TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
இன்று இந்த 5 ராசிகளுக்கு தான் யோகம் அடிக்கப் போகுது... உங்க ராசி அதுல இருக்ககா?...
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
பொது விவாதங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் மனம் பெரும் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளால் நன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கிறது.
ரிஷபம்
தொழிலில் புதிது புதிதாக வரும் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். போட்டிகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களுடைய ஆதரவால் எடுத்த காரியத்தை மிகவும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொருளாதாரத்தில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் உங்களுக்குப் பலன்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.
மிதுனம்
முக்கியப் பணியில் உள்ளவர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். பழைய நண்பர்களைச் சந்தித்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய வீடுகள், மனைகள் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.
கடகம்
பரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் குறைந்து சுமூக நிலைகள் உண்டாகும். செய்கின்ற தொழிலில் உங்களுடைய மதிப்புகள் உயரும். ஆகாய மார்க்க தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நினைத்த லாபம் உண்டாகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களால் புகழ் உண்டாகும். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் கிடைக்கும் நாள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.
சிம்மம்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். பிறருடைய விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், வுலையில் கவனத்துடன் செயல்படுங்கள். தொழிலில் உயர் அதிகாரிகளை கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். மனதுக்குள் தோன்றுகின்ற தேவையற்ற எண்ணங்களால் மன வருத்தம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.
கன்னி
வெளியூர் பயணங்களின் மூலமாக லாபம் உண்டாகும். பொது இடங்களில் உங்களுக்கு ஆதரவுகள் பெருகும். மனைவியின் மூலம் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புனித யாத்திரைகள் செல்வதற்கான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.
துலாம்
ஆரோக்கிய விஷயத்தில் இருந்து வந்த சிறு சிறு சிரமங்கள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும். பயணங்களின் மூலமாக தேவையில்லாத விரயச் செலவுகள் ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வாக்குவாதத்தில் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.
விருச்சிகம்
நீங்கள் எதிர்பார்த்திருந்த கடனுதவிகள் கிடைக்கும். பொது இடங்களில் உங்களுடைய செல்வாக்கு உயரும். உங்களுடைய எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். கௌரவப் பதவிகளுக்கான வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். தந்தையினுடைய ஆதரவினால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
தனுசு
உயர் அதிகாரிகளுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். நண்பர்களுடைய ஆதரவின் மூலமாக தொழில் சம்பந்தப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும். விவாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே உறவுகள் மேம்படும். நெருக்கம் அதிகரிக்கும். உங்களுடைய முழுநிர்வாகத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமாகவும் இருக்கும்.
மகரம்
கணவன், மனைவிக்கு இடையே இருந்த பிரச்னைகளைக் குறைந்து குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். பொது நலத் தொண்டுகளில் ஈடுபடுகிறவர்களுக்கு பெரும் புகழ் உண்டாகும். சர்வதேச வாணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கிறது.
கும்பம்
தாய் வழியிலான உறவினர்களுடன் கொஞ்சம் நிதானமாகவும் நடந்து கொள்ளவும். எதிர்பாராத சுப செய்திகள் உங்களுக்கு கிடைக்கும். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்குள் அமைதியை கடைபிடிக்கவும். வாகனங்களை பழுது பார்க்க சில விரயச் செலவுகள் ஏற்படும். தொழிலில் தன வரவுகள் கொஞ்சம் மந்தமாக இருக்கிறது. வீடு, மனை சம்பந்தப்பட்ட சுப விரயங்களை உண்டாக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.
மீனம்
மனதுக்குள் புதிய கனவுகள் மற்றும் எண்ணங்கள் தோன்றும். பிள்ளைகள் உங்களுடைய எண்ணங்களை அறிநது கொண்டு செயல்படுவீர்கள். பணியில் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உண்டாகும். வியாபாரங்களில் புதுவிதமான யுக்திகளைக் கையாளுவீர்கள். உயர் அதிகாரிகளுடைய ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.