Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
இராவணனின் வீழ்ச்சிக்கு பின்னர் இராமருக்கு உதவிய வானர சேனைக்கு என்ன நடந்தது தெரியுமா?
கடவுளின் அவதாரமாகவே இருந்தாலும் இராமனால் வானர சேனையின் துணையின்றி இராவணனை வீழ்த்தி இருக்க முடியாது. ஆனால் போரின் முடிவுக்கு பிறகு வானர சேனை என்ன ஆனது என்று உங்களுக்கு தெரியுமா?
இராமாயண போர் என்பது இராமர் அவரின் மனைவியை கவர்ந்து சென்ற இராவணனை அழித்து சீதையை மீட்க நடத்தப்பட்டதாகும். இராமர் அயோத்தியின் அரசனாக இருந்தாலும் அவர் வனவாசத்தில் இருந்ததால் அவரால் தன் நாட்டு படையை உதவிக்கு அழைக்க இயலவில்லை. இந்த சூழ்நிலையில்தான் வானர சேனை இராமருக்கு உதவியது.

கடலளவு இருந்த இராவணனின் அசுர சேனையை அனுமன், ஜம்பவான், சுக்ரீவன், அங்கதன் போன்ற மாவீரர்கள் வழிநடத்திய வானர சேனை துவம்சம் செய்தது. வானர சேனையில் இருந்த ஒவ்வொரு வானரமும் பத்து வீரருக்கு சமமான பலத்தை கொண்டிருந்தார்கள். கடவுளின் அவதாரமாகவே இருந்தாலும் இராமனால் வானர சேனையின் துணையின்றி இராவணனை வீழ்த்தி இருக்க முடியாது. ஆனால் போரின் முடிவுக்கு பிறகு வானர சேனை என்ன ஆனது என்று உங்களுக்கு தெரியுமா? இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

உத்தர காண்டம்
இராமாயணத்தில் உத்தர காண்டம் போருக்கு பிறகான வானர சேனையின் நிலையை விளக்குகிறது . இராமரின் பூமியில் இருக்கும் காலம் முடியப்போவதை மரணத்தின் கடவுளான எமன் அவரிடம் கூறியவுடன் இராமர் சராயு நதியில் மூழ்கி தன் உயிரை விட முடிவெடுத்தார்.

அங்கதன் பொறுப்பு
இராமரின் முடிவை கேள்விப்பட்ட சுக்ரீவன் அதிர்ச்சியடைந்து வாலியின் மகன் சுக்ரீவனிடம் வானர சேனையையும், கிஷ்கிந்தை ராஜ்ஜியத்தையும் பார்த்துக்கொள்ள கூறிவிட்டு சுக்ரீவனும் சில வானரர்களும் அயோத்தி சென்று இராமருடன் சேர்ந்து உயிரை விட முடிவெடுத்தனர்.

வானரங்கள்
சுக்ரீவனுடன் வானரங்கள், கரடிகள், அரக்கர்கள் என பலரும் அந்த இடத்தில் கூட தொடங்கினர். பூமியை விட்டு சொர்க்கத்திற்க்கு செல்ல முடிவெடுத்த இராமரை காண்பதற்கு முனிவர்கள், தேவர்கள் என அனைவரும் சராயு நதிக்கரையில் கூடினர்.

இராமரிடம் அவர்கள் என்ன கூறினார்கள்
அங்கு கூடியிருந்த அனைவரும் இராமனிடம் " அனைவரையும் விட மேன்மை வாய்ந்த இராமனே நீ உலக நன்மைக்காக பூமியை விட்டு சொர்க்கம் சென்றால் எமனையும் நாங்கள் எதிர்க்க தயார்" என்று கூறினர். சுக்ரீவனோ " பிரபு! அங்கதனை அரியணையில் அமர வைத்து விட்டேன் , அரசே நானும் உங்களை பின்தொடர்ந்து வர அனுமதியுங்கள் " என்று கூறினார்.

இராமரின் பதில்
வானரங்களின் வார்த்தைகளை கேட்ட இராமர் அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார். அவர் அனுமனிடம் " அனுமனே நீ என்னுடன் வராதே! நீ என்றென்றும் நிலைத்து வாழ்வாய். இந்த பூமியில் என் பெயர் இருக்கும் வரை நீ அனைவராலும் வணங்கப்படுவாய் " என்று கூறினார். தனது பிரபுவின் வாயில் இருந்து இந்த வார்த்தைகளை கேட்ட அனுமன் " உங்களின் கட்டளைப்படி இந்த உலகத்தில் சத்தியம் வாழ்கிற வரை நானும் வாழ்வேன் " என்று கூறினார்.

வானரர்களின் உறுதிமொழி
அனுமன் ஜம்பவான், மைந்தா, ரிவிடன் மற்றும் பிற வானரர்களிடம் கலியுகம் இருக்கும் வரை நீங்கள் அனைவரும் வாழவேண்டும் என்று கூறினார். சுக்ரீவன் மற்றும் மற்ற வானரர்கள் இராமருடன் சேர்ந்து பூமியை விட்டு பிரியப்போகிறார்கள் என்று கூறினார். அனுமன், ஜம்பவான், மைந்தா, ரிவிடன், நிலன், நலன் மற்றும் இன்னபிற ஐந்து வானரங்கள் இன்றும் கலியுகம் இருக்கும்வரை இருப்போம் என்று உறுதி மொழி எடுத்தனர்.

மகாபாரதத்தில் வானரர்கள்
உறுதிமொழி எடுத்துக்கொண்ட வானரர்கள் அதற்க்கு பின் மகாபாரதத்திலும் காட்சியளித்தனர். இதில் மிகவும் புலப்பெற்ற வானரர் ஆஞ்சநேயர்தான். வாயு மைந்தர்களான அனுமனும், பீமனும் வனத்தில் சந்தித்து கொண்டார்கள். அர்ஜுனனும் அனுமனை சந்தித்தான். போரில் அர்ஜுனன் ரதத்தில் அனுமன் வீற்றிருந்தார். உறுதிமொழி எடுத்த மற்றொரு வானரனான ஜம்பவான் கிருஷ்ணரை சந்தித்தார். கிருஷ்ணருடன் போரிட்டு தோற்று தன் மகளையும் கிருஷ்ணருக்கு மணம் முடித்து வைத்தார்.

மற்ற வானரங்கள்
அங்கதனுக்கு பிறகு வானர சேனை மைந்தா மற்றும் ரிவிடன் வசம் வந்தது. யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் நடத்தியபோது ஒவ்வொரு திசைக்கும் தன்னுடைய ஒவ்வொரு சகோதரனை அனுப்பி அங்கு இருக்கும் ராஜ்ஜியங்களை ராஜசூய யாகத்தை ஏற்றுக்கொள்ள செய்யும் படி பணித்தான். அந்த வகையில் கிஷ்கிந்தைக்கு சகாதேவன் சென்றான். சகாதேவனின் வேண்டுகோளை ஏற்க மறுத்த வானர சகோதரர்கள் அவனை போருக்கு அழைத்தனர். ஏழு நாட்கள் போர் நடந்தது, இறுதியில் குரு வம்ச இளவரசனான சகாதேவனின் மகிமையை உணர்ந்து அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்கள்.



Click it and Unblock the Notifications
