For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துரியோதனன் அர்ஜுனனுக்கு வழங்கிய அற்புத பரிசு

பீஷ்மர் பாண்டவர்களை வதைக்க முடிவெடுத்த பின் அந்த திட்டத்தை துரியோதனன் கொண்டே முறியடித்தது நம்மில் பலரும் அறியாத கதை. துரியோதனன் ஏன் பாண்டவர்களை காப்பாற்றினான் என்பதை இங்கே பார்க்கலாம்.

|

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை பற்றி நாம் நன்கு அறிவோம். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே நடந்த மகாயுத்தமே குருஷேத்திர போர் என்று அழைக்கப்படுகிறது. இந்த போரில் துரியோதனன் புறம் பீஷ்மர், துரோணர், கர்ணன், சல்லியன் போன்ற மாவீரர்கள் இருந்தும் அவர்கள் செய்த அதர்மத்தின் விளைவாலும் பாண்டவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் அருளை பெற்றிருந்ததாலும் போரில் வெற்றி வெற்றி பெற்று தர்மத்தை நிலைநாட்டினர்.

what gift Arjuna got from Duryodhana

குருஷேத்திர போரில் கிருஷ்ணரின் துணையில்லாமல் பாண்டவர்களால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கவோ இல்லை உயிருடன் வாழ்ந்திருக்கவோ இயலாது. பலமுறை கிருஷ்ணர் பாண்டவர்களை போரில் காப்பாற்றினார். அதிலும் பீஷ்மர் பாண்டவர்களை வதைக்க முடிவெடுத்த பின் அந்த திட்டத்தை துரியோதனன் கொண்டே முறியடித்தது நம்மில் பலரும் அறியாத கதை. துரியோதனன் ஏன் பாண்டவர்களை காப்பாற்றினான் என்பதை இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வனவாசம்

வனவாசம்

அர்ஜுனனுக்கும், துரியோதனனுக்கும் இருந்த பகை பற்றி இந்த உலகமே அறியும். இருந்தும் அர்ஜுனன் ஒருமுறை துரியோதனின் உயிரை காப்பாற்றினான். பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த காலம் துரியோதனன் அவர்களை பின்தொடர்ந்து கொண்டிருந்தான். பாண்டவர்கள் ஒரு வனத்தில் குடில் அமைத்து அதில் தங்கினர். அங்கிருந்து கொஞ்சம் தொலைவில் துரியோதனனும், அவனின் வீரர்களும் தங்கினர்.

துரியோதனனை காப்பாற்றிய அர்ஜுனன்

துரியோதனனை காப்பாற்றிய அர்ஜுனன்

துரியோதனன் தங்கியிருந்த வனம் கந்தர்வர்களுக்கு சொந்தமானது. அவர்கள் வனம் வந்தபோது ஆணவமே உருவெடுத்த துரியோதனன் அவர்களை அவமதித்து அங்கிருந்து விரட்ட துணிந்தான். கோபமுற்ற கந்தர்வர்கள் துரியோதனின் வீரர்களை வதைக்க தொடங்கினர். ஆணவம் இருக்கும் அளவிற்கு துரியோதனனுக்கு வீரம் இல்லை. எனவே அவர்களிடம் தோற்றான், அவனை கந்தர்வர்கள் வதைக்க முயல அப்போது கணை கொண்டு அதனை தடுத்தான் அர்ஜுனன். மின்னலென வந்த அர்ஜுனன் கந்தர்வர்களை தோற்கடித்து துரியோதனனை விடுவித்தான்.

MOST READ: மா இலை செலவே இல்லாமல் சர்க்கரை நோயை குணப்படுத்தும் ஒரு அற்புத மூலிகை

காரணம்

காரணம்

கந்தர்வர்களை தோற்கடித்த அர்ஜுனன் அவர்களிடம் தன் செயலுக்கு மன்னிப்பு கோரி துரியோதனனை என் அண்ணன் பீமன் வதைப்பதாய் சபதம் பூண்டுள்ளார். அவரின் சபதத்தை நிறைவேற்றவே உங்களை தடுத்தேன் என்றும், இப்பொழுது இவன் செய்த தவறுக்கு விரைவில் போரில் நங்கள் தண்டனை அளிப்போம் என்று கூறினான். அர்ஜுனன் வார்த்தைக்கு மதிப்பளித்து கந்தர்வர்கள் அங்கிருந்து சென்றனர்.

துரியோதனனின் பரிசு

துரியோதனனின் பரிசு

சத்ரியனான துரியோதனன் தான் கந்தர்வர்களிடம் தோற்றதை எண்ணி வெட்கமுற்றான். இருப்பினும் தன்னை காப்பாற்றிய அர்ஜுனனுக்கு பரிசளிக்க விரும்பினான் அதுவே சத்ரிய தர்மம். அர்ஜுனனிடம் ஆணவத்துடன் உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள் என்று கூறினான். அதற்கு அர்ஜுனன் எனக்கு எந்த பரிசும் தேவையில்லை என்று கூறினான். இருப்பினும் துரியோதனன் உன் உதவியில் நான் வாழ்ந்ததாக இருக்க கூடாது எது வேண்டுமென்றாலும் கேள் என்று கட்டாயப்படுத்தினான். எனவே அர்ஜுனன் தனக்கு வேண்டும்பொழுது நானே அதனை கேட்டு வாங்கிக்கொள்கிறேன் என்று கூறினான்

குருஷேத்திர போர்

குருஷேத்திர போர்

மொத்தம் 18 நாட்கள் நடந்த குருஷேத்திர போரில் ஆரம்பத்தில் இருவரும் சமபலத்துடனே இருந்தார்கள். அர்ஜுனனின் மாவீரமும், கிருஷ்ணரின் சாதுர்யமும் பாண்டவ சேனையை கவசமாய் பாதுகாத்து வந்தது. போரில் தான் தோற்று விடுவோமோ என்ற கலக்கத்தில் துரியோதனன் தன் உடன் இருந்த அனைவரையும் வசைபாடவும், அவமதிக்கவும் தொடங்கினான். குறிப்பாக பீஷ்மரை மிகவும் அவமதித்தான்.

பீஷ்மரின் கோபம்

பீஷ்மரின் கோபம்

தன் வீரத்தையும், அஸ்தினாபுரத்தின் மீது தனக்கு இருக்கும் விஸ்வாசத்தையும் துரியோதனன் அவமதிக்கவே பெரும் கோபமுற்றார் கங்கை மைந்தர் பீஷ்மர்.துரியோதனன் மேலும் பாண்டவர்கள் மேல் தமக்கு இருக்கும் பாசத்தால்தான் அவர்களை வதைக்காமல் போர் புரிவது போல நடிக்கிறீர்களா என்று கொடும் கேள்விகளை கேட்டான். பொறுமை இழந்த பீஷ்மர் நாளை தாம் பாண்டவர்கள் ஐவரையும் வதைப்பதாக உறுதி பூண்டார்.

MOST READ: இந்த ஒரு எண்ணெய், ஒரே மாதத்தில் தலைமுடி உதிர்வதை நிறுத்தும் தெரியுமா?

அதிசய அம்புகள்

அதிசய அம்புகள்

பீஷ்மரின் வார்த்தையில் நம்பிக்கையில்லாத துரியோதனன் அவர்களை எப்படி வதைக்க போகிறீர்கள் என்பதை இப்பொழுதே தன்னிடம் கூறும்படி கேட்டான். பீஷ்மர் தன் யோகவலிமையை பயன்படுத்தி ஐந்து அதிசய தங்க அம்புகளை உருவாக்கினார். அந்த அம்புகள் எவ்வளவு பெரிய மாவீரனையும் சாய்க்க கூடியவை. அதனை எங்கிருந்து எய்தாலும் பாண்டவர்கள் மடிவார்கள் என்று கூறினார் பீஷ்மர். இந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்த துரியோதனன் பீஷ்மர் மேல் நம்பிக்கை இல்லாததால் அந்த அம்புகளை தன்னிடம் கொடுக்கும்படி கேட்டான். அவனின் ஆணைக்கிணங்க பீஷ்மரும் அந்த அம்புகளை அவனிடம் கொடுத்தார்.

கிருஷ்ணரின் தந்திரம்

கிருஷ்ணரின் தந்திரம்

சர்வமும் அறிந்த ஸ்ரீகிருஷ்ணருக்கு இது தெரியாமல் இருக்குமா என்ன? அடுத்த நாள் போரின் வியூகங்களை பற்றி தன் சகோதரர்களுடன் ஆலோசித்து கொண்டிருந்த அர்ஜுனனை அழைத்து பீஷ்மரின் அற்புத அம்புகளை பற்றி எடுத்து கூறினார். கலக்கமுற்ற அர்ஜுனன் என்ன செய்வது என்று யோசித்த போது கிருஷ்ணர் துரியோதனன் அளித்த வாக்கை அர்ஜுனனுக்கு நினைவூட்டினார்.

அர்ஜுனனின் கலக்கம்

அர்ஜுனனின் கலக்கம்

துரியோதனனிடம் இருந்து அந்த அம்புகளை பரிசாக பெறுவது அர்ஜுனனுக்கு உசிதமாக தோன்றவில்லை. ஆனால் கிருஷ்ணரோ இதில் தவறு எதுவும் இல்லை, அவன் அளித்த வாக்கு அதை பெற வேண்டியது உன் உரிமை என்று உபதேசித்து அந்த அம்புகளை பெற்றுவரும் படி அர்ஜுனனை துரியோதனனின் பாசறைக்கு அனுப்பி வைத்தார்.

பரிசு கேட்ட அர்ஜுனன்

பரிசு கேட்ட அர்ஜுனன்

தான் பாசறைக்கு வந்த அர்ஜுனனை அமர வைத்து அவனிடம் எதற்கு வந்தாய் என்று கேட்டான் துரியோதனன். துரியோதனன் அளித்த வாக்கை அவனுக்கு நியாபகப்படுத்திய அர்ஜுனன் தனக்கு இப்போது ஒரு பரிசு வேண்டுமென்று கேட்டான். இதை கேட்டு நகைப்புற்ற துரியோதனன் போர் முனையில் இருக்கும்போது நீ என்ன பரிசு கேட்கப்போகிறாய். என்ன வேண்டுமோ கேள் என்று கூறினான். அதற்கு அர்ஜுனன் கிருஷ்ணர் கூறிய படி பீஷ்மர் உனக்கு வழங்கிய அந்த ஐந்து தங்க அம்புகள் வேண்டுமென்று கேட்டான்.

MOST READ: இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது ஆபத்தானது என்பது உண்மையா?

துரியோதனனின் முடிவு

துரியோதனனின் முடிவு

இதை சற்றும் எதிர்பார்க்காத துரியோதனன் பேரதிர்ச்சிக்கு ஆளானான். தன்னிடம் அம்புகள் இருப்பது அர்ஜுனனுக்கு எப்படி தெரியும் என்று மனதிற்குள் குழம்பிய துரியோதனனுக்கு வாசுதேவ கிருஷ்ணர்தான் இந்த சூழ்ச்சியை செய்திருப்பார் என்று புரிந்தது. இருப்பினும் சத்ரிய தர்மப்படி கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த அம்புகளை அர்ஜுனனிடம் ஒப்படைத்தான் துரியோதனன். இந்த முறையும் பாண்டவர்களை காப்பாற்றியது வசுதேவரின் சாதுர்யம்தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what gift Arjuna got from Duryodhana

In Mahabharata Duryodhana gave such a special gift to Arjuna during war time. Check out what gift Arjuna got from Duryodhana.
Desktop Bottom Promotion