Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
உண்மையாகிவிட்ட பாபா வாங்காவின் மூன்றாம் உலகப்போர் குறித்த கணிப்பு!
Baba Vanga's World War 3 Prediction: இன்று காலை அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒரே நேரத்தில் ஈரானின் பல பகுதிகளில் ஏவுகணை தாக்குதலை நடத்தி, உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.
அதுவும் இவ்விரு நாடுகளும் ஈரானின் ஜனாதிபதி மாளிகை, ஈரானின் உளவுத்துறை உட்பட ஈரானின் 30 முக்கியமான இடங்களில் பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளன. இப்படியான தாக்குதலுக்கு மத்தியில், மிகவும் பிரபலமான தீர்க்கத்தரசியான பாபா வாங்காவின் 2026 ஆம் ஆண்டிற்கான ஒரு பயங்கரமான கணிப்பு உண்மையாகிவிட்டதாக கூறப்படுகிறது.

பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற தீர்க்கத்தரசியான பாபா வாங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனெனில் பாபா வாங்கா பல ஆண்டுகளாக உலகில் நடக்கப் போகும் பல்வேறு நிகழ்வுகளை சரியாக கணித்துள்ளார். இதனால் ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும், அந்த ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்புகள் என்னவென்பதை அறிய பலரும் ஆவல் கொள்வார்கள். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் ஒரு கணிப்பு தற்போது உண்மையாகிவிட்டதாக மக்கள் கூறி வருகின்றனர்.
2026-க்கான பாபா வாங்காவின் எந்த கணிப்பு உண்மையாகிவிட்டது?
தீர்க்கத்தரசியான பாபா வாங்கா 2026 ஆம் ஆண்டானது மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் ஆண்டாக இருக்கலாம் என்று கணித்துள்ளார். அதுவும் இது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற முக்கிய நாடுகளுக்கு இடையே, குறிப்பாக தைவான் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக அதிகரித்து வரும் பதட்டங்களால் தூண்டப்படலாம்.
மேலும் இவரது கணிப்பானது இந்த போர் கிழக்கில் தொடங்கி மேற்கு நோக்கி பரவக்கூடும் என்றும், ஐரோப்பாவில் தான் பெரிய அளவில் பேரழிவு ஏற்படும் என்றும் கூறுகிறது. முக்கியமாக இந்த போர் படிப்படியாக உலகம் முழுவதும் பரவும் என்றும் பாபா வாங்கா கூறியிருந்தார். அதற்கேற்ப ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலைத் தொடர்ந்ததால், பாபா வாங்காவின் கணிப்பு நிறைவேறியதாக கூறப்படுகிறது.
அதோடு இந்த மூன்றாம் போர் 2026 ஆம் ஆண்டின் மார்ச்-ஏப்ரலில் வெடிக்கும் என்று கணித்திருந்தார். அதேப் போல் மார்ச் மாதம் தொடங்குவதற்கு முந்தைய நாளான பிப்ரவரி 28 ஆம் தேதி காலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஒரே வேளையில் ஈரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் திடீரென்று தாக்குதலை நடத்தியதை உறுதிபடுத்தியதைத் தொடர்ந்து, இதைப் பார்க்கும் அனைவரது மனதிலும், இனி ஈரான் இதற்கு பழிவாங்கும் விதமாக எப்படிப்பட்ட தாக்குதலை நடத்தப் போகிறதோ என்ற ஒரு அச்சம் எழுகிறது. இந்த தாக்குதலுக்கு ஈரான் பதிலடியைக் கொடுத்தால், நிச்சயம் இது ஒரு பேரழிவை ஏற்படுத்தி, பாபா வாங்காவின் கணிப்புக்களை முழுமையாக உண்மையாக்கிவிடும்.
பாபா வாங்காவின் 2026-க்கான பிற கணிப்புகள்
* பாபா வாங்கா 2026 ஆம் ஆண்டில் பெரிய பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் போன்ற இயற்கை பேரழிவுகள் நிகழும் என்று கணித்துள்ளார்.
* 2026-ல் வேற்றுகிரகவாசிகளுடன் மனிதர்கள் தொடர்பு கொள்ளக்கூடும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
* மனித கட்டுப்பாட்டை மீறிய செயற்கை நுண்ணறிவு (AI), அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். மேலும் இது வேலை பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications