For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தவறு செய்யாமல் காந்தி மகன் இங்கிலாந்து சிறைக்கு சென்றது ஏன்? (வீடியோ) # Unknown Story

தவறு செய்யாமல் காந்தி மகன் இங்கிலாந்து சிறைக்கு சென்றது ஏன்? (வீடியோ) # Unknown Story

By Staff
|

இது தேசப்பிதா காந்தியின் இளைய மகன் தேவதாஸ் காந்தியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம். கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதமாக காணப்படுகிறது. இந்திய மக்களையும், கிரிக்கெட்டையும் எள்ளளவும் பிரித்துவிட முடியாது. இதற்கு பலகோடி ரசிகர்கள் சாட்சி. இதற்கு காந்தியின் இளைய மகன் தேவதாஸ் காந்தி மட்டும் விதிவிலக்காக இருக்க போகிறாரா என்ன? ஆனால், இவர் செய்த அளவிற்கு ஒரு கிரிக்கெட் போட்டியை காண யாருக்கும் துணிச்சல் இருக்காது.

Why Mahatma Gandhis Son Devdas Decided To Stay In Jail?

தேவதாஸ் காந்தி, காந்தி மற்றும் கஸ்தூரிபாய் அம்மையாருக்கு நான்காவது மற்றும் கடைசி மகனாக பிறந்தவர். தந்தையின் விடுதலை போராட்ட இயக்கங்கள் மற்றும் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர். இவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து குடும்பத்துடன் மிக இளைய வயதில் இந்தியாவிற்கு வந்தார். இவர் பின்னாளில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்தில் எடிட்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் தேசிய தலைவரின் மகன், ஊடகவியலாளர் என்ற புகழ் பெற்ற இவர்..... ஒரு கிரிக்கெட் போட்டியை காண என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன செய்வீர்கள்?

என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த சகிரிக்கெட் வீரர் பேட்டிங் செய்ய போகிறார் / விலையாக போகிறார் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள். வேலைக்கு விடுப்பு போடுவீர்கள், ஸ்கூல், காலேஜ் போகாமல் கட் அடிப்பீர்கள், அதிக பட்சம் காதலியை ஒரு நாள் பார்க்காமல் தவிர்ப்பீர்கள்.

சிறைக்கு போவீர்களா?

சிறைக்கு போவீர்களா?

ஆனால், உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் விளையாட போகிறார் என்பதற்காக நீங்கள் ஒரு நாள் சிறையில் இருப்பீர்களா? இருந்தார் ஒருவர். அவர் தான் காந்தியின் கடைசி மற்றும் இளைய மகன் தேவதாஸ் காந்தி. தனக்கு விருப்பமான கிரிக்கெட் வீரரான டான் பிராட்மேன் ஆடுவதை காண்பதற்காக இவர் சிறையில் இருந்தார்.

தேவதாஸ் காந்தி!

தேவதாஸ் காந்தி!

தேவதாஸ் பிராட் மேனின் பெரும் ரசிகர். 1948ல் பிராட் மேன் இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்ட போது. அதுதான் எனது கடைசி பயணம் என்று கூறிவிட்டார். எனவே, பிராட் மேனை மைதானத்தில் காண இதுவே கடைசி வாய்ப்பு என்பதை உணர்ந்தார் தேவதாஸ். ஒரு மீட்டிங்கிற்காக லண்டனில் இருந்தா தேவதாஸ் காந்தி. முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடக்கிறது. எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று முயன்ற தேவதாஸ் காந்திக்கு அந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. அவர் வருவதற்குள் டிக்கெட்டுகள் விற்று போயின.

எப்படியாவது அங்கேயே தங்கி பாஸ் வாங்கிடலாம் என்று எண்ணினார், ஆனால், ஹோட்டல் அறைகள் முழுவதும் நிறைந்து வழிந்தன.

Image Source: wikipedia/commons

சிறைக்கு சென்றார்!

சிறைக்கு சென்றார்!

தேச தந்தையின் மகன் விரக்தியில் இருந்தார். எனவே, ஜூன் 10ம் நாள் நாட்டிங்காமில் இருந்த சிறை வார்டனிடம் பேசி, சிறையில் தங்க முடிவு செய்தார். உப்பு சத்தியாக்கிரத்திற்காக கைதான இவர். இப்போது தானாக முன்வந்து தனது உடன்பாடுடன் சிறைக்கு செல்கிறார்.

போட்டியை ரசித்தார்!

போட்டியை ரசித்தார்!

மறுநாள் காலை கைதிகளுடன் காலை உணவு அருந்திவிட்டு மறுநாள் மைதானத்திற்கு செல்கிறார் தேவதாஸ் காந்தி. ஏறத்தாழ இருபது வருடங்களாக இங்கிலாந்து பவுலர்களுக்கு ஒரு அரக்கனாக, பிசாசாக தோன்றிய பேட்டிங் வீரன் களமிறங்குகிறார். பிராட் மேன் அவரது ரசிகர்களை ஏமாற்றவில்லை.

அன்றைய போட்டியில் அவர் நாட் அவுட்டாக இருந்து 130 ரன்கள் குவித்தார். அப்போது அவருக்கு வயது 40. வயது தான் அதிகமே தவிர, அவரது ஆற்றல் குறையவில்லை. பிராட் மேனின் ஆட்டத்தை நேரில் கண்டு திரும்பினார் தேவதாஸ்.

வெற்றி!

அந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராட் மேன் விளையாடுவதை பார்க்க வேண்டும் என்று விரும்பிய தேவதாஸ் சிறைக்கு செல்ல கூட தயங்கவில்லை.

ஒரு நாள் இரவு முழுக்க சிறையில் தங்கி பிராட் மேனின் ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்திருக்கிறார் தேவதாஸ் காந்தி. இந்த சம்பவம் நடந்தது 1948 ஜூன் 10. ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Mahatma Gandhi's Son Devdas Decided To Stay In Jail?

70 Years Ago, Mahatma Gandhi's Son Decided To Stay In Jail Just To Watch Don Bradman Bat!
Story first published: Monday, June 11, 2018, 11:54 [IST]
Desktop Bottom Promotion