For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெத்தவங்க பேரை நெஞ்சுல பச்சை குத்தின புள்ளைய பெற்றோரே அடிச்சு கொன்ன கொடூரம்...

By Mahibala
|

தன் பெற்றோர்கள் மேல் இருந்த அன்பால் அவர்களின் பெயரையே பச்சைக் கொண்டவர் மகேஷ். வயது 30.

Family Kills Son

வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவர் தன் சொந்த ஊருக்கு வந்திருந்த சமயத்தில் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார் என்று கூறி, தாய், தந்தை, சகோதரர்கள் சேர்ந்து அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடிய கொடூரச் சம்பவம் நடந்திருக்கிறது. அதன் மர்மம் தான் என்ன? வாங்க. விளக்கமாகப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
30 வயது இளைஞன்

30 வயது இளைஞன்

மகேஷ் என்னும் இளைஞர் தான் தன் சொந்த குடும்பத்தாலேயே கொல்லப்பட்டவர். இவருக்கு வயது 30. இவர் சிங்கப்பூரில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அடிக்கடி வேலை விஷயமாகவும் அவர் காஞ்சிபுரம் வந்து செல்வதுண்டு. அப்படி வந்த போது தூக்கில் வீட்டில் தொங்கியிருக்கிறார். உண்மையிலேயே அவர் தற்கொலை தான் செய்து கொண்டாரா என்று பார்த்தால், அதற்குள் இருக்கும் மர்மம் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்.

MOST READ: சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்?

குடும்ப பின்னணி

குடும்ப பின்னணி

மகேஷின் தந்தை மணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். தாய் தமிழ்ச்செல்வி. இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு மோகனச் செல்வன், மகேஷ், ரமேஷ் என மூன்று மகன்கள். அதில் இரண்டாவது மகன் தான் இறந்து போனது.

தற்கொலை சம்பவம்

தற்கொலை சம்பவம்

மகேஷ் மது போதைக்கு அடிமையானவராக இருந்திருக்கிறார். அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதுண்டு. அப்படி ஒரு நாள் தகராறு செய்துவிட்டு, திடீரென வீட்டில் உள்ள மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டு தொங்கியிருக்கிறார். உண்மையிலேயே அது கொலையா?.

மர்மக் கொலை

மர்மக் கொலை

வழக்கம்போல குடித்துவிட்டு சம்பவம் நடந்த அன்று மகேஷ் குடித்துவிட்டு வந்து வீட்டில் வந்து தகராறு செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை மணி தன்னுடைய மற்ற இரண்டு மகன்களுடன் சேர்நு்து கையில் கிடைத்த பொருட்களால் மகேஷை தாக்கியிருக்கிறார்கள்.

MOST READ: வெறும் ஐஞ்சே நாள்ல உங்க மூட்டுவலியை விரட்டணுமா? இந்த ஜூஸ குடிங்க போதும்...

ரத்த வெள்ளத்தில்

ரத்த வெள்ளத்தில்

தாறுமாறாக தாக்கியதால் ரத்த வெள்ளத்தில் மிதந்தார் மகேஷ். ரத்தப் போக்கு அதிகரித்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். மகேஷின் மூத்த சகோதரருக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருப்பதால், கொலைப்பழி ஏற்பட்டு விடும் என்று குடும்பமே சேர்ந்து அவருடைய உடலைத் தூக்கி மின்விசிறியில் தொங்கவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக கூறிவிட்டனர்.

சந்தேகம் வந்தது எப்படி?

சந்தேகம் வந்தது எப்படி?

மகேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், அவர்களுடைய வீட்டுக்கு அருகே இருந்த ஒருவர் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணையில் உண்மை தெரியவர ஒட்டுமொத்த குடும்பமும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

MOST READ: எப்பவும் பஞ்சமே வராம ஜாலியா இருக்கும் ரெண்டு ராசிக்காரர்கள் யார் தெரியுமா? இவங்கதான்

நெஞ்சில் பச்சை

நெஞ்சில் பச்சை

தாய் மற்றும் தந்தையின் மீது மூன்று மகன்களில் அதிக பாசம் கொண்டவர் மகேஷ் தானாம். பெற்றோர்களின் மீது இருந்த அளவு கடந்த பாசத்தால் நெஞ்சில் அவர்கள் இருவரின் பெயரையும் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போன பின் குடிபோதைக்கு அடிமையாகி விட்டார். அப்படி நெஞ்சில் பச்சை குத்திக் கொண்ட தாயும் தந்தையுமே சேர்ந்து தன்னை கொலை செய்வார்கள் என்று நினைத்துக்கூடு பார்த்திருக்க மாட்டார் அந்த இளைஞன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Family Kills Son, Stages Murder As Suicidal Death

The police arrested four members of a family on charges of killing their alcoholic son on April 19. The family had tried to make it appear that Mahesh, 30, had taken his own life due to depression.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more