For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற விவேகானந்தர் கூறும் எளிய ரகசியங்கள் இதுதான்...!

ஆன்மீகம் மட்டுமின்றி கல்வியிலும் சிறந்தவராய் விளங்கினார் விவேகானந்தர். ஒரு நல்ல தலைவராக இருக்கவும், வெற்றிகரமான வாழக்கையை உருவாக்கவும் விவேகானந்தர் ஐந்து விதிகளை உருவாக்கினார்.

|

இந்தியாவில் ஆன்மீகத்தில் ஒழுக்கமாகவும், சிறந்தவராகவும் விளங்கிய வெகுசிலரில் விவேகானந்தர் மிகவும் முக்கியமானவர் ஆவார். இவரது ஆன்மீக சிந்தனைகளும், சொற்பொழிவுகளும் பலருடைய வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கியது. வாழ்க்கையில் தன்னலமற்ற மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும் என்று அவர் அனைவர்க்கும் போதித்தார்.

Secrets by Vivekananda to lead a successful life

ஆன்மீகம் மட்டுமின்றி கல்வியிலும் சிறந்தவராய் விளங்கினார் விவேகானந்தர். ஒரு நல்ல தலைவராக இருக்கவும், வெற்றிகரமான வாழக்கையை உருவாக்கவும் விவேகானந்தர் ஐந்து விதிகளை உருவாக்கினார். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு விவேகானந்தர் கூறிய ஐந்து ரகசியங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் விதி - சரியான பார்வையில் அனைத்தையும் பார்க்க வேண்டும்

முதல் விதி - சரியான பார்வையில் அனைத்தையும் பார்க்க வேண்டும்

உங்கள் வாழ்க்கையின் கண்ணோட்டத்தை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அனைத்து செயல்களையும் நேர்மறையாக பார்ப்பதும், எதிர்மறையாக பார்ப்பதும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. நாணயத்தை போல அனைத்து சூழ்நிலைகளிலும் தடங்கல்களும் இருக்கும், வாய்ப்புகளும் இருக்கும். நாம் எதை பார்க்கிறோம் என்பது நமது கைகளில்தான் உள்ளது. வாய்ப்புகளை பார்த்தால் வாழ்க்கையில் முன்னேறலாம், தடங்கல்களை பார்த்தால் நேரம் மட்டுமே வீணாகும்.

தர்க்கமாக சிந்தியுங்கள்

தர்க்கமாக சிந்தியுங்கள்

நாம் பார்க்கும் மாற்று செய்யும் அனைத்து செயல்களிலும் ஒரு லாஜிக் இருக்கிறது. சொல்லப்போனால் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்திற்கு பின்னாலும் ஒரு பகுத்தறிவும், தர்க்கமும் இருக்கிறது. நீங்கள் தீமையினால் பாதிக்கப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. அதை புறந்தள்ளி விட்டு நல்லதை நோக்கி உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

MOST READ:கடல் உணவுகள் சாப்பிடுவது மாரடைப்பை ஏற்படுத்தும் என்பது உண்மையா?

இரண்டாவது விதி - அனைத்தும் சாத்தியமே

இரண்டாவது விதி - அனைத்தும் சாத்தியமே

நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று என்னவெனில், இந்த உலகத்தில் மிகப்பெரிய பாவம் எதுவெனில் என்னால் செய்ய முடியாது என்று ஒப்புக்கொள்வதுதான். இதன் அர்த்தம் என்னவெனில் உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லை நீங்கள் வாழும் வாழ்க்கை பயனற்றது என்பதாகும். உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் பலத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தையும் போல நீங்களும் தனித்துவமானவர்கள்தான்.

மூன்றாவது விதி - மகிழ்ச்சியை பரப்புங்கள் நீங்கள் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள்

மூன்றாவது விதி - மகிழ்ச்சியை பரப்புங்கள் நீங்கள் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள்

பெற்றுக்கொள்வதை விட கொடுப்பதில் அதிக மகிழ்ச்சி இருக்கிறது.மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருங்கள். அவ்வாறு இருப்பது கடவுள் உங்களுக்கு கொடுத்த வரமாகும். உதவி தேவைப்படுபவர்களுக்கு அந்த தருணத்தில் நீங்கள் செய்யும் உதவி நீங்கள் எதிர்பார்க்காத மகிழ்ச்சியை உங்களுக்கு கொடுக்கும்.

நான்காவது விதி - உங்கள் மனசாட்சி சொல்வதை கேளுங்கள்

நான்காவது விதி - உங்கள் மனசாட்சி சொல்வதை கேளுங்கள்

உங்கள் மனசாட்சி சொல்வதை கேளுங்கள். அது கூறும் முடிவு எப்பொழுதும் தவறாக இருக்காது. நீங்கள் நினைத்த மாதிரி எந்த காரியமும் நடக்கவில்லை என்றால் உங்கள் மனசாட்சி கூறும் வழியில் செல்லுங்கள். உங்கள் மனசாட்சி எப்பொழுதும் உங்களிடம் பொய் கூறாது. அது கூறும் பதிலில் எப்பொழுதும் நேர்மையும், உண்மையும் இருக்கும்.

MOST READ:ஆஞ்சநேயருக்கு சிவபெருமான் வழங்கிய மகிமை வாய்ந்த வரம் என்ன தெரியுமா?

ஐந்தாவது விதி - அன்புதான் அனைத்தும்

ஐந்தாவது விதி - அன்புதான் அனைத்தும்

அன்புதான் உலகின் மிகவும் சக்திவாய்ந்த உணர்வாகும். உங்கள் வாழ்க்கையின் முழுமையான மகிழ்ச்சியை அன்பு ஒன்றினால் மட்டுமே கொடுக்க முடியும். அன்பு நிபந்தனையற்றது, அதில் பொய் எதுவும் இருக்காது. நீங்கள் வாழ்வதற்கு மூச்சுக்காத்து எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு அன்பும் அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life வாழ்க்கை
English summary

Secrets by Vivekananda to lead a successful life

Check out the secret of success as mentioned by Swami Vivekananda.
Desktop Bottom Promotion