For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாணக்கியரின் கூற்றுப்படி இந்த ஐந்து தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெறுவர்களாம்...

|

புத்திசாலித்தனமும், சிறந்த ஆலோசனை வழங்கும் திறமையும் இருந்த சாணக்கியரை போன்றவர்களை இந்த காலத்தில் பார்ப்பது என்பது இயலாத காரியமாகும். வரலாற்றில் அவரை போல போற்றுதலுக்குரிய ஒரு அறிஞரை பார்க்க முடியாது. சாணக்கியரின் வழிகாட்டுதல்கள் வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

Chanakya Niti: only these qualities make a person Successful

பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் சாணக்கியரின் புகழ் பரவியிருக்க காரணம் அவரின் வழிகாட்டுதல்களில் இருந்த ஆழமும், உண்மையும்தான். சாணக்கியர் தனது அர்த்தசாஸ்திரத்தில் வெற்றி பெறுவதற்கான சில அடிப்படை தகுதிகள் என்னவென்று கூறியுள்ளார். அந்த தகுதிகள் என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் தகுதி - வருத்தப்படுவது

முதல் தகுதி - வருத்தப்படுவது

வெற்றிகரமான நபரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தும் முதல் மற்றும் முக்கிய தகுதி வருத்தப்படாமல் இருப்பதாகும். தான் வீணாக்கிய நேரம் குறித்தோ, எடுத்த தவறான முடிவுகள் குறித்தோ நினைத்து வருந்தி புலம்புவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.

 சாணக்கியரின் விளக்கம்

சாணக்கியரின் விளக்கம்

கடந்த காலத்தை நினைவில் வைத்திருப்பது உங்களுக்கு எந்த விதத்திலும் பயன்தராது. கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறை நினைத்து வருத்தப்படாமல் அதிலிருந்து கற்ற பாடத்தை நிகழ்காலத்திற்க்கு பயன்படுத்துவதே வெற்றிக்கு வழிவகுக்கும்.

இரண்டாவது தகுதி - பணத்தின் மீதான பேராசை

இரண்டாவது தகுதி - பணத்தின் மீதான பேராசை

உங்களை ஆள நினைப்பவர்களுடன் சேர்ந்து, யாரையும் ஏமாற்றுவதன் மூலம் பெறப்பட்ட பணம், அல்லது உங்கள் மதிப்புகளையும் கொள்கைகளையும் தியாகம் செய்தபின் சம்பாதித்த பணம் உங்களின் வெற்றிக்கு ஒருபோதும் உதவாது.

MOST READ: முட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...!

சாணக்கியரின் விளக்கம்

சாணக்கியரின் விளக்கம்

சாணக்கியர் விஷத்தின் உண்மையான குணம் பற்றி எச்சரிக்கிறார். ஆரம்பத்தில் அது இனிப்பாக தெரிந்தாலும் இறுதியில் உங்கள் உயிரை எடுத்துவிடும். உங்களின் குணத்தை சமரசம் செய்து கொண்டு நீங்கள் பெறும் பணம் மற்றும் அதிகாரம் இப்படிபட்டதுதான்.

மூன்றாவது தகுதி - மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்

மூன்றாவது தகுதி - மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்

ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்னரும், முக்கியமான வாக்கை கொடுப்பதற்கு முன்னரும் அதனை பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியது அவசியமாகும். இந்த மூன்று கேள்விகளை கேட்டு விட்டு காரியத்தை தொடங்குபவர்கள் ஒருபோதும் தோற்கமாட்டார்கள். நான் என்ன செய்ய வேண்டும்? விளைவு என்னவாக இருக்கும்? அதன் மதிப்பு என்னவாக இருக்கும்? இவைதான் அந்த மூன்று கேள்விகள்.

சாணக்கியரின் விளக்கம்

சாணக்கியரின் விளக்கம்

நாம் எடுக்கும் முடிவு அல்லது நாம் கூறும் வார்த்தை நமது வாழ்க்கையில் மட்டுமின்றி மற்றவர்களின் வாழ்க்கையின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமது வெற்றியை உறுதிப்படுத்த எண்ணினால் கண்டிப்பாக இந்த மூன்று கேள்விகளை நமக்குள் கேட்க வேண்டும்.

MOST READ: சாஸ்திரங்களின் படி தம்பதியினர் இந்த இடங்களில் கலவியில் ஈடுபடுவது மிகப்பெரிய பாவமாகும்...!

நான்காவது தகுதி - ஒருபோதும் பின்வாங்காதீர்கள்

நான்காவது தகுதி - ஒருபோதும் பின்வாங்காதீர்கள்

விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமற்றதாக காட்டிக்கொள்ளாது, அதனை பார்த்தும் நாம் பயப்படத்தான் செய்வோம். தன்னால் தாக்க முடியாது என்பதை ஒருபோதும் பாம்பு காட்டிக்கொள்ளாது. அதேபோலத்தான் மனிதனும் தன்னால் சமாளிக்க முடியாத சூழ்நிலையாக இருந்தாலும் அதிலிருந்து பின்வாங்கக்கூடாது.

சாணக்கியரின் விளக்கம்

சாணக்கியரின் விளக்கம்

வெற்றிகரமான ஒருவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளையும், கடன் தொடர்பாக இருக்கும் பிரச்சினைக்ளையும் ஒருபோதும் தன் முகத்திலோ அல்லது செயல்களிலோ காட்டிக்கொள்ள மாட்டார். மற்றவர்களுக்கு முன்னால் உங்களை ஏமாற்றும் முதல் விஷயம் உங்கள் முகம் என்று அவர் கூறுகிறார்.

ஐந்தாவது விதி - பாராட்டுக்களை துரத்தி செல்லாதீர்கள்

ஐந்தாவது விதி - பாராட்டுக்களை துரத்தி செல்லாதீர்கள்

வெற்றிகரமானவர்கள் ஒருபோதும் பாராட்டுகளையோ அல்லது தன்னை பற்றி மற்றவர்கள் பேச வேண்டும் என்றோ எதிர்பார்க்க மாட்டார்கள். பாராட்டுக்களை துரதிவுத்தில் நேரம் செலுத்துவதை காட்டிலும் தன்னை மெருகேற்றி கொள்வதில் அவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்.

MOST READ: ஆண்களே! இந்த அறிகுறிகள் இருப்பவர்களின் இதயம் பலவீனமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாம்...

சாணக்கியரின் விளக்கம்

சாணக்கியரின் விளக்கம்

சாணக்கியரின் கூற்றுப்படி எப்போது உங்கள் பற்றி மற்றவர்கள் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ பேச தொடங்குகிறார்களோ அப்போது நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். மற்றவர்கள் உங்கள் பாராட்ட வேண்டும், உங்களுக்காக கைதட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கத்தீர்கள் மாறாக உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya Niti: only these qualities make a person Successful

According to Chanakya only these five qualities make a person successful.
Story first published: Wednesday, July 10, 2019, 17:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more