For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்க்கையில் எப்படிப்பட்ட நண்பர்களை வைத்துக்கொள்ள கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார் தெரியுமா?

வாழ்க்கையில் நம்முடைய முன்னேற்றத்திற்கு எப்படி நம் உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருக்கிறார்களோ அதேபோல நமது வீழ்ச்சிக்கும் நமக்கு உடனிருப்பவர்கள்தான் காரணமாக இருப்பார்கள்.

|

மனிதர்கள் சமூகத்துடன் சேர்ந்து வாழ படைக்கப்பட்டவர்கள், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தனிமையிலேயே வாழ்ந்துவிட முடியாது. நண்பர்கள், உறவினர்கள், மனைவி, குழந்தைகள், உடன் வேலைசெய்பவர்கள் என அனைவருடனும் வாழ்க்கையை பகிர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாக இருக்க முடியும். ஆனால் நம்முடன் பழகுபவர்கள் அனைவருமே நல்லவர்களாக இருந்துவிட வாய்ப்பில்லை.

 Chanakya Niti: Easy tips to select the right people in life

வாழ்க்கையில் நம்முடைய முன்னேற்றத்திற்கு எப்படி நம் உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருக்கிறார்களோ அதேபோல நமது வீழ்ச்சிக்கும் நமக்கு உடனிருப்பவர்கள்தான் காரணமாக இருப்பார்கள். எனவே நமது உடனிருப்பவர்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தந்திரங்களின் சக்கரவர்த்தியான சாணக்கியர் வாழ்க்கையில் சரியானவர்களை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகிறார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கடினமான சூழல்கள்

கடினமான சூழல்கள்

கடினமான சூழல்கள்தான் நமக்கு உண்மையான நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காட்டும். பிரச்சினைகளில் சிக்கி கொள்ளும்போது அதுவரை யாரை உண்மையான நண்பர்கள் என்று நினைத்து கொண்டிருந்தோமோ அவர்கள் கண்டுகொள்ளாமல் விலகி கொள்வார்கள், அதேசமயம் யாரை சாதாரண நண்பர்க என்று நினைத்தோமோ அவர்கள் நமக்காக இறங்கி வேலை செய்வார்கள். இதுபோன்ற சூழல்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். சரியானவர்களை தேர்தெடுப்பது எப்படி என்று சாணக்கியர் கூறும் வழிகளை மேற்கொண்டு பார்க்கலாம்.

எப்படி சோதனை செய்ய வேண்டும்?

எப்படி சோதனை செய்ய வேண்டும்?

சாணக்கியரின் கூற்றுப்படி உங்கள் பணியாட்களின் உண்மை முகத்தை அவர்களுக்கு எந்த வேலையும் ஒதுக்காத போது தெரிந்து கொள்ளலாம். உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை உங்களுக்கு ஏற்படும் அசாதாரண சூழல்களிலும், பணப்பிரச்சினைகளிலும் தெரிந்து கொள்ளலாம். உங்கள் துணையின் உண்மை முகத்தை பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்போது தெரிந்து கொள்ளலாம்.

அறியாமையில் இருப்பவர்கள்

அறியாமையில் இருப்பவர்கள்

ஒருவர் அறிவை வளர்த்து கொள்வதில் ஆர்வம் காட்டாவிட்டால், அறியாமையில் இருப்பதையே மகிழ்ச்சி என நினைத்து கொண்டு குருடனாகவே வாழ்வார்கள் எனில் அவர்கள் மோசமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் வாழ்க்கை துன்பம் மற்றும் துரதிர்ஷ்டம் நிறைந்தததாக இருக்கும். இந்த சூழ்நிலையிலிருந்து ஒருவர் வெளியே வராவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் பல அவமானங்களை சந்திக்க நேரிடும். அவர்களிடம் நீங்கள் பழகாமல் இருப்பதே நல்லது.

MOST READ:உங்கள் ஆன்மா நீங்கள் இறந்த பிறகும் பூமியில் எவ்வளவு காலம் இருக்கும் தெரியுமா?

குறுக்குவழிகள்

குறுக்குவழிகள்

ஒருவர் தங்கள் வாழ்க்கையில் ஒரு குறிகோளை நிர்ணயித்து விட்டால் அதனை அடைவதற்காக கடினமாக உழைக்க வேண்டும்,தங்களின் முழுமுயற்சியையும் முதலீடாய் போடவேண்டும். குறிக்கோளை அடையும்வரை உங்கள் உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருபோதும் இலட்சியத்தை அடைய குறுக்குவழியை தேடக்கூடாது.

சுதந்திரமாய் இருக்க வேண்டும்

சுதந்திரமாய் இருக்க வேண்டும்

மற்றவர்களின் வீடுகளில் சென்று தங்குவது என்பது ஆண்களுக்கு மிகவும் கடினமானதாகும். அவர்களின் வீட்டை பொறுத்தவரை அவர்கள்தான் ராஜா. தாங்கள் நினைத்ததை செய்யும் சுதந்திரம் அவர்களுக்கு சொந்த வீடுகளில் மட்டுமே கிடைக்கும். மற்றவர்களின் வீடு என்று வரும்போது அவர்கள் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும். எனவே அவரவர் வீட்டில் ராஜாவாக வாழ்வதே அனைவர்க்கும் நல்லது என்று சாணக்கியர் கூறுகிறார்.

எளிய மகிழ்ச்சி

எளிய மகிழ்ச்சி

ஒரு மனிதனின் விலைமதிப்பில்லாத சொத்தே அவர்களின் சமநிலையில் இருக்கும் மனதுதான். அமைதியும், மகிழ்ச்சியும்தான் அனைவருக்கும் வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய முக்கிய விஷயங்களாகும். பொறாமை, வெறுப்பு, பேராசை போன்றவை மனதில் இருப்பவர்களுக்கு இந்த இரண்டும் கிடைப்பது மிகவும் கடினமாகும்.

MOST READ:கண்திருஷ்டியால் உடல்நிலை மோசமாகிறதா? இந்த பொருளை வீட்டில் வைத்திருங்கள் போதும்...!

நண்பர்கள்

நண்பர்கள்

நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனமாய் இருக்க வேண்டும். உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கும் குணம் உள்ளவர்கள், உங்களை விட அந்தஸ்தில் மிக உயரத்தில் இருப்பவர்கள் போன்றவர்களிடம் நட்பு பாராட்டாமல் இருப்பதே நல்லது என்கிறார் சாணக்கியர். ஏனெனில் இந்த வேறுபாடுகள் நிச்சயம் இருவருக்குள்ளும் பிரச்சினைகளை உண்டாக்க்கும், இதனால் அவர்களால் ஒரு மகிழ்ச்சியான உறவை வளர்க்க முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya Niti: Easy tips to select the right people in life

Acharya Chanakya gave some easy tips to select the right people in your life through his book Chanakya Niti.
Story first published: Tuesday, April 16, 2019, 15:28 [IST]
Desktop Bottom Promotion