For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முருகன் ஏன் ஆறு தலைகளுடன் இருக்கிறார் தெரியுமா? அதன் பின்னால் இருக்கும் ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க...

முருகனுடைய ஆறுபடை வீடு என்பது தென்னிந்தியாவின் முக்கியமான புனித ஸ்தலங்களாகும். முருகனை கார்த்திகேயன், சுவாமிநாதன், கந்தன் என்று பல பெயர்களில் மக்கள் வழிபடுகின்றனர்.

|

இந்தியா முழுவதும் வணங்கப்படும் முக்கியமான கடவுள்களில் ஒருவர் என்றால் அது விநாயகர்தான். ஆனால் அவருடைய சகோதரனான முருகன் மட்டும் ஏன் தென்னிந்தியாவில் மட்டும் வணங்கப்படுகிறார் என்பது என்றுமே தீராத குழப்பமாகும். வடஇந்தியாவில் எப்படியோ ஆனால் தென்னிந்தியாவை பொறுத்தவரையில் முருகன் மிகவும் முக்கியமான கடவுள் ஆவார்.

Lesser known facts about Kartikeya

முருகனுடைய ஆறுபடை வீடு என்பது தென்னிந்தியாவின் முக்கியமான புனித ஸ்தலங்களாகும். முருகனை கார்த்திகேயன், சுவாமிநாதன், கந்தன் என்று பல பெயர்களில் மக்கள் வழிபடுகின்றனர். தேவர்களின் படை தலைவராகவும் முருகன்தான் இருக்கிறார். இந்த பதிவில் முருகன் பற்றி உங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போர் கடவுள்

போர் கடவுள்

விநாயகர் ஒரு புறம் அமைதியான, சாந்தமான கடவுளாக இருக்கும்போது மறுபுறத்தில் முருகன் போர் கடவுளாகவும் வீரத்தின் உறைவிடமாகவும் இருக்கிறார். முருகன் படைக்கப்பட்டதன் நோக்கமே அதுதான். தேவர்களின் படை தலைவராக இருந்து பல அசுரர்களை வதம் புரிந்துள்ளார் முருகன். ஈசனின் புதல்வர்களில் இவர்தான் மிகவும் கோபக்காரர் ஆவார்.

அழகிய கடவுள்

அழகிய கடவுள்

" அழகென்ற சொல்லுக்கு முருகா " என்று கூறுவார்கள். அதன்படி முருகன் மற்ற அனைத்து கடவுள்களை விடவும் அழகில் சிறந்து விளங்கியதாகவும், அவரின் அழகு அனைத்து தேவர்களையும் பொறாமைப்படும் அளவிற்க்கு இருந்ததாகவும் கந்தபுராணம் கூறுகிறது. அவரின் வாளை விட அவரின் அழகே பலரையும் கொன்றுவிடுமாம்.

மயில் மற்றும் பாம்பு

மயில் மற்றும் பாம்பு

இது மிகவும் சுவாரஸ்யமானதாகும். முருகனின் உருவப்படத்தை நன்கு கவனித்தால் அதில் அவர் மயிலின் மேல் அமர்ந்திருப்பார். அந்த மயில் பாம்பொன்றை மிதித்து கொண்டிருக்கும். இதில் பாம்பு நம்மிடம் இருக்கும் ஈகோவை குறிப்பதாகும். முருகன் மிகவும் புத்திசாலியான கடவுள் ஆவார் எனவே அவர் தன் ஈகோவை விட்டுவிட விரும்பவில்லை. ஈகோவை ஒருபோதும் விட்டுவிட கூடாது கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். அவர்தான் முழுமையான மனிதனாக இருக்க முடியும். அதைத்தான் முருகன் தன் உருவத்தின் மூலம் உணர்த்துகிறார்.

MOST READ: இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு நற்பெயரும், புகழும் எப்பொழுதும் கிடைக்காததாம் தெரியுமா?

ஆறு தலைகள்

ஆறு தலைகள்

புராணங்களில் கூறியுள்ளபடி முருகனுக்கு மொத்தம் ஆறு தலைகள் உள்ளது. இதற்கு பின்னால் பல கதைகள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று முருகன் படைக்கப்பட்டதே போருக்காகத்தான். எனவே இந்த ஆறு தலைகள் அவர் அனைத்து திசைகளில் இருந்து வரும் எதிரிகளையும் சமாளிக்க உதவும். ஆறு தலைகள் மட்டுமல்ல இவரின் 12 கைகள் மற்றும் 12 கால்கள் போரில் இவரை எவரும் வெல்லமுடியாதவராக மாற்றுகிறது.

பிற கதைகள்

பிற கதைகள்

மற்றொரு புராண குறிப்பின் படி, முருகனுக்கு எப்படி ஆறு தலைகள் வந்தது என்று கூறும்போது உண்மையில் மொத்தம் ஆறு குழந்தைகள்தான் பிறந்தார்கள். அவர்களை பார்த்த பார்வதி தேவி அன்புடனும், ஆசையுடனும் அவர்களை அள்ளி அணைத்து கொண்டார். அப்போது அனைத்து குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்து ஆறு தலைகளுடன் ஒரே குழந்தையாக மாறியதாக கூறப்படுகிறது.

பிரம்ம சாஸ்தா

பிரம்ம சாஸ்தா

ஒருமுறை பிரம்ம தேவர் வேடங்கல் செய்த ஒரு தவறுக்காக முருகன் அவரை சிறைபிடித்தார். அதன்பின் அதற்கான சரியான விளக்கத்தை சிவபெருமானுக்கு போதித்தார். இதனால் அவர் பிரம்ம சாஸ்தா என்னும் பெயர் பெற்றார்.

முருகனின் மனைவிகள்

முருகனின் மனைவிகள்

முருகனுக்கு இரண்டு மனைவிகள் என்று நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதில் தேவயானை தேவர்களின் அதிபதி இந்திரனின் மகள் ஆவார். வள்ளி குறவர் இனத்தை சேர்ந்த பெண் ஆவார். கடவுள்களிலேயே முதன் முதலாக சாதி மாறி காதல் திருமணம் செய்த புரட்சி கடவுள் முருகன்தான்.

MOST READ: முட்டாள்தனமான முடிவெடுப்பதில் இந்த ராசிக்காரர்களை அடிச்சிக்க ஆளே இல்லையாம் தெரியுமா?

முருகனின் உருவம்

முருகனின் உருவம்

முருகன் எப்பொழுதும் தன் ஒரு கையில் வேலை வைத்திருப்பார் மற்றொரு கையில் தன் பக்தர்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்கி கொண்டிருப்பார். இவர் அமர்ந்திருக்கும் மயில் பேராசை மற்றும் தீயபழக்கங்களை அழிக்கும் ஒன்றாகும். மொத்தத்தில் முழுமையான கடவுள் என்றால் அது முருகன்தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lesser known facts about Kartikeya

Check out the some unknown facts about Lord Karthikeye.
Desktop Bottom Promotion