For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரதப்போரில் வென்றபின் மதுரையில் வைத்து அர்ஜூனன் கொல்லப்பட்டது ஏன் தெரியுமா?

By Mahibala
|

மகாபாரதப் போரில் கௌரவர்களை வீழ்த்தி பாண்டவர்கள் வெற்றி பெற்ற தர்மயுத்தம் பற்றி எல்லோருக்கும் நன்கு தெரிந்த விஷயம் தான். அந்த போரில் பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேரைத் தவிர பாண்டவர்களின் குழந்தைகளும் ஒட்டுமொத்த கௌரவர்களும் மொத்தமாக கொல்லப்படுவார்கள் என்பது தான் விதி.

ஆனால் பாரதப் போர் முடிந்தபின், மதுரையில் வைத்து சொந்த மகனாலேயே அர்ஜூனன் கொல்லப்பட்டார். அது எப்படி நடந்தது? எதற்கான கொல்லப்பட்டார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரதப் போர்

பாரதப் போர்

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கு இடையே நடந்த தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக வந்த போர் தான் குருஷேத்திரப் போர். இதில் பகவான் கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்களின் பக்கம் நின்று அர்ஜூனனின் தேரோட்டியாக இருந்து போரை வழி நடத்தினார் என்பதும், அரின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டதால் போரின் இறுதியில் பாண்டவர்கள் வென்றார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.

MOST READ: இந்த ஒரு கீரை போதும்... நீங்க அவதிப்படற இந்த 10 நோயையும் ஓடஓட விரட்டலாம்...

போரின் வெற்றி

போரின் வெற்றி

போரின் வெற்றி என்பது பல ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று கிடைத்தது. அதைத் தவிர பாண்டவர்களின் குடும்பத்திலும் ஏராளமான உயிர்கள் பலி கொடுக்கப்பட்டன. அதோடு கௌரவர்களின் பக்கம் இருந்த சாகாவரம் பெற்ற பீஷ்மர் முதல் அத்தனை பேரும் கொல்லப்பட்டார்கள். வெற்றி என்பது பல துயரங்களைத் தாண்டி தான் பாண்டவர்களுக்குக் கிடைத்தது.

அரியணை ஏறிய தர்மன்

அரியணை ஏறிய தர்மன்

போரில் வெற்றி பெற்ற பின் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மன் என்று அழைக்கப்படுகிற யுதிஷ்டர் அரியணை ஏறினார். அதன்பின், ஒட்டுமொத்த தேசத்தையும் தன்னுடைய ஆட்சிக்குக் கீழ் நேர்மையான முறையில் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தார். அதற்கு கண்ணனின் அறிவுரைப்படி அசுவமேத யாகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்கான வழிமுறைகளையும் வியாசர் அவருக்கு எடுத்துரைத்தார்.

உத்தமலட்சண குதிரைகள்

உத்தமலட்சண குதிரைகள்

வியாசரின் முன்னிலையில் சித்ரா பௌர்ணமியன்று யுதிஷ்டருக்கு யாக தீட்சை கொடுக்கப்பட்டது. அதன்பின் உத்தம லட்சணங்கள் அனைத்தும் பொருந்திய குதிரைகளை அலங்கரித்து அதை தேசம் முழுவதும் சுற்றி வரச் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார் தருமர். அதற்குக் பாதுகாப்பாக தன் தம்பி அர்ஜூனன் நியமிக்கப்பட்டான்.

அர்ஜூனன் புறப்பாடு

அர்ஜூனன் புறப்பாடு

யாகக் குதிரைக்குப் பாதுகாப்பாக அர்ஜூனன் தன்னுடைய தெய்வீக அஸ்தழரங்களான வில், நிறைய அம்புகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். செல்லும் இடங்களில் எல்லாம் யாகக்குதிரைக்கு பெரும் வரவேற்பும் மரியாதையும் வழிபாடும் கொடுக்கப்பட்டன. எல்லா நாட்டு மன்னர்களும் குதிரைகளை வணங்கி மாலை மரியாதை செலுத்தி வழிபட்டார்கள்.

MOST READ: ரமலான் நோன்பு இருக்கும்போது உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும் தெரியுமா? இத பாருங்க...

கடம்பவனம் எனும் மதுரை

கடம்பவனம் எனும் மதுரை

மதுரை முன்னொரு காலத்தில் கடம்பவனம் என்று பெயர் பெற்றிருந்தது. அந்த மதுரையில் உள்ள மணலூருபுரம் என்னும் நாட்டுக்கு யாகக்குதிரை வந்தது. அதைக் கேள்விப்பட்ட பப்ருவாகனன் என்னும் மன்னன் யாகத்திற்கும் குதிரைக்கும் பெரும் மரியாதையை செய்ய வேண்டும் என்று விரும்பி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

யார் அந்த பப்ருவாகனன்

யார் அந்த பப்ருவாகனன்

அது வேறு யாருமில்லை. அர்ஜூனனின் மகன் தான். பிறகு எப்படி போரிலிருந்து தப்பித்தான் என்று நீங்கள் கேட்கலாம். மதுரையைச் சேர்ந்த மன்னனின் மகளான சித்ராங்கதை என்பவரை மணந்து கொண்டார் அர்ஜூனன். அவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் இந்த பப்ருவாகனன். ஆனால் அர்ஜூனன் அந்த குழந்தையை அந்த மதுரை மன்னனுக்கே தத்துப்பிள்ளையாகக் கொடுத்துவிட்டார்.

இருவருக்கும் போர்

இருவருக்கும் போர்

தன்னுடைய தந்தையை வணங்கிய பொழுது, நீ என் மகனாக இருந்தால் வீரத்துடன் என்னுடன் போர் புரிய வேண்டுமே ஒழிய தலைதாழ்ந்து நிற்கக் கூடாது என்று சொன்னதால் போர் மூண்டது. இருவரும் அம்புகளை எய்தனர். அர்ஜூனனோ எதிரில் போர் புரிவது தன் மகன் என்பதால் பெரிதாகத் தாக்கவில்லை. பப்ருவாகனன் குறிவைத்து தாக்கிய போது அம்பு மார்பில் பட்டு அர்ஜூனன் மாய்ந்தான்.

MOST READ: உங்க ஃபேவரட் ஹீரோயினோட வெயிட் குறைக்கிற சீக்ரட் தெரிஞ்சிக்கணுமா? இத படிங்க...

மீண்டும் உயிர் பெற்றான்

மீண்டும் உயிர் பெற்றான்

ஒட்டுமொத்த கூட்டமே கண்ணீரில் மிதக்க அர்ஜூனனின் மற்றொரு மனைவியான உலோபி தனக்கு இறந்தவரை உயிர்பிக்கும் ஆற்றல் இருப்பதால் அதைப் பயன்படுத்தி மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்தாள். இது அர்ஜூனன் பீஷ்மரைக் கொன்ற பாவத்துக்கான தண்டனை என்று கூறினார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mahabharata: Why Arjuna Killed By His Own Son?

Arjuna as the main protector follows it and his soldiers accompany him…but what happens next is not something that everyone is aware of!! The mighty Arjuna was actually killed by his own son Babrubhan. Shocked? Read on to find out the whole story…
Story first published: Thursday, May 9, 2019, 13:55 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more