For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்லைன்ல வீடு வாங்க ஆறேகால் லட்சம் செலவு பண்ணி கடைசியா கிடைச்சது அல்வா தான்...

|

இணையதளம் மூலம் நடைபெற்ற ஏலத்தில் அமெரிக்காவில் வீடு வாங்க பணம் கட்டியவருக்கு போலி நிறுவனம் அல்வா கொடுத்துள்ளது. எல்லாம் உண்மை என்பதுபோல புகைப்படங்கள், மதிப்பீடுகளுடன் சித்திரித்து வரும் விளம்பரங்களில் பல ஏமாற்றுவேலைதான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃப்ளோரிடாவில் வீடு

ஃப்ளோரிடாவில் வீடு

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்வில் ஹால்னஸ். ஃப்ளோரிடாவின் தெற்குப் பகுதியில் ஸ்பிரிங் லேக் கம்யூனிட்டி என்ற இடத்தில் 'வில்லா' வகை பெரிய வீடு ஏலத்திற்கு வருவதாக அவர் இணையதளம் மூலம் அறிந்தார். இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருந்த வீட்டின் புகைப்படங்கள் அவரை ஏதேதோ கனவு காண வைத்தன.

MOST READ: இந்த தானியத்தை சுண்டல் மாதிரி சாப்பிட்டா இவ்ளோ வியாதியும் உங்க நெருங்கவே முடியாதாம்?

எங்கு நடந்தது?

எங்கு நடந்தது?

தெற்கு ஃப்ளோரிடாவில் இருப்பதாக கூறப்பட்ட அவ்வளவு அழகான வீட்டுக்காக அது வரை ஏலத்தில் கலந்த அனுபவம் இல்லாத கெர்வில் முதன்முறையாக ஏலத்தில் பங்கு பெற்றார். ஏலத்தொகையாக 9,100 டாலர் (ஏறத்தாழ ஆறே கால் லட்சம் ரூபாய்) அவர் கேட்டார். அவர் கேட்ட தொகைக்கு ஏலம் முடிந்ததில் ஜாக்பாட் அடித்ததுபோன்று சந்தோஷப்பட்டார் கெர்வில்.

கிடைத்தது வில்லா அல்ல; அல்வாதான்

கிடைத்தது வில்லா அல்ல; அல்வாதான்

கெர்விலின் ஏலத்தொகை ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஏலத்திற்கான இடம் வழங்கப்பட்டபோது தான் ஏமாற்றப்பட்டது அவருக்குத் தெரிய வந்தது. 'வில்லா' வகை ஆடம்பர பங்களா என்று அவர் நினைத்து ஏலம் கேட்டது, இரண்டு வில்லாக்களின் நடுவே சுற்றுச்சுவர் இருக்கும் நிலப்பகுதிதான் என்பதும், போலியான வீட்டுப் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அவரை ஏமாற்றியுள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

3,500 ரூபாய்

3,500 ரூபாய்

நிலத்தின் பெறுமதியை மதிப்பிடும் அப்பகுதியின் வரி அலுவலகத்தின் தளத்தில், கெர்விலுக்கு கொடுக்கப்பட்ட நிலத்திற்கு எந்தக் கட்டுமான பெறுமதியும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த நிலத்தின் மதிப்பு 9,100 டாலர் அல்ல; ஐம்பது டாலர் (ஏறக்குறைய 3,500 ரூபாய்) தான் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார் கெர்வில்.

போனது போனதுதான்!

MOST READ: இந்த குழந்தைகளுக்கு இவங்க ரெண்டுபேரும் தான் அப்பா அம்மாவாம்... ரெண்டுபேரும் பால் கொடுக்கலாமா?

புத்தி வந்தா சரி

புத்தி வந்தா சரி

அம்மாகாணத்தின் (கவுண்டி) சட்டப்படி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள முடியாததால், தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துள்ளார் கெர்வில் ஹால்னஸ். அவரால் எதுவும் செய்யமுடியாது எனவும் இத்துறையை சேர்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏலம் கேட்கப்போய் இருப்பதையும் இழந்த கெர்விலை பார்த்தாவது மற்றவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Man Pays $9,100 for a Florida Villa, but Actually Bought a 30 CM-Wide Strip of Lawn Instead

Everything that we see online cannot be true. Be it the blind date or buying stuff online, anything can out to be fake. Though things seem to be promising and real, they can turn out to be fraudulent.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more