For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படுபாவி! கணவர் நைட் ஷிப்ட் வேலைக்கு போனதும் பால்காரன் அந்த பொண்ணை இப்படி பண்ணிட்டானே!

By Mahibala
|

சென்னைக்கு அருகில் திருத்தணியில் கணவர் நைட் ஷிப்ட்டுக்கு வேலைக்குச் சென்று விட்டார். அந்த சமயத்தில் அவர்களுடைய குடும்பத்துக்கு நெருகு்கமான பால்காரன் ஒருவன் பக்கத்து வீட்டில் வசித்து வந்தான்.

Tiruttani

கணவர் நைட் ஷிப்ட் போவதை நோட்டமிட்டுக் கொண்டே இருந்துவிட்டு விடியற்காலை அந்த பெண் வாசல் தெளித்து கோலம் போட வரும்போது வீட்டுக்குள் குதித்து பணம், நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டான். தாயும் மனகும் தடையாக இருந்ததால் கொலை செய்ய திட்டமிட்டுவிட்டான். என்னதான் நடந்தது. விரிவாகப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருத்தணி இரட்டை கொலை

திருத்தணி இரட்டை கொலை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வேட்டைப்புதூர் என்னும் ஊரில் பாலாஜி. நகரில் வசித்து வருபவர் பெருமாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் எம்ஆர்எஃப் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வீரலட்சுமி என்னும் மனைவியும் பத்து வயதில் மகனும் இருக்கிறார்கள்.

MOST READ: உலகிலேயே மிகப்பெரிய ஆணுறுப்பை கொண்டவர் இவர்தானாம்... அதுபற்றி என்ன சொல்றார் பாருங்க

நைட் ஷிப்ட்

நைட் ஷிப்ட்

பெருமாளுக்கு நைட் ஷிஃப்ட், பகல் நேர வேலை என மாறி மாறி இருக்கும். சம்பவம் நடந்த அன்று பெருமாள் நைட் ஷிஃப்ட் வேலைக்காகச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருந்த பெருமாளின் மனைவி வீரலட்சுமியும் பத்து வயது மகன் போத்திராஜ் என்பவரும் அன்று அதிகாலை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, பிணமாக வீட்டில் கிடந்தனர்.

நகை கொள்ளை

நகை கொள்ளை

வீட்டில் இருந்த 21 சவரன் நகையும் ரொக்கப் பணமும் பீரோவை உடைத்து எடுத்திருப்பது தெரிய வந்த பின் தான் இந்த கொலை வேறு விஷயங்களுக்காக நடக்கவில்லை. இது நகை,பணம் கொள்ளை போனதற்காகவே செய்யப்பட்டிருக்கிறது என்று போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலை

திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலை

யார் கொலை செய்திருப்பார் என்ற சந்தேகம் வந்த போது போலீசார் யோசித்தது என்னவென்றால், பெருமாளின் வீடு திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. அதனால் ஒருவேளை நெடுஞ்சாலைகளில் இந்த பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வந்தது.

பக்கத்து வீட்டு பால்காரன்

பக்கத்து வீட்டு பால்காரன்

இப்படி விசாரணை நடத்திய போது, வீட்டில் கைப்பபற்றப்பட்ட கை ரேகைகள் மற்றும் சம்பவம் நடந்த அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்த பகுதிகளில் உலாவிய செல்போன் டவர் சிக்னல்கள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்ததில் துப்பு துலங்கியது தான் இந்த பக்கத்து வீட்டு பால்காரனின் செல்போன் எண்.

MOST READ: தீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவங்க பண்ற அந்த மசாஜ்தான் காரணமாம்... என்ன மசாஜ் அது?

கொலை மர்மம்

கொலை மர்மம்

பக்கத்து வீட்டில் வசித்து வந்த பால் தொழில் செய்து வரும் வெங்கடேசன் என்னும் இளைஞனை போலீசார் தேடிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தான் இந்த கொலையில் இருந்த மர்மம் விலகியது.

குடும்ப நண்பர்

குடும்ப நண்பர்

இந்த பகுதயில் பால் தொழில் செய்து வந்த வெங்கடேசனுக்கு பெருமாளின் குடும்பம் நன்கு அறிந்த குடும்பம் தான். சிறு வயது முதலே பெருமாளின் வீட்டுக்கு வந்து செல்லும் அளவுக்குப் பழக்கம் இருந்திருக்கிறது. தன்னுடைய சேர்க்கை சரியில்லாததால் பால் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. கடன் தொல்லையால் அவதிப்பட்டும் வந்தான். இந்நிலையில் தான் பெருமான் வீட்டை நோட்டமிடத் தொடங்கியிருக்கிறான் வெங்கடேசன்.

வசதி வாய்ப்பு

வசதி வாய்ப்பு

பெருமாள் மனைவி மகனுடன் வசதியாக வாழ்ந்து வந்ததாலும் அவர் மனைவியி்ன் கழுத்தில் மட்டுமே 10 பவுனுக்குத் தாலிச்சரடு அணிந்திருந்ததாலும் எப்படியாவது இங்கே ஆளில்லாத சமயம் போனால் நிறைய பணமும் நகையும் தேரும் என முடிவு செய்திருக்கிறார் வெங்கடேசன்.

நைட் ஷிப்ட்

நைட் ஷிப்ட்

இப்படி நோட்டம் விட்டுக் கொண்டிருந்த சமயத்தில் சமீபத்தில் பெருமாள் நைட் ஷிஃப்ட் சென்று விட, விடியற்காலையில் வீரலட்சுமி வாசல் தெளித்து கோலம் போடுவதற்கான வெளியே வரும் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் திருடன்.

MOST READ: இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க... இப்படி சரிபண்ணுங்க

சுவர் ஏறிக்குதித்த திருடன்

சுவர் ஏறிக்குதித்த திருடன்

முகமூடி அணிந்து காத்திருந்த வெங்கடேசன் பின்பக்கம் லைட் எரிந்ததை அடுத்து வீரலட்"சுமி வாசல் தெளிக்க தண்ணீர் பிடிப்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். வீட்டின் முன் வாசலுக்கு வீரலட்சுமி வந்ததும் பக்கவாட்டில் உள்ள சுவரில் ஏறிக் குதித்து உள்ளே செல்ல முயற்சித்தான். அப்போது சத்தம் கேட்க வீரலட்சுமி உள்ளே சென்றிருக்கிறார்.

முகமூடி கொள்ளை

முகமூடி கொள்ளை

முகமூடி அணிந்த வெங்கடேசன் வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்துத் தரும்படி வீரலட்சுமியிடம் கேட்டிருக்கிறார். சிறு வயது முதலே வீட்டுக்கு வந்து போவதால் குரலை வைத்தே நீ வெங்கடேசன் தானே என்று கேட்டதும் அதிர்ச்சியடைந்த அவன் வீரலட்சுமியை கழுத்தை நெரித்தும் தலையை சுவரால் அடித்தும் கொல்ல முயற்சித்திருக்கிறான்.இரும்புக் கம்பியாலும் அடித்து கொலை செய்திருக்கிறான்.

மகனும் கொலை

மகனும் கொலை

இந்த சத்தம் கேட்டு எழுந்த வீரலட்சுமியின் பத்து வயது மகன் போத்திராஜ் செல்போனை எடுத்து தன்னுடைய தந்தைக்கு தகவல் சொல்ல முயற்சித்த போது, அருகில் இருந்த அயர்ன் பாக்ஸ் ஒயரால் சிறுவனைக் கட்டி இழுத்து கொடூரமாகக் கொலை செய்திருக்கிறான்.

MOST READ: ஆஸ்துமா எவ்வளவு நாளில் மரணத்தை ஏற்படுத்தும்... எப்படி தடுக்கலாம்?

எப்படி தப்பித்தான்?

எப்படி தப்பித்தான்?

அருகில் இருப்பவர்கள் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அவசர அவசரமாக வீட்டின் முன்பக்க கதவை உள்புறமாகச் சாத்திவிட்டு வீரலட்சுமியின் கழுத்தில் இருந்த தாலிச்சரடு முதல் வீட்டில் இருந்த பணம், நகை எல்லாவற்றையும் கொள்ளையடித்துவட்டு வீட்டின் பின்பற கதவின் வழியே தப்பித்துச் சென்றுவிட்டார். காலையில் பெருமாள் வேலை முடித்து வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிக் கொண்டே இருந்திருக்கிறார் திறக்கவில்லை. இன்னும் தூங்குகிறார்களா என்ற சந்தேகத்தோடு வீட்டின் பின்பக்க கதவு வழியாக வீட்டின் உள்ளே போகும்போதுதான் பேரதிர்ச்சி காத்திருந்தது. தன்னுடைய அன்பு மனைவியும் அருமை மகனும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tiruttani: Home-alone woman, 10-yr-old son killed by milkman

A 40-year-old woman and her 10-year-old son were found murdered at their house in Perumal Thangal Puthur on the Tiruttani-Arakkonam high road on Sunday night. Police suspect that the incident could be a murder for gain, since the woman’s jewels were found missing.
Story first published: Friday, April 12, 2019, 17:59 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more