடல்களில் நுழைய முயலும். எதிர்மறை சக்திகளின் இந்த தாக்குதல்களை தவிர்க்கவே உடல் பகல் பொழுதில் தகனம் செய்யப்படுகிறது. அறிவியல்ரீதியாக கூறும்போது இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும். இது சுற்றி இருப்பவர்களுக்கு எளிதில் தாக்கக்கூடும். அதனால்தான் உடல் தகனம் பகலில் செய்யப்படுகிறது.

மூங்கில் பாடை

மூங்கில் பாடை

மூங்கில்களில் குறிப்பிட்ட ஒலி ஆற்றலை வெளியிடும் தன்மை உள்ளது, இது சுற்றி வரும் தன்மையுடையது. இதில் இருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல் இறந்து உடலுக்கு கவசமாக அலைகளை ஏற்படுத்தக்கூடும். மூங்கிலால் செய்யப்பட்ட பாடையில் இருக்கும் போது அந்த உடல் ஒலி ஆற்றலால் எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.

கால்கள் சேர்த்து கட்டப்படுவது

கால்கள் சேர்த்து கட்டப்படுவது

இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் உடல் தரையில் வைக்கப்பட்டு அந்த உடலின் காலின் பெருவிரல் இரண்டும் சேர்த்து கட்டப்படும். இது உடலின் வலது மற்றும் இடதுபுற ஆற்றல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து உடலையே சுற்றி வர காலின் விரல்கள் கட்டப்படுகிறது.

MOST READ: அனைத்து விசேஷங்களிலும் வாழைமரம் வாசலில் கட்டப்பட காரணம் என்ன தெரியுமா?

மண்பானை

மண்பானை

இறந்த உடலை சுற்றி இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த பல பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒன்றுதான் மண்பானை. மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் இந்த வேலையை சிறப்பாக செய்கிறது. உடலை எதிர்மறை சக்திகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மண்பானை உதவுகிறது. மண்பானையிலிருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: body ghost
English summary

Why should the dead body be preferably cremated during the daytime

Do you know why all the rituals after death done at day time only?
Desktop Bottom Promotion