உங்க விருப்பமான பாலிவுட் பிரபலங்களின் ராசி என்னன்னு தெரிஞ்சுக்கணுமா?

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக பிரபலங்களைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஒவ்வொருவருக்குமே ஆர்வம் இருக்கும். அதிலும் தங்களுக்கு விருப்பமான பிரபலங்கள் என்றால், அவர்களைப் பற்றிய முழு விஷயங்களையும் தெரிந்து கொள்ள விரும்புவோம். அதில் ஒன்று அவர்கள் என்ன ராசியாக இருப்பார்கள் என்பது தான். உங்களுக்கு பாலிவுட் பிரபலங்களைப் பிடிக்குமா?

இந்த கட்டுரையில் ராசிகளும், சில பாலிவுட் பிரபலங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த ராசிகளுள் உங்களுக்கு விருப்பமான பிரபலங்கள் எந்த ராசியில் இடம் பெற்றுள்ளார் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். சரி, இப்போது பாலிவுட் பிரபலங்களின் ராசி என்னவென்று காண்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்கு உரியவர்கள் உற்சாகமானவர்கள், சுயாதீனமுள்ளவர்கள், எப்போதும் சவால்களை சமாளிக்கத் தெரிந்தவர்கள். பாலிவுட் நடிகர்களுள் அஜய் தேவ்கன், அக்ஷய் கன்னா மற்றும் நடிகைகளுள் ராணி முகர்ஜி, சித்ரங்கதா சிங், லாரா தத்தா, கங்கனா ரனாவத் போன்றோர் மேஷ ராசிக்காரர்கள் ஆவர்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்குரியவர்கள் பொறுமைசாலி, நம்பகமானவர் மற்றும் விடாமுயற்சியுடையவர்கள். மறுபுறம், அவர்கள் பாசமாகவும் அமைதியாகவும் இருப்பவர்கள். பாலிவுட் பிரபலங்களுள் மாதுரி தீட்சித், அனுஷ்கா ஷர்மா, வருண் தேவ்கன், பூஜா பேடி போன்றோர் ரிஷப ராசிக்குரியவர்களே ஆவர்.

மிதுனம்

மிதுனம்

ரிஷப ராசிக்காரர்கள் நல்ல நகைச்சுவையாளர், புத்திசாலி, சிறந்த பேச்சாளர்களாக இருப்பார்கள். மேலும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள். பாலிவுட் பிரபலங்களுள் சோனம் கபூர், சோனாக்ஷி சின்ஹா, அமீஷா படேல், டிம்பிள் கபாடியா மற்றும் ஷில்பா ஷெட்டி போன்றோர் இந்த ராசிக்குரியவர்களாவர்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் உணர்ச்சிமிக்கவர்கள். இந்த ராசிக்காரர்கள் ஒரு கணத்தில் சந்தோஷமாக இருந்தாலும், அடுத்த நொடியே கவலையில் மூழ்கிவிடுவார்கள். பாலிவுட் பிரபலங்கள் கரீஷ்மா கபூர், அர்ஜுன் கபூர் மற்றும் நசீருதீன் ஷா போன்றோர் கடக ராசிக்கு உரியவர்களாவர்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் உற்சாகமான, மகிழ்ச்சியான மற்றும் இயல்பானவர்களாக இருப்பர். மேலும் இந்த ராசிக்காரர்கள் வெளிப்படையாக பேசுபவர்களாவர். பாலிவுட் நடிகர் நடிகைகளுள் கஜோல், சாய்ப் அலி கான், சஞ்சய் தத், ஸ்ரீதேவி, ஜெனிலியா போன்றோர் இந்த சிம்ம ராசிக்காரர்களாவர்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். பாலிவுட்டில் அக்ஷய் குமார், கரீனா கபூர், ரிஷி கபூர், விவேக் ஓபராய் மற்றும் ஆயுஷ்மான் குரானா போன்றோர் கன்னி ராசிக்காரர்கள் ஆவர்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் நன்கு ஊர் சுற்றுபவர்களாக கருதப்படுகிறார்கள். பாலிவுட்டில் சோஹா அலி கான், ஹேம மாலினி மற்றும் சன்னி தியோல் போன்றோர் துலாம் ராசிக்காரர்களாவர்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள், வியக்கத்தக்க தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்கள் தைரியமானவர்கள் மற்றும் லட்சியவாதிகள் மட்டுமின்றி, மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களும் கூட. பாலிவுட்டில் ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் பச்சன், சுஷ்மிதா சென், ஜூஹி சாவ்லா, பரீனித்தி சோப்ரா போன்றோர் விருச்சிக ராசிக்காரர்களாவர்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் நம்பகத்தன்மை கொண்டவர்கள் மற்றும் எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் எடுத்துக் கொள்பவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு விளையாட்டுக்களின் மீது அதிக விருப்பம் இருக்கும். பாலிவுட்டில் ஜான் ஆப்ரகாம், அர்ஜுன் ராம்பால், ரித்தேஷ் தேஷ்முக், ப்ரதீக் பாபர் மற்றும் தர்மேந்திரா போன்றோர் தனுசு ராசிக்காரர்களே ஆவர்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் தீவிரமாகவும், மற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டவர்கள் போன்றும் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தனக்கு நெருங்கியவர்களை நம்புகிற கணம், அவர்கள் ஒரு விசுவாசமான மற்றும் அர்ப்பணிப்புடைய நண்பராக அவர்களுக்கு ஆகிவிடுவார்கள். பாலிவுட்டில் சல்மான் கான், ஹிரித்திக் ரோஷன், தீபிகா படுகோனே, வித்யா பாலன் போன்றோர் மகர ராசிக்காரர்களாவர்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் மற்றவர்களை பின்தொடர விரும்பாமல், தங்கள் மனதில் தோன்றியதையே செய்ய விரும்புவார்கள். இவர்கள் தங்கள் எண்ணங்களிலும் செயல்களிலும் அசலானவர்கள். பாலிவுட்டில் அபிஷேக் பச்சன், ப்ரீத்தி ஜிந்தா, பாபி தியோல் மற்றும் ரன்தீர் கபூர் போன்றோர் இந்த ராசிக்கு உரியவர்கள் தான்.

மீனம்

மீனம்

ராசிகளுள் கடைசி ராசியான மீன ராசிக்காரர்கள் அழகிய தோற்றத்தைக் கொண்டவர்களாக இருப்பர். பாலிவுட்டில் அமீர் கான், அபாய் தியோல், ஷ்ரதா கபூர் மற்றும் அலியா பட் போன்றோர் மீன ராசிக்குரியவர்கள் ஆவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Zodiac Signs Of Your Favourite Bollywood Stars

Do you know what is your favourite actor’s zodiac sign? We have listed some of the most famous actors of Bollywood and defined their personality as per their zodiac sign.