Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
மலையையே தூக்கிய அனுமனால் ஏன் சீதையை அசோக வனத்தில் இருந்து தூக்கி வர இயலவில்லை தெரியுமா?
சஞ்சீவி பர்வதத்தை தூக்கி ஒற்றை கையில் தூக்கி வந்த அனுமன் ஏன் அசோக வனத்தில் சீதையை சந்தித்த போது ஏன் சீதையை இராமனிடம் தூக்கி வரவில்லை என்று தோன்றியிருக்கும். அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்று இராமாயணம் ஆகும். மகாவிஷ்ணு இராம அவதாரம் எடுத்து இராவணனை அழித்து பூமியில் தர்மத்தை நிலைநாட்டிய பெரும் போரே இராமாயணம் என்னும் புகழ்பெற்ற இதிகாசமாக உள்ளது. இராமாயண போர் நடைபெற காரணமாக இருந்த ஆரம்ப புள்ளி இராவணன் சீதையை இலங்கைக்கு தூக்கி சென்றதுதான்.

இராமர், இலட்சுமணன் மற்றும் அனுமன் மூவரும் வானர சேனையை சேர்த்து கொண்டு கடல் மார்க்கமாக பாலம் அமைத்து இலங்கை சென்று இராவணனுடன் போர் புரிந்து சீதையை மீட்டனர். ஆனால் சீதை இலங்கையில்தான் இருக்கிறார் என்று கண்டறிய இராமருக்கு உதவி புரிந்ததே வாயுமைந்தன் அனுமன்தான். இந்த பதிவில் சீதையை அனுமன் அசோக வனத்தில் சந்தித்த போது அவர்களுக்குள் நிகழ்ந்த சுவாரஸ்யமான உரையாடல் என்னவென்று பார்க்கலாம்.

நீண்ட நாள் கேள்வி
இராமாயணம் படித்த அனைவருக்கும் இருக்கும் ஒரு கேள்வி பராக்கிரம சாலியான அனுமன், பாதி இலங்கையை தன் வாலில் இருந்த நெருப்பு மூலம் எரித்த அனுமன், சஞ்சீவி பர்வதத்தை தூக்கி ஒற்றை கையில் தூக்கி வந்த அனுமன் ஏன் அசோக வனத்தில் சீதையை சந்தித்த போது ஏன் சீதையை இராமனிடம் தூக்கி வரவில்லை என்று தோன்றியிருக்கும். அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

அனுமனின் யோசனை
நமக்குள் தோன்றிய இந்த கேள்வி அனுமனுக்குள் எழாமல் இருந்திருக்குமா? அனுமனுக்கும் இந்த யோசனை எழுந்தது. தனது பிரபு இராமரின் மனவேதனையை நொடியில் போக்க தங்களை ஒளியை விட அதிகமான வேகத்தில் அவரிடம் சென்று சேர்த்து விடுகிறேன் என்று அனுமன் கூறினார். ஆனால் அதனை சீதை மறுத்திவிட்டார்.

அனுமனின் கோரிக்கை
அனுமன் சீதையை ஒப்புக்கொள்ள வைக்க " தாயே! என் முதுகில் அமர்ந்து கொள்ளுங்கள். கடல்களை கடந்து யாகத்தில் இருக்கும் நெருப்பில் இருந்து வரும் ஆவி எப்படி தேவர்களை சென்று அடைகிறதோ அதேபோல உங்களை என் பிரபுவிடம் சேர்த்து விடுகிறேன் " என்று கூறினார்.

சீதையின் பதில்
ஆனால் சீதைக்கு அனுமனின் பலத்தின் மேல் சந்தேகம் எழுந்தது. ஏனெனில் அனுமனின் உருவம் மிகச்சிறியதாக இருக்கிறதே இவரின் முதுகில் எப்படி தான் அமர்ந்து பறக்க முடியும் என்று யோசிக்க தொடங்கினார்.

அனுமனின் உருவம்
சீதையின் தயக்கத்தை உணர்ந்த அனுமன் தன் தன் உடலை மலையின் அளவை போல பெரிதாக மாற்றினார். அனுமனின் ஆற்றலை கண்டு சீதை வாயடைத்து போனார். இருப்பினும் அனுமனுடன் வருவதற்கு சீதை மறுத்து விட்டார்.

எதிர் வாதம்
சீதை தன் கணவர் இராமனை தவிர வேறெந்த ஆடவனையும் தீண்ட இயலாது என்று கூறிவிட்டார். இராமரின் பக்தராக அனுமன் இருந்தாலும் அவரை தன்னால் தீண்ட இயலாது என்று கூறி சீதை அனுமனுடன் வர மறுத்து விட்டார்.

அனுமனின் சாதுர்யம்
இந்த தருணத்தில் தான் அனுமன் தன் பக்தியையும், சாதுர்யத்தையும் வெளிப்படுத்தினார். அவர் கூறினார், " நான் வெளி ஆண் அல்ல. நான் உங்கள் மகன்தான். உங்கள் மகனை தொடுவதில் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. நான் என் தந்தையான இராமபிரானிடம் உங்களை அழைத்து செல்கிறேன் " என்று கூறினார்.

சீதையின் குழப்பம்
இதனை கேட்ட சீதை அதிர்ச்சியடைந்தார். அனுமனின் இந்த கோரிக்கையை எப்படி மறுப்பது என்று சீதை குழப்பமடைந்தார். அனுமன் கூறிய இந்த வாதத்தை மறுதலிப்பது என்பது முடியாத காரியம் என்று உணர்ந்தார். எனவே அவர் வேறு காரணங்களை யோசித்தார்.

இராமரின் ஆணை
இராமர் அனுமனுக்கு வழங்கிய ஆணையை அவருக்கு நினைவுபடுத்தினார் சீதை. சீதையை கண்டுபிடி ஆனால் இங்கு அழைத்து வராதே என்று இராமர் கூறியிருந்தார். மற்றொரு காரணம் அனுமன் இவ்வாறு சீதையை அழைத்து சென்றால், உலகத்திற்கு இராமரின் பராக்கிரமம் மீது சந்தேகம் எழும், இராமரால் தன் மனைவியை மீட்க முடியாமல் போனதென பேசுவார்கள் என்று சீதை கூறினார்.

அனுமனின் சம்மதம்
இதை கேட்டவுடன் அனுமன் ஒப்புக்கொண்டார். சீதை ஏன் தன்னுடன் வர மறுத்துவிட்டார் என்று அனுமன் உணர்ந்து கொண்டார். சீதையை வணங்கி " தாயே நான் நீங்கள் இருக்கும் இடத்தை பிரபுவிடம் கூறி விரைவில் உங்களை மீது செல்கிறேன் " என்று கூறினார். அதற்கு பின் நடந்த நிகழ்வுகளை நாம் நன்கு அறிவோம்.



Click it and Unblock the Notifications
