Latest Updates
-
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம்
உடற்பயிற்சியே வேண்டாம்... இங்க போனா உடனே சிக்ஸ்பேக் வைத்து தருவாங்களாம்...
தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக சிக்ஸ்பேக் வரவழைக்கும் மருத்துவமனையைப் பற்றி தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அந்த கதையைத் தான் இப்ப பார்க்கப்போறோம்.
உங்களுக்கு 6 பேக்ஸ் வேணும்னா மாங்கு மாங்குனு இனி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, இந்த மருத்துவமனைக்கு சென்றாலே போதும்

பெண்களுக்கு பொதுவாக ஆண்கள் ஸ்லிம்மாக 6 பேக்ஸ் கொண்டு இருந்தால் பிடிக்கும். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்காக ஆண்கள் நிறைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அப்படியே மாங்கு மாங்குனு உடற்பயிற்சி செய்தால் கூட சரியான 6 பேக்ஸ் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இந்தமாதிரி கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஹாஸ்பிடல் உள்ளது. இங்கே வருபவர்களுக்கெல்லாம் உடனடி 6 பேக்ஸ் வந்திடுமாம். சரி வாங்க அதைப் பற்றி டாக்டர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

தாய்லாந்து மருத்துவமனை
இந்த வித்தியாசமான முறை பாங்காக்கில் உள்ள மாஸ்டர் பீஸ் மருத்துவமனையில் செய்யப்படுகிறது. இங்கே பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் வாடிக்கையாளர்களுக்கு உடனடி 6 பேக்ஸ் செய்து தருகிறார்கள்.

செய்யும் முறை
இந்த அறுவை சிகிச்சை முறையில் நோயாளியின் அடிவயிற்று பகுதியில் தங்கி உள்ள கொழுப்புகளை நீக்குகின்றனர். இதன் மூலம் எளிதாக 6 பேக்ஸை கொண்டு வந்து விடுகிறார்கள். இந்த சிகச்சையில் எந்த வித பிளாஸ்டிக் அல்லது சிலிக்கான் இம்பிளாண்ட் எதுவும் பயன்படுத்துவதில்லை. வெறும் கொழுப்புகளை (லிப்போஷக்ஸன்) மட்டும் உறிஞ்சி எடுக்கின்றனர்.

இது ஒரு புகழ்பெற்ற சிகிச்சை
இந்த சிகச்சையை அங்குள்ள டாக்டர்கள் கடந்த 3-4 வருடங்களாக செய்து வருகிறார்கள். ஒரு மாதத்திற்கு 20-30 வாடிக்கையாளர்கள் 6 பேக்ஸ் ஆசையைப் பெற வருகிறார்கள். இந்த சிகச்சை இன்னும் புகழ்பெற்று வருவதால் விரும்பி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பழைய முறை
இந்த மாதிரி அடிவயிற்று பகுதியில் உள்ள கொழுப்புகளை நீக்கும் சிகிச்சை 1990லயே செய்யப்பட்டது. தற்போது இதை நாங்கள் 6 பேக்ஸ்க்காக செய்து வருகிறோம். இந்த அறுவை சிகிச்சை செய்ய வெறும் 2-4 மணி நேரம் இருந்தால் போதும். எந்தவித வலியும் கிடையாது. வெளியே வரும்போது 6 பேக்ஸ் உடன் தான் வருவீர்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
என்ன நம்ம ஊரு இளைஞர்களே கேட்டுகிட்டீங்களா!! ஆர் யூ ரெடி.



Click it and Unblock the Notifications
