For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பாத்திரம் எதுல தயாரிச்சது தெரியுமா? மனித சிறுநீர்ல... இனிமே நம்ம சிறுநீர காசுக்கு விக்கலாம்...

|

பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களை மறுசுழற்சி செய்து புதிய பொருட்கள் தயாரிப்பது என்பது தற்போது சில ஆண்டுகளாக நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கழிவுப் பொருட்களில் இருந்து உபயோகமான சில பொருட்களைத் தயாரிப்பது என்பது ஒரு அற்புதமான அனுபவமாகவும் இருக்கிறது. மேலும் இவற்றின் மதிப்பும் அதிகமாக உள்ளது. ஆனால் மனித கழிவில் இருந்து பொருட்களைத் தயாரிப்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

ஆம், ஒரு வடிவமைப்பாளர் மனிதனின் சிறுநீரைக் கொண்டு செராமிக் பாத்திரங்களை வடிவமைக்கிறார். இந்த வழக்கைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவைப் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீர்

சிறுநீர்

சிறுநீரைப் பயன்படுத்தி ஒரு பொருளை உற்பத்தி செய்வது என்பது கேட்பதற்கு ஒரு வித அறுவறுப்பை ஏற்படுத்தினாலும் அந்தப் பொருளைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

மனித சிறுநீரைப் பயன்படுத்தி ஒரு பொருளைத் தயாரிக்கும் தனித்தன்மை பெற்ற யுக்தியை செயல்படுத்திய அந்த நபர் சினே கிம். லண்டனில் உள்ள சென்ட்ரல் செயின்ட் மார்டினில் பட்டப்படிப்பை முடித்த இவர் மனித சிறுநீரைப் பயன்படுத்தி அலங்கார மட்பாண்டங்களின் முழுத் தொகுப்பையும் உருவாக்கியுள்ளார். வடிவமைப்பாளர் மெட்டல் ஆக்சைடுக்கு பதிலாக சிறுநீரைப் பயன்படுத்தி பீங்கான் பொருட்களுக்கு மெருகூட்டலைச் சேர்த்திருந்தார்.

MOST READ: வெறும் பொம்மைகள் மட்டும் வாழும் அமானுஷ்ய கிராமத்தை பாருங்க... பார்க்கவே பீதியா இருக்கு...

பாத்திரங்கள்

பாத்திரங்கள்

உருவாக்கம் ஆன்லைனில் பகிரப்பட்ட பிறகு பீங்கான் பாத்திரங்கள் சர்வதேச ட்ரெண்டாக மாறிவிட்டன. இந்த உருவாக்கத்திற்கு யூரின் வேர் -'Urine Ware' என்று பெயரிடப்பட்டுள்ளது. மனித சிறுநீர்ப்பை மற்றும் தனித்துவமான ஆய்வக பிளாஸ்க்களின் வடிவத்தால் ஈர்க்கப்பட்ட தொடர்ச்சியாக பீங்கான் பாத்திரங்களின் இந்த தொகுப்பு வெளிப்படுத்துகிறது. இந்த தொகுப்பின் முழு USP என்னவென்றால், சேகரிப்பு தொடரில் உள்ள அனைத்து அலங்கார பாத்திரங்களும் மனித சிறுநீரைப் பயன்படுத்தி மெருகூட்டப்பட்டன என்பதே .

தொழில்துறை

தொழில்துறை

தொழில்துறைக்கு முந்தைய தளங்களில் சிறுநீர் பல்வேறு நோக்கங்களுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது; இது நடவு, சுத்திகரிப்பு, சிகிச்சை மருந்து, தோல் பதனிடுதல் மற்றும் பற்களை வெண்மையாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த முழு திட்டமும் ஒரு சோதனை பயணமாக இருந்தது என்று வடிவமைப்பாளர் விளக்கினார், மேலும் இந்த சோதனையின் மூலம் அவர் சிறுநீரின் மதிப்பை ஆராய்ந்து வருகிறார், ஏனெனில் இது இந்த சமூகத்தில் ஒரு புதிய பங்கைக் குறிக்கும் என்று குறிப்பிடுகிறார். இந்த தனித்துவமான திட்டத்திற்காக, ஐந்து வெவ்வேறு நபர்களிடமிருந்து ஐந்து மாத காலப்பகுதியில் சுமார் 250 லிட்டர் சிறுநீர் சேகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் சிறுநீர் வடிகட்டப்பட்டு இருண்ட ஆரஞ்சு பழுப்பு நிற பேஸ்டாக உருவாக்கப்பட்டு பின்னர் பீங்கான் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது.

250 லிட்டர்

250 லிட்டர்

சிறுநீரை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி விளக்குகையில், சிறுநீரில் உள்ள தாதுக்கள் மெருகூட்டல் அல்லது களிமண்ணின் அதே தன்மையைக் கொண்டிருக்கும் என்று குறிப்பிடுகிறார். சிறுநீரில் இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பொதுவான கனிமங்கள் இருப்பதால் இது சாத்தியமாகிறது என்று வடிவமைப்பாளர் வெளிப்படுத்தினார்.

MOST READ: கிரகணம் முடியும் நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

களிமண்

களிமண்

களிமண்ணைப் பயன்படுத்தி பொருட்கள் தயாரிக்கப்பட்டவுடன், சிறுநீரின் பேஸ்ட் கொண்டு மட்பாண்டங்களை பூசினார் என்று கிம் வெளிப்படுத்தினார். தயாரிப்புகளின் பளபளப்பான பூச்சு பற்றி விளக்கும்போது , சிறுநீரின் பேஸ்ட் பூசுவதால் களிமண்ணில் சிலிக்காவின் உருகும் புள்ளியைக் குறைக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக, அது வெப்பத்திற்கு வெளிப்படும் போது, சிலிக்கா சிறுநீரில் உள்ள தாதுக்களுடன் ஒன்றிணைந்து பளபளப்பான பூச்சு ஒன்றை உருவாக்குகிறது.

மனித சிறுநீரில் இருந்து உருவாக்கிய முழு பீங்கான் சேகரிப்பின் வீடியோவை இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Designer Collected 250 L of Human Urine and Made Ceramic Vessels with It

Recycling plastic and other materials to make products has been a trend for years now. Making products out of the waste products look amazing too and they have great value. But have you heard about stuff made from human waste? Well, this is the case of a designer who has been making ceramic products using human urine!
Story first published: Thursday, July 4, 2019, 17:50 [IST]