Latest Updates
-
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க..
தெரியாமகூட இந்த 5 ராசிக்காரங்கள லவ் பண்ணிடாதீங்க... அதுக்குலாம் செட்டே ஆகமாட்டாங்க
யாராவது உங்களை விரும்பினால் உடனே அவர்களிடம் "ஐ லவ் யூ சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள். இப்படி ஒருவருக்கொருவர் தங்கள் காதலை பரிமாறிக் கொள்வீர்கள். ஆனால் ஜோதிடப்படி பார்த்தால் இந்த 5 ராசிக்காரர்களிடம் இருந
காதல் என்ற வார்த்தையை கேட்டாலே போதும் நம் உள்ளமும் உடலும் துள்ளிக் குதிக்கும்.ஆனால் காதலை சொல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. சில நேரங்களில் உங்கள் காதல் வெற்றி அடையும். சில நேரங்களில் தோல்வி அடையும். யாராவது உங்களை விரும்பினால் உடனே அவர்களிடம் "ஐ லவ் யூ சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள். இப்படி ஒருவருக்கொருவர் தங்கள் காதலை பரிமாறிக் கொள்வீர்கள்.

ஆனால் ஜோதிடப்படி பார்த்தால் இந்த 5 ராசிக்காரர்களிடம் இருந்து" ஐ லவ் யூ " என்ற வார்த்தையை கேட்பது கடினம் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். இவர்கள் அவ்வளவு சாமானியமாக ஐ லவ் யூ சொல்லமாட்டார்களாம். நீங்களும் இந்த பட்டியல்ல இருக்கீங்களா கொஞ்சம் பாருங்க.

மிதுனம்
இவர்கள் காதலை டெஸ்ட் செய்யாமல் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். யாராவது புதிய நபர்களை சந்தித்தால் கூட தங்களுடைய பரிசோதனைகளை நிகழ்த்தியே தங்களுக்குரிய பார்ட்னரை தேர்ந்தெடுப்பார்கள். இவர்களுடன் பழக வேண்டும் என்றால் சில நிபந்தனைகளை முன்கூட்டியே வைத்து இருப்பார்கள். அதை கண்டறிவதும் அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது.அப்படியே காதலித்தாலும் இவர்கள் வாயிலிருந்து காதல் என்ற வார்த்தையே ஆபூர்வமாகத்தான் வரும்.

கன்னி
இவர்களுக்கு எதுவும் பெர்ஃபெக்ட்டாக இருக்கணும். காதலும் அப்படித்தான். பரிபூரணமாக வரும் வரைக்கும் எதையுமே வெளிப்படுத்தமாட்டார்கள். காதலில் மனப்பூர்வமாக ஈடுபடும் வரைக்கும் இவர்களிடமிருந்து நீங்கள் "ஐ லவ் யூ" பெறுவது கடினமே.

விருச்சிகம்
இவர்கள் எளிதாக மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சூழ்நிலையை புரிந்து கொண்டு தங்கள் வழிகளில் செல்வதே இவர்களின் வாடிக்கையாக இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த ராசிக்காரர் காதல் விஷயங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட ஒத்துழைக்க மாட்டார். அதையும் தாண்டி இவரைக் காதலித்தால் பிறகு தலையில் துண்டு போட்டுக் கொண்டு உட்கார வேண்டியது நீங்களாகத் தான் இருக்கும்.

மகரம்
இவர்கள் எப்பொழுதும் பிராக்டிகலான மனிதராக இருப்பார்கள். லட்சியாவாதியாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு எப்பொழுதும் தொழில் தொழில் தான். ஆனால் இவர்களின் தோற்றம், பேச்சு, வேலையால் எளிதாக மற்றவர்களை கவர்ந்து விடுவார்கள். எந்த வேலையை செய்தாலும் இதயத்திலிருந்து செய்வார்கள். ஆனால் காதல் உறவில் ரெம்ப ஈடுபட மாட்டார்கள். இவர்களுக்கு எப்போதுமே தொழில் தான் கண்ணு.

கும்பம்
இவர்கள் எப்பொழுதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எனவே அவ்வளவு சீக்கிரம் காதல் உறவில் ஈடுபட மாட்டார்கள். எனவே இவர்கள் ஐ லவ் யூ சொல்வது கடினம். இப்படி அன்பான உறவில் விழுந்தால் எங்கே தங்கள் சுதந்திரம் பரிபோகி விடுமோ என்று நினைப்பார்கள். எனவே இவர்களுக்கு காதல் சரிபட்டு வராது.



Click it and Unblock the Notifications