For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 4 விஷயங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியாது என்கிறார் சாணக்கியர்..

இந்தியாவின் முக்கியமான அறிஞர்களில் ஒருவர் என்றால் அது சாணக்கியர்தான். வெற்றிகரமான வாழ்க்கை மட்டுமின்றி மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் சாணக்கியர் பல அறிவுரைகளை கூறியுள்ளார்.

|

இந்தியாவின் முக்கியமான அறிஞர்களில் ஒருவர் என்றால் அது சாணக்கியர்தான். பொருளாதாரம், அரசியல், தத்துவயியல் என பல கலைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்த சாணக்கியரை மக்கள் கௌடில்யர் அல்லது விஷ்ணு குப்தர் என்று அழைத்தனர். இவர் எழுதிய பல நூல்களில் முக்கியமானவை அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியுமாகும்.

Learn these secrets of Chanakya for a happier life

இவரின் நூல்களில் இவர் கூறியிருக்கும் கருத்துக்கள் அந்த காலம் மட்டுமின்றி எக்காலத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது. இன்றும் வாழ்க்கையில் வெற்றிபெற இவரின் கருத்துக்களை பலரும் பரிந்துரைப்பதை பார்க்கலாம். வெற்றிகரமான வாழ்க்கை மட்டுமின்றி மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் சாணக்கியர் பல அறிவுரைகளை கூறியுள்ளார். இந்த பதிவில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சாணக்கியர் கூறும் ரகசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரகசியங்கள்

ரகசியங்கள்

அனைத்து மனிதர்களுக்குமே ரகசியங்கள் என்பது இருக்கும். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டுமெனில் உங்கள் ரகசியங்கள் உங்களுக்குள்ளேயே இருக்க வேண்டும். எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் உங்கள் ரகசியங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அது உங்கள் மகிழ்ச்சியை கேள்விக்குறியாக்கிவிடும். நீங்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள கூடாத ரகசியங்கள் என்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

பண நஷ்டம்

பண நஷ்டம்

மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள கூடாதென சாணக்கியர் கூறும் முதல் ரகசியம் உங்களின் பண இழப்புகளை பற்றியதுதான். நீங்கள் நஷ்டத்தில் இருந்தால் அதனை ஒருபோதும் மற்றவர்களிடம் கூறாதீர்கள், உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் கஷ்டத்தை கேட்பவர்கள் அதனை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுக்கமாட்டார்கள், அவர்கள் அக்கறை காட்டுவது போல தெரிந்தாலும் அது நடிப்பாகத்தான் இருக்கும்.

MOST READ:புளிய மரத்தில் பேய் இருக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?

ஏழ்மை

ஏழ்மை

ஏழ்மை என்பது இந்த சமூகத்தில் அங்கீகரிக்கபடாத ஒன்றாகும். ஏழைகளும் சரி, ஏழ்மையும் சரி சமூகத்தில் பெரும்பாலானோரால் மதிக்கப்படுவதில்லை. எனவே உங்கள் ஏழ்மையை எப்போதும் உங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களிடம் கூறவேண்டும் என்றோ பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றோ அவசியமோ இல்லை.

தனிப்பட்ட பிரச்சினைகள்

தனிப்பட்ட பிரச்சினைகள்

நீங்கள் மற்றவர்களிடம் கூறக்கூடாத இரண்டாவது விஷயம் உங்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் ஆகும். நீங்கள் உங்கள் பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது அவர்கள் உங்களின் முன்புறம் அவர்கள் உங்களுக்கு ஆறுதல் கூறினாலும் பின்புறம் உங்களை பற்றி மற்றவர்களிடம் கூறி கேலிதான் செய்வார்கள். உங்கள் ரகசியம் உங்களிடமே ரகசியமாக இல்லையெனில் மற்றவர்களிடம் எப்படி ரகசியமாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.

உங்கள் மனைவியின் குணம்

உங்கள் மனைவியின் குணம்

பிறரிடம் பகிர்ந்து கொள்ள கூடாத மூன்றாவது விஷயம் உங்கள் மனைவியின் குணத்தை பற்றியதாகும். இதனை ரகசியமாக வைத்து கொள்பவர்கள் புத்திசாலிகளாக கருதப்படுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கியரின் கூற்றுப்படி சம்பந்தமே இல்லாமல் மனைவியை பற்றி மற்றவர்களிடம் பேசுபவர்கள் அவர்கள் கூற வேண்டாம் என்று நினைக்கும் செய்திகளை கூட கூறிவிட வாய்ப்புள்ளது. இது அவர்கள் வாழ்வில் பல புயல்களை கிளப்பக்கூடும்.

MOST READ:ஹிட்லருக்கு போர் ஏவுகணை தயாரிக்க வேதங்கள் கொண்டு உதவிய தென்னிந்திய அறிஞர் யார் தெரியுமா?

அவமானங்கள்

அவமானங்கள்

நீங்கள் ரகசியமாக வைத்து கொள்ள வேண்டிய நாளாவது விஷயம் உங்களை விட தகுதியில் குறைந்தவர்கள் உங்களை அவமானப்படுத்தினால் அதனை ஒருபோதும் மற்றவர்களிடம் கூறக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். இதுபோன்ற சம்பவங்களை மற்றவர்களிடம் கூறுவது அவர்கள் உங்களை கேலி செய்ய நீங்களே வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பது போன்றதாகும். இது உங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன் உங்களின் தன்னம்பிக்கையையும் சிதைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Learn these secrets of Chanakya for a happier life

According to Chanakya if you share these things with others you will lose your happy life.
Story first published: Saturday, April 27, 2019, 11:34 [IST]
Desktop Bottom Promotion