For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏலியன் வாழும் கிரகத்திற்கு மனிதர்கள் செல்ல முடியுமா? அதனால் ஏற்படும் அழிவு எப்படி இருக்கும்?

What If We Discovered Alien Life? Can humans survive on new planets? No Aliens have visited our planet before. even it is not possible in coming days also. what is space colonization?

By Staff
|

குறைந்தது கண்டுப்பிடிக்கக் கூடிய அளவில் மட்டுமே நூறு பில்லியனுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கேலக்ஸிக்கள் நமது பிரபஞ்சத்தில் இருப்பதாக அறியப்படுகிறது. மில்கிவேயில் ஐநூறு பில்லியன் கிரகங்கள் இருக்கின்றன. அவற்றுள் பத்து பில்லியன் கிரகங்கள் நமது பூமியை போன்ற தோற்றமும், தன்மையும் கொண்டிருக்கலாம் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர்.

இத்தனை கிரகங்களுக்கு இடையே நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து புதிய கிரகங்களை கண்டுப்பிடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால், இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட எந்த கிரகத்திலும் ஏலியன் வாழ்வதாக / வேற்றுக்கிரக வாசிகள் வாழ்வதாக கண்டறிந்தது இல்லை.

ஒருவேளை ஏலியன்கள் வாழும் கிரகங்கள் கண்டறியப்பட்டால்...? அவற்றின் வாழ்வியல் முறை, வாழ்க்கை அம்சங்கள் போன்றவற்றை நாம் அடைந்தால்...? என்ன வாகும்.. அது மனித வாழ்வின் அடுத்தக்கட்டமாக அமையுமா? அல்லது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நூற்றாண்டு காலமாக...

நூற்றாண்டு காலமாக...

சென்ற ஒரு நூற்றாண்டு காலமாக மனிதர்கள் வாழ பூமியை தவிர வேறு ஏதேனும் கிரகம் பயனுள்ளதாக, ஏற்புடையதாக நீர், காற்று, புவிஈர்ப்புவிசை கொண்டிருக்கிறதா? என்று உலக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். இதுநாள் வரை நாம் எந்த ஒரு வேற்றுகிரக வாசி கிரகத்தையும் கண்டுபிடித்தது இல்லை.

ஆனால், அப்படி கண்டிப்பிடிக்கும் பட்சத்தில் அது அபாயமான விளைவுகளை ஏற்படுத்தும் கெட்ட செய்தியாக தான் இருக்கும். அதனால், மனிதர்களின் அழிவு இறுதி நிலையில் இருக்கும் என்பதை மட்டும் அறிய முடியும் என சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

எப்படியான அழிவு?

எப்படியான அழிவு?

சரி! அழிவு என்றால் எப்படியானதாக இருக்கும், நாம் ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போன்ற ஒரு ஸ்பேஸ் ஷிப் வந்து நம் மீது பயங்கரமான தாக்குதல் நடத்தி அழித்து செல்லுமா? என்றால்... இல்லை!

ஒருவேளை நாம் ஏலியன் வாழும் கிரகம் தேடியோ, நாம் வசிக்கும் தன்மை வாய்ந்த கிரகத்தை தேடி பயணித்துக் கொண்டிருக்கிறோம் ஆயின்... ஏலியன்கள் நம் கிரகத்தை அழிக்க அவசியம் இருக்காது... மனிதர்களாகியே நாமே புவி அழிவு நிலையின் விளிம்பை அடைந்திருக்கும் தருணத்தில் தான் வேற்று கிரகத்தை தேடி பயணத்தை மேற்கொண்டிருப்போம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

எந்த மூலையில்?

எந்த மூலையில்?

இதுநாள் வரை நாம் அப்படியான வேற்றுகிரக வாசிகள் வாழும் கோள்களை கண்டதில்லை. நிச்சயம் இந்த பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு மூலையில், ஆங்காங்கே பிற உயிரினங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கோள்கள், வாழ்ந்து அழிந்த கோள்கள் இருக்கலாம். ஆனால், அதை நாம் இதுவரை கண்டதில்லை.

முடிவற்ற ஒரு அண்டமாக பரந்துவிரிந்து கிடக்கிறது பிரபஞ்சம். இது எப்படி உருவானது, இது எங்கே முடிகிறது என்பது ஆராய்ச்சியாளர்களை நீண்ட காலமாக குழம்ப செய்யும் கேள்விகளாகும்.

உயிரினங்கள்!

உயிரினங்கள்!

நம் பூமி மட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்தில் உருவாகி வாழ்ந்துக் கொண்டிருக்கும்.. வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படும் உயிரினங்களுக்கும் கூட, அவை எங்கே, எப்போது, எப்படி உருவாயின என்பது கண்டறிய முடியாத பெரும் புதிராக தான் இருக்கிறது.

சரி! வாழ்க்கை முறையானது எப்படி பிரபஞ்சத்தில் இருக்கும் கோள்களில் உருவாகிறது. பிரபஞ்சத்தின் எந்த மூலையில் உருவாகும் ஒரு உயிர் / வாழ்க்கையும் ஒரு நட்சத்திரத்தில் இருந்து தான் ஆரம்பமாகிறது. உயிர்கள் வாழ ஏதுவான தன்மை மற்றும் சூழல் கொண்ட சரியான நட்சத்திரத்தில்... சரியான கட்டத்தில் ஆர்கானிக் காம்பவுண்ட்ஸ் அவை தனக்கு தானே பொருத்தி, ஒன்று கூடி ஒரு வடிவம் பெறுகின்றன.

இப்படியான ஆர்கானிக் காம்பவுண்ட்ஸ் சுய பிரதிபலிப்பு எனப்படும் Self Replicating வடிவங்களாக உருவெடுக்கின்றன. கடைசியாக இவை ஒரு மல்டி செல் ஆர்கானிசமாக மாறுகின்றன.

கட்டுப்பாடு!

கட்டுப்பாடு!

இப்படியாக பெரும் மூளை கொண்டு உருவாகும் உயிர்கள் ஒரு கட்டத்தில் தான் உருவான கிரகத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றன. பிறகு, தங்களுக்கு ஏற்றவாறு அந்த கிரகத்தை மாற்றி அமைக்கின்றன. கிட்டத்தட்ட பூமியை தனது கட்டுக்குள் கொண்டாவத மனித இனத்தை போல.

தங்களின் தேவைக்கு ஏற்ப கிரகத்தை உருவாக்கி கொண்ட பிறகு அந்த உயிரினம் மேற்கொள்ளும் கடைசி நிலையாக அமைவது ஸ்பேஸ் காலனிசேஷன். அதாவது விண்வெளியில் குடியேறுவது. தாங்கள் உருவாகி, தங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொண்ட சொந்த கிரகத்தை விட்டு அந்த உயிரினம் விண்வெளியில் வேறொரு கிரகத்திற்கு குடியேற நினைப்பது ஏன்?

காரணங்கள்!

காரணங்கள்!

இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன... அளவுக்கு அதிகமான மக்கள் தொகை, இனிமேலும் அந்த கிரத்தில் உயிர் வாழ்வது கடினம் அல்லது உயிர்வாழ வேறு கிரகத்தை நாட வேண்டிய சூழல், வேறு கிரகத்தை கண்டறிந்து அங்கே வாழ்ந்து பார்க்க வேண்டும், வேற்று கிரகத்தை வென்று அங்கே வாழ வேண்டும் என்பது போன்ற ஆசைகள் பிறக்கும் தருவாயில் தான் இந்த ஸ்பேஸ் காலனிசேஷன் என்பது உருவாகிறது.

முடிவு!

முடிவு!

இந்த முயற்சிக்கான காரணங்கள் என்னவாக இருந்தாலும், இந்த ஸ்பேஸ் காலனிசேஷனில் காலடி எடுத்து வைக்கும் போது அவர்கள் அதுவரை பின்பற்றி வாழ்ந்து வந்த நாகரீகம் அல்லது தோற்றம் முடிவுக்கு வந்துவிடுகிறது என்பது தான் உண்மை.

நாம் தான் இந்த பிரபஞ்சத்தில் தோன்றிய முதல் உயிரினம் என்று கூறிட இயலாது. நம்மை விடவும் பில்லியன் வருடங்களுக்கு தோன்றி நம்மை விட தொழில்நுட்பம் மற்றும் நாகரீக வளர்ச்சி கொண்ட ஏலியன்கள் / வேற்றுகிரக வாசிகள் கூட பிரபஞ்சத்தில் இருக்கலாம்.

அவர்கள் இதுவரை நம் உலகை கண்டறியாமல் இருக்கலாம். அல்லது அவர்களின் முயற்சிகளும் நமது வேற்றுகிரக தேடுதல் வேட்டை போல தோல்வியில் முடிந்திருக்கலாம். ஒருவேளை கேலக்ஸியில் ஸ்பேஸ் காலனிசேஷன் என்பது சாத்தியமற்ற ஒன்றாக கூட இருக்கலாம்.

நேரம், காலம்!

நேரம், காலம்!

இன்னொரு கிரகத்தை தேடுவது, அதில் குடியேறுவது என்பது சாத்தியமற்றது என்பதை தாண்டி, அதற்கான நேரம், காலம் என்பது பில்லியன் வருடங்களை எடுத்துக் கொள்ளுமோ என்ற கேள்வியும் இருக்கிறது. அத்தனை ஆண்டு காலம் பயணித்து வேற்று கிரகத்தில் குடியேறுவது என்பது முன்பு நாம் கூறியது போல சாத்தியமற்றதற்கான காரணியாக இருக்கலாம்.

நாம் கண்ட தொழில்நுட்ப வளர்ச்சி தான் பெரிதென நாம் மார்த்தட்டிக் கொள்ள முடியாது. ஒருவேளை நமக்கு விஞ்சிய சக்தியை நாம் இதுவரை காணாமல் கூட இருக்கலாம். அல்லது அவர்கள் வாழ்ந்து அழிந்திருக்கலாம்.

அசுரர்கள்!

அசுரர்கள்!

மிக கொடூரமான அசுரத்தனமான வேற்றுகிரக வாசிகள் கூட இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்து வரலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அவை நம்மை, நம் உலகை அழிக்க நினைத்திருக்கலாம்... ஆனால், நம் பூமியை நெருங்கும் முன்னரே அவர்கள் அழிந்திருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதே போல, நாம் வேறு ஒரு ஏலியன்கள் வாழும் கிரகத்தை அடைய பயணம் மேற்கொண்டாலோ, முயற்சித்தாலோ இதே கதி நேரிடலாம் என்ற சந்தேகங்கள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நிலவுகின்றது.

அனுமானம்!

அனுமானம்!

தி கிரேட் பில்டர் எனப்படும் அனுமானத்திற்கு உரிய ஒரு எல்லையை கடக்க முடியாமல் புதிய கிரகத்தை அடையும் பாதி வழியில் வேற்றுகிரக வாசிகளின் பயணம் அழிவில் முடிந்திருக்கலாம். இன்று வாழ்வாதாரத்திற்காக நாம் புதிய கோள்களை ஆராய்ந்து வருகிறோம். இதுவரையில் மார்ஸ் கோளில் பாக்டீரியாக்கள் மற்றும் ஓசன் ஆப் யூரோப்பாவில் கோளில் மல்டி செலுலார் அனிமல்ஸ் இருக்கலாம் என்றே நம்புகிறோம். இவை இரண்டுமே கொஞ்சம் மனித வாழ்வுக்கு அசௌகரியமானவை தான்.

வேறு கிரகத்தில் வாழ ஸ்பேஸ் காலனிசேஷன் முயற்சியில் துவங்கிய பிற கிரக வாசிகள் / ஏலியன்கள் வெகு காலம் முன்பே அழிந்திருக்க கூடும். அந்த வகையில் பார்த்தால்... நாம் ஏறத்தாழ அழிவின் பாதி வழியில் பயணித்து கொண்டிருக்கிறோம் இருக்கலாம்... அல்லது நாம் இன்னும் அந்த தி கிரேட் பில்டரை நெருங்கவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

விதி!

விதி!

ஜெனிட்டிக் என்ஜினியரிங் தவறான வழியை அடைதல், வெப்பநிலை / பருவ நிலை மாற்றங்கள் அல்லது ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் தன்னை உருவாக்கியவர்களையே அழித்தல் போன்ற காரணத்தால்... நம் இனத்திற்கும் அழிவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ஆக மொத்தத்தில் வேற்றுகிரத்தை அடையும் பயணம் என்று தோல்வியில் முடியவே வாய்ப்புகள் அதிகம். ஒரு கிரகத்தை விட்டு வேறு கிரகத்திற்கு சென்று வாழ்தல் என்பது சாத்தியமற்றது. இது ஏலியன்களுக்கும், மனிதர்களுக்கும் பொருந்தும் ஒரு பொதுவான இயற்கையின் விதி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What If We Discovered Alien Life?

What If We Discovered Alien Life? Can humans survive on new planets? is that took a long journey... No Aliens have visited our planet before. even it is not possible in coming days also. Then What will happen if we try to discover and spread our human live in different planet. and what is space colonization and is it possible?
Desktop Bottom Promotion