For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விலைமகளிடம் இருந்து விவேகானந்தர் பயத்தை விரட்டும் வழியை எப்படி கற்றுக்கொண்டார் தெரியுமா?

மிகச்சிறந்த சந்நியாசியான விவேகானந்தர் அன்பு, பொறுமை, மற்றவர்களை எப்படி புரிந்து கொள்வது, பயத்தை எப்படி விரட்டுவது என்று அனைவருக்கும் போதித்தார்.

|

இந்தியாவின் முக்கியமான நபர்கள் யார் என்று ஒரு ஆய்வு நடத்தினால் அதில் சுவாமி விவேகானந்தரின் பெயர் நிச்சயம் இடம்பெறும். இளம்வயதிலேயே துறவறம் பூண்டு அவர் வளர்த்த ஆன்மீக சிந்தனைகளும், கருத்துக்களும் காலம் உள்ள வரை அழியாததாகும்.

How a courtesan taught swami Vivekananda sainthood

மிகச்சிறந்த சந்நியாசியான விவேகானந்தர் அன்பு, பொறுமை, மற்றவர்களை எப்படி புரிந்து கொள்வது, பயத்தை எப்படி விரட்டுவது என்று அனைவருக்கும் போதித்தார். ஆனால் வாழ்க்கையின் பயம் மற்றும் காதல் பற்றிய மிகப்பெரிய பாடத்தை அவர் விலைமகள் ஒருவரிடம் இருந்து கற்றுக்கொண்டார் என்பது தெரியுமா உங்களுக்கு? ஓஷோ அவர்கள் விவேகானந்தர் பற்றி கூறிய அந்த சம்பவத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜெய்ப்பூர் விஜயம்

ஜெய்ப்பூர் விஜயம்

விவேகானந்தர் அமெரிக்காவில் சொற்பொழிவு நிகழ்த்தி உலகப்புகழ் பெற்றார். ஆனால் அதற்கு முன்னரே அவர் இந்தியாவில் மிகவும் பிரபலமானவராக இருந்தார். அப்போது அவர் அமெரிக்கா செல்வதற்கு முன் ஜெய்ப்பூரில் சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

திருவிழா

திருவிழா

ஜெய்ப்பூரின் மன்னர் விவேகானந்தரின் மிகப்பெரிய ரசிகனாக இருந்தார், அவரின் வருகை திருவிழாவாக அங்கு கொண்டாடப்பட்டது. ராஜநியதியின் படி அவர் அதற்காக பல நடன கலைஞர்களை அழைத்திருந்தார், அந்த குழுவில் பிரபலமான விலைமகள் ஒருவரும் இருந்தார்.

தவறை உணர்தல்

தவறை உணர்தல்

அந்த விலைமகளை அழைத்த பின்னர்தான் மன்னர் தன் தவறை உணர்ந்தார். புகழ்பெற்ற சந்நியாசி ஒருவரை கௌரவிக்கும் நிகழ்ச்சிக்கு தாசியை அழைத்து அவரின் புனிதத்தை கெடுத்துவிடும் என்று அவர் எண்ணினார். ஆனால் தாமதமாகவே இது அவருக்கு புரிந்தது, அதற்குள் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அந்த தாசியும் அரண்மனைக்கு வந்துவிட்டார்.

முழுமையான சந்நியாசி

முழுமையான சந்நியாசி

விவேகானந்தர் முழுமையான சந்நியாசியாக இல்லாததால் இந்த செயல் அவரை கடுமையாக பாதித்தது. ஏனெனில் ஒரு முழுமையான சந்நியாசிக்கு இது பெரிய விஷயமாகவே தெரியாது.

MOST READ: கருட புராணத்தின் படி இறந்தவர்களின் ஆன்மா எத்தனை நாட்கள் அவர்கள் வீட்டை சுற்றியே இருக்கும் தெரியுமா?

அறைக்குள் பூட்டிக்கொண்டார்

அறைக்குள் பூட்டிக்கொண்டார்

விவேகானந்தர் தனது பாலியல் ஆசைகளை கட்டுப்படுத்தி பரிபூரண சந்நியாசியாக மாறிக்கொண்டிருப்பதால் அவர் தன்னை ஒரு அறையில் பூட்டிக்கொண்டு வெளியே வர மறுத்தார். மன்னர் ஓடிவந்து விவேகானந்தரிடம் மன்னிப்பு கேட்டார். தான் இதற்கு முன் எந்த சந்நியாசியையும் விருந்தினராக அழைத்ததில்லை அதனால் அவர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்று தெரியாமல் போய்விட்டது என்று கூறினார்.

புகழ்மிக்க தாசி

புகழ்மிக்க தாசி

அது மட்டுமின்றி, விவேகானந்தரை வெளியே வரும்படி கெஞ்சினார். ஏனெனில் வந்திருப்பது நாடெங்கும் புகழ்பெற்ற தாசி அவரை இப்படி வெளியே அனுப்புவது அவரை அவமதிக்கும் செயல் என்றும் கூறினார். எனவே விவேகானந்தரை வெளியே வரும்படியும், தாசியை அவமானப்படுத்த வேண்டாம் எனவும் மன்னர் கேட்டுக்கொண்டார். ஆனால் விவேகானந்தர் கோபமாக அதற்கு மறுத்துவிட்டார்.

தாசியின் பாடல்

தாசியின் பாடல்

விவேகானந்தரின் செயலை பார்த்த தாசி அவருக்காக பாடல் ஒன்றை பாடினார். அந்த பாடல் உணர்த்தியது என்னவெனில் " நான் உங்களுக்கு தகுதியானவள் அல்ல என அறிவேன் ஆனால் நீங்கள் கொஞ்சம் கருணையுடன் நடந்திருக்கலாம். நான் அசுத்தமானவள்தான் அதை நான் அறிவேன். அதற்காக நீங்கள் என்னை விரோதியாக நினைக்க வேண்டாம். நான் பாவிதான், ஆனால் நீங்களோ சந்நியாசி, என்னை கண்டு ஏன் அஞ்சுகிறீர்கள் " என்று பாடினார்.

முதிர்ச்சியின்மை

முதிர்ச்சியின்மை

இதனை கேட்ட விவேகானந்தர் திடீரென தன் தவறு என்ன என்பதை உணர்ந்தார். தாசியை சந்திக்க நான் ஏன் பயப்படவேண்டும்? அதில் என்ன தவறு இருக்கிறது? நான் அவ்வளவு முதிர்ச்சியற்றவனாக இருக்கிறேனா? என்ற கேள்விகள் அவர் மனதில் எழுந்தது. தன் மனதில் இருக்கும் பயம் என்ன என்பதை அவர் உணர்ந்தார்.

MOST READ: பெண்களின் இந்த செயல்கள் அவர்கள் குடும்பத்தில் நிரந்தர வறுமையை ஏற்படுத்துமாம் தெரியுமா?

வெளியே வந்தார்

வெளியே வந்தார்

விவேகானந்தர் கதவை திறந்து வெளியே வந்தார், தாசியை பாத்து வணக்கம் கூறினார். " எனது ஆன்மீகத்தில் இன்று நான் புதிய நிலையை அடைந்துள்ளேன். நான் பயந்திருந்தேன், என்னுள் நிச்சயம் சில ஆசைகள் இருந்திருக்க வேண்டும். அதனாலதான் நான் பயந்திருக்கிறேன். ஆனால் இந்த பெண் என்னை முழுமையாக தோற்கடித்து விட்டால். இப்போது எனக்குள் எந்த பயமும் இல்லை. இவ்வளவு தூய ஆன்மாவை இதுவரை நான் பார்த்ததில்லை " என்று கூறினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life வாழ்க்கை
English summary

How a courtesan taught swami Vivekananda saintwood

Do you know that a courtesan woman taught the meaning of sainthood and love to Vivekananda.
Desktop Bottom Promotion