For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு கண் திருஷ்டி இருக்கானு எப்படி தெரிஞ்சிக்கறது? எப்படி நீங்களே சரிசெஞ்சிக்கலாம்?

நம் வாழ்க்கை என்பது நல்லது கெட்டது என்ற இரண்டு விஷயங்களும் கலந்த ஒன்றாகும். நம் வாழ்வில் நடக்கும் வெற்றிகளும் சரி தோல்விகளும் சரி நம்முள் எழும் நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களைக் கொண்டு உள்ளது.

By Mahibala
|

நம் வாழ்க்கை என்பது நல்லது கெட்டது என்ற இரண்டு விஷயங்களும் கலந்த ஒன்றாகும். நம் வாழ்வில் நடக்கும் வெற்றிகளும் சரி தோல்விகளும் சரி நம்முள் எழும் நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களைக் கொண்டு உள்ளது.

How To Get Rid From Thristi

இந்த மாதிரி நமது உடல் நிலை, தொழில், குடும்பம், பொருளாதாரம் இவற்றை பாதிக்கும் ஒரு விஷயமாக இருப்பது தான் இந்த எதிர்மறை எண்ணங்கள். இந்த எதிர்மறை எண்ணங்களைத் தான் நம் முன்னோர்கள் கண் திருஷ்டி என்று நடைமுறைப்படுத்தி வந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண் திருஷ்டி

கண் திருஷ்டி

திதாக கல்யாணம் ஆன திருமண தம்பதியினரிலிருந்து புதிதாக தொழில் தொடங்கும் வரை அவர்கள் கண் திருஷ்டியை கழிக்க நிறைய முறைகளையும் பின்பற்றி வந்தனர். இதை மேற்போக்காக பார்க்க மூட நம்பிக்கையாக இருந்தாலும் இதன் பின்னாடி சில அறிவியல் அற்புதங்களும் நிரம்பி தான் உள்ளது. சில பொருட்களுக்கு இந்த எதிர்மறை சக்தியை இழக்கும் ஆற்றல் உள்ளது. அப்படிப்பட்ட சில கெட்ட சக்தியை விரட்டும் சில வழிமுறைகளைப் பற்றி இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.

MOST READ: முகத்துல பரு, மருனு எதுவும் வராம பளிச்சினு இருக்கணுமா? இந்த கத்திரிக்காய இப்படி தேய்ங்க...

மந்திரம்

மந்திரம்

நீங்கள் தினமும் அனுமான் சாலிகா மந்திரம் மற்றும் காயத்ரி மந்திரத்தை ஓதி வந்தால் தீய வினைகள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் துளிர்க்கும்.

படிகமும் உப்பு

படிகமும் உப்பு

இது ஒரு பாரம்பரிய முறை. இதில் கொஞ்சம் ஆலுமை (படிக உப்பு) கையில் எடுத்து கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவரின் தலையை சுற்றி 7 முறை இடது பக்கமாக சுற்ற வேண்டும். பிறகு இந்த ஆலுமை ஒரு சூடான தவாவில் வைக்க வேண்டும். இது அப்படியே உருகி நீர்மமாக மாறி பிறகு திட நிலைக்கு சென்று விடும். இந்த திட படிகத்தை ரோட்டின் தெற்கு திசையில் வீசி விட வேண்டும்.

இதை செவ்வாய் அல்லது சனிக்கிழமை செய்ய வேண்டும். வீசி விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டை நோக்கி வந்து விட வேண்டும். உப்பு நேர்மறை ஆற்றலை கொடுக்கும். எதிர்றை ஆற்றலை உள்ளிழுத்து, வீட்டை விட்டு அகற்றிவிடும். அதேபோல் நீரில் எளிதாகக் கரையும். அந்த உப்பை போல உன்னை சுற்றியுள்ள கெட்ட சக்தியும் கரைய வேண்டும் என்பதற்காகத் தான் உப்பு தேர்ந்தெடுக்கப்படுகிறது.

MOST READ: திருமால் ஒரே ஒரு பெண் அவதாரம் மட்டும் ஏன் எடுத்தார்? அந்த சுவாரஸ்ய கதை தெரிஞ்சிக்கணுமா?

எருக்கம் தாவரம்

எருக்கம் தாவரம்

வெள்ளை எருக்குக்கு எதிர்மறை ஆற்றலை இழுக்கும் சக்தி உள்ளது. எனவே உங்கள் வீட்டு வாசலில் வெள்ளை எருக்கை வைக்கலாம். இது உங்கள் வீட்டை கண் திருஷ்டியிலிருந்து பாதுகாக்கும்.

குங்குலியம், கற்பூரம் எரித்தல்

குங்குலியம், கற்பூரம் எரித்தல்

சாம்பிராணி, குங்குலியம் மற்றும் கற்பூரம் இவற்றை சேர்த்து வீடு மற்றும் தொழில் புரியும் இடங்களின் மூலை முடுக்குகளிலும் புகை போட்டு வந்தால் கெட்ட சக்திகள் உங்களை அண்டாது.

MOST READ: இந்த உலகக் கோப்பை போட்டியில் மீண்டும் சச்சின்... அவரு பிளான் என்ன தெரியுமா?

சுத்தி போடுதல்

சுத்தி போடுதல்

சிவப்பு மிளகாய், கடுகு, உப்பு சேர்த்து கண் திருஷ்டி பட்டவருக்கு 7 முறை இடப்பக்கமாக சுற்றி அதை எரிக்க வேண்டும். அதிலிருந்து நெடியுடைய நறுமணம் வரவில்லை என்றால் அந்த நபர் கண் திருஷ்யால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Rid From Thristi

A careful look into the world brings us to the conclusion that with the good and benevolent there coexist the evil and the malevolent.
Story first published: Saturday, June 1, 2019, 16:28 [IST]
Desktop Bottom Promotion