For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2 பாட்டில் தண்ணிக் குடித்துவிட்டு, பணிப் பெண்ணுக்கு 7 இலட்சம் டிப்ஸ் கொடுத்த இளைஞர்!

By John
|

சுமாரான ஃபேமிலி ரெஸ்டாரன்ட் சென்றால் பத்து அல்லது இருபது ரூபாய் டிப்ஸ் கொடுப்பார்கள். இதுவே, ஸ்டார் ஹோட்டலாக இருந்தால் ஐம்பது முதல் நூறு ரூபாய் வரை டிப்ஸ் கொடுப்பார்கள்.

ஒருவேளை உணவருந்த சென்றவர் அரசியல்வாதி, நடிகை, பெரிய பிஸ்னஸ்மேன் என்றால் ஐநூறு, ஆயிரங்கள் கூட டிப்ஸ் வைப்பதை நாம் கண்கூட கண்டிருப்போம்.

Youtube Star Mr Beast Gave 10,000 Dollar Tips to a Waitress for Serving Just Two Water Bottles.

எவ்வளவு பெரிய ஸ்டார் ஹோட்டலாக இருந்தாலும், அங்கே சாப்பிட்டவர் பில் கேட்ஸ், முகேஷ் அம்பானி, கலாநிதி மாறனாகவே இருந்தாலுமே கூட இலட்சங்களில் என்றும் டிப்ஸ் வைக்க மாட்டார்கள்.

ஆனால், இங்கே ஒரு யூடியூப் ஸ்டார் தான் உணவருந்த சென்ற ரெஸ்டாரண்டில் ஏழு இலட்சம் ரூபாய் டிப்ஸ் கொடுத்து அந்த ஹோட்டலில் பணிபுரிந்து வருந்த பணிப் பெண்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிஸ்டர். பீஸ்ட்!

மிஸ்டர். பீஸ்ட்!

மிஸ்டர் பீஸ்ட் என்பவர் லோக்கலாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் அயல்நாட்டில் மிகவும் பிரபலமான யூடியூபர் என அறியப்படுகிறார். கடந்த வெள்ளிகிழமை ஒரு ரெஸ்டாரன்டிற்கு சென்ற மிஸ்டர் பீஸ்ட், இரண்டு பாட்டில் தண்ணீர் ஆர்டர் செய்திருக்கிறார்.

டிப்ஸ்!

டிப்ஸ்!

பணிப்பெண்ணும் ஆர்டர் செய்த தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு, அவர் குடித்து முடித்த பிறகு அதற்கான பில்லை கொண்டு வந்து டேபிளில் வைத்திருக்கிறார். கட்டணத்தை செலுத்திய மிஸ்டர் பீஸ், உடன் அருகே டிப்ஸ் பணத்தையும் வைத்து சென்றார்.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

எப்போதும் போல கட்டணம் செலுத்திய பிறகு, பில் அட்டையை மீண்டும் எடுக்க டேபிளுக்கு சென்ற பணிப்பெண்ணுக்கு அதிர்ச்சி. காரணம்., மிஸ்டர் பீஸ்ட் டிப்ஸாக பத்தாயிரம் டாலர்களை வைத்து சென்றிருந்தார். இது இந்திய மதிப்பில் ஏழு இலட்சத்து முப்பது ஆயிரத்திற்கும் மேலாகும்.

வடக்கு கலிபோர்னியா!

வடக்கு கலிபோர்னியா!

க்ரீன்வில்லே, வடக்கு கலிபோர்னியாவை சேர்ந்த அலினா க்ளஸ்டர் எப்போதும் போல தான் இந்நாளும் என்றே தனது வேலைக்கு கிளம்பினார். க்ரீன்வில்லேவில் இருக்கும் Sup Dog என்ற ரெஸ்டாரண்டில் தான் வேலை செய்து வருகிறார் அலினா. இந்த உணவகத்தை ப்ரெட் ஆலிவர் என்பவர் நடத்தி வருகிறார்.

டேபிள் 2

டேபிள் 2

அன்று மாலை 4 மணியளவில் டபிள் 2ல் ஒருவர் வந்திருக்கிறார், போய் ஆர்டர் எடுக்குமாறு ஆலிவரிடம் இருந்து அலினாவிற்கு உத்தரவு வந்தது. உடனே, உணவகத்தின் மெனு கார்டினை எடுத்துக் கொண்டு டேபிள் இரண்டுக்கு விரைந்தார் அலினா. அன்று அந்த உணவகத்தில் என்னென்ன உணவு ஸ்பெஷல் என்பதை வாசிக்க துவங்கினார் அலினா.

விளையாட்டு?!

விளையாட்டு?!

மிஸ்டர் பீஸ்ட் இரண்டு பாட்டில் தண்ணீர் குடித்த பிறகு டிப்ஸ் வைத்துவிட்டு நகர்ந்தார். எப்போதும் போல டேபிள் கிளீன் செய்துவிட்டு டிப்ஸ் பணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆரம்பத்தில் யாரோ விளையாடுகிறார்கள் என்று தன்னுடன் பணிபுரியும் நபர்களிடம் கூறி இருக்கிறார்.

உனக்கு தான்!

உனக்கு தான்!

அப்போது ஆலிவர் அலினாவை அழைத்து அது உனக்கான டிப்ஸ் என்று கூறி அதிர்ச்சியை ஆச்சரியமாக மாற்றி இருக்கிறார். ஆலிவர், அலினா பேசிக் கொண்டிருக்கும் போது தான் மிஸ்டர் பீஸ்ட் உணவருந்தி சென்ற டேபிள் அருகே இருவர் கேமரா வைத்து சமபவத்தை பதிவு செய்துக் கொண்டிருப்பதை கண்டனர். பிறகே, யூடியூப் சேனல் நடத்தும் மிஸ்டர் பீஸ்ட் செய்யும் காரியங்கள் அறிய வந்தன.

வினோதம்!

வினோதம்!

மிஸ்டர் பீஸ்ட் யூடியூபில் 90 இலட்சம் சப்ஸ்க்ரைபர்களை வைத்திருக்கிறார். இவர் நிறைய வினோதமான காரியங்களை செய்து அதை வீடியோ பதிவு செய்து பதிவிட்டு வருகிறார். ஒருமுறை முப்பதாயிரம் டாலர்கள் செலவு செய்து நிறைய ஸ்கிராட்ச் ஆப் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினார். இதன் இந்திய மதிப்பு 23 இலட்சங்கள் ஆகும்.

பயன்!

பயன்!

அதே போல ஒருமுறை எத்தனை பொம்மை கார்களை வைத்து ஒரு நிஜ காரை இழுக்க முடியும் என்ற வினோத முயற்சியிலும் இறங்கினார் மிஸ்டர் பீஸ்ட். ஆனால், பல சமயங்களில் மனிதநேய காரியங்களிலும் மிஸ்டர் பீஸ்ட் ஈடுபடுகிறார் என அறியப்படுகிறது. அப்படியான ஒரு நிகழ்வின் போது தான் அலினா க்ளஸ்டர் பெரும் பயன்படைந்திருக்கிறார்.

தங்க மனசு!

தங்க மனசு!

ஆனால், அலினா தனக்கு கிடைத்த பத்தாயிரம் டாலர்களையும் தானே வைத்து கொள்ளாமல். தன்னுடன் பணிபுரியும் நபர்கள் அனைவருடனும் அதை பகிர்ந்திருக் கொண்டிருக்கிறார். இதன்மூலம் அலினாவின் நல்ல மனது வெளிப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தன் ஷிப்டில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் இருநூறு டாலர்களும், பகல் ஷிப்டில் வேலை செய்தவர்களுக்கு நூறு டாலர்களும் கொடுத்து. மீத 800 டாலர்களை மட்டும் தான் வைத்துக் கொண்டார் அலினா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Youtube Star Mr Beast Gave 10,000 Dollar Tips to a Waitress for Serving Just Two Water Bottles.

Youtube Star Mr Beast Gave 10,000 Dollar Tips to a Waitress for Serving Just Two Water Bottles.
Story first published: Wednesday, October 24, 2018, 11:37 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more