Just In
- 3 hrs ago
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- 14 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 17 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 18 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
Don't Miss
- News
குழப்பங்களின் கோபுரத்தில் நிற்கிறார் முதல்வர் எடப்பாடி... ஆர்.எஸ்.பாரதி சாடல்
- Movies
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- Technology
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த மூன்று ராசிகளுக்கும் இந்த வாரம் முழுக்க பெருத்த லாபம்... தொழிலும் ஏறுமுகம் தான்...
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள்.
ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயமாகவே நாம் நினைத்தாலும், அதற்குள்ளே சில அறிவியலும் இருக்கிறது. 9 கோள்களும் எப்படி இயங்குகின்றனவோ அதை வைத்து, நம்முடைய வாழ்க்கையைக் கணிக்கிற முறை தான் இந்த ஜோதிடம். அந்த ஜோதிடத்தில் இந்த வாரம் 15.10.18 முதல் 21.10.18 வரையிலும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

மேஷம்
உங்களுடைய வேலை சம்பந்தமாகவும் பதவி உயர்வு சம்பந்தமாகவும் இட மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். வேலையில் உங்களுக்கு இருந்து வந்த சில மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களுடைய மனதுக்குள் தோன்றும் புதிய எண்ணங்களைச் செயல்படுத்துவீர்கள். பெரிய ஆன்மீக மகான்களின் தரிசனங்கள் கிடைக்கும். பெற்றோர்களுடைய உறவினர்களின் வழியே சிறுசிறு தொல்லைகள் வரும். அனுசரித்துப் போவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகள் உங்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும். நீங்கள் செய்கின்ற செயல்களால் பிறரால் பாராட்டப்படுவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கொஞ்சம்கவனம் தேவைப்படுகிறது. வியாபாரம் தொடர்பாக வெளியிடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்ளுங்கள். வெளியிடப் பயணங்கள் தொழிலுக்கு சாதகமாக அமையும்.

ரிஷபம்
உயர் கல்வியில் இருக்கின்ற மாணவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. உங்களுடைய பேச்சுக்களில் சிறிது நிதானம் தேவைப்படுகிறது. குடும்பத்தோடு குல தெய்வ வழிபாடு செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும். சின்ன சின்ன உடல் உபாதைகள் வந்து போகும். உங்களுடன் நெருங்கிய நண்பர்களிடம் வீண் விவாதங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் உள்ள பெரியவர்களால் உங்களுக்கு பல ஆதாயங்களும் பயனுள்ள ஆலோசனைகளும் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய முழு திறமையும் உழைப்பும் வெளிப்படும். உங்களுடைய புதிய முயற்சிகளால், கொஞ்சம் சிந்தித்து செயல்படுத்துங்கள். ஆன்மீக காரியங்களில் உங்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும்.
MOST READ: எந்த ரெண்டு ராசிக்காரர்கள் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை பிரச்னை இல்லாம இருக்கும்?

மிதுனம்
பெற்றோர்களுடைய உறவினர்களின் வழியில் உங்களுக்கு சாதகமான செய்திகள் வந்து சேரும். நீங்கள் பணிபுரியும் இடங்களில் உங்களுடைய உயர் அதிகாரிகளின் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் ஏற்படும். சின்ன சின்ன நுட்பமான விஷயங்களில் கூட, உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். வழக்கம்போல் கோபப்படாமல், கொஞ்சம் நிதானமாகப் பேசுவது நல்லது. நண்பர்குளுடன் சேர்ந்து வெளியிடங்களுக்குச் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழிலில் உங்களுடைய பங்குதாரர்களால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் எதிர்பாராத தனவரவுகள் உங்களுக்கு வந்து சேரும். அதனால் மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாகனங்கள் தொடர்பான செலவுகள் அவ்வப்போது தோன்றி மறையும் வாய்ப்பு உண்டு.

கடகம்
தொழிலில் உங்களுடைய புதிய முயற்சிகள் யாவும் உங்களுக்கு சாதகமான பலன்களையே தரும். புதிய நபர்களுடைய அறிமுகங்கள் உங்களுக்குக் கிடைக்கும். அதனால் மகிழ்ச்சியும் கொண்டாட்ட மனநிலையும் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். புதிதாக வாகனங்கள் வாங்குவதற்கான எண்ண ஓட்டங்கள் உண்டாகும். உங்களுடைய செயல்பாடுகளால் செல்வாக்கும் உயர ஆரம்பிக்கும். குழந்தைகள் மூலம் உங்களுக்கு ஆதாயமான சூழல்கள் உருவாகும். உடல் நலத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கும். வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அனுசரித்து சென்றால், கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியும்.

சிம்மம்
வேலையில் நீங்கள் எதிர்பார்த்த தனவரவு கைக்கு வந்து சேரும். முக்கிய அதிகாரிகள் பணியில் இருப்பவர்களுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். புதிதாக இடம் வாங்குவதற்கான முடிவுகளில் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுங்கள். தாயின் வழி உறவினர்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தாய்மாமன் வழியில் நல்ல செய்திகள் காதுகளுக்கு வந்து சேரும். தொழில் சம்பந்தமாக நண்பர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பயணங்களின் மூலம் ஆதாயங்கள் உண்டாகும். தேவையில்லாத ஆசைகளால் வீண் விரயச் செலவுகள் உண்டாகும். நீங்கள் பணிபுரியும் இடங்களில் உங்களுக்கான பணிச்சுமையும் பொறுப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
MOST READ: நீங்க மேஷ ராசியா? அப்போ திருமண உறவில் கட்டாயம் இந்த 5 பிரச்னைய சந்திச்சே ஆகணும்

கன்னி
வேலை செய்கின்ற இடத்தில் உங்களுடைய கடின உழைப்பு மற்றும் முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். பண வரவு உண்டாகும். வெளியிடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வதால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாவதோடு, அனுபவ அறிவும் கிடைக்கும். வர்த்தகத் துறைகளில் வியாபாரங்கள் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்களால் பெரும் லாபம் உண்டாகும். சுப செய்திகள் வந்து சேரும். அதனால் மனம் மகிழ்ச்சியில் இருப்பீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த ஆசைகள் நிறைவேறும். நணடபர்களுடன் பயணங்கள் மேற்கொள்வது உங்களுடைய மனதில் நல்ல மாற்றங்களை உண்டாக்கும். பரம்பரை சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளில் தெளிவான முடிவு உங்களுக்குக் கிடைக்கும்.

துலாம்
தொழிலில் உங்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் உண்டாகும். மனதுக்குள் பலவிதமான சிந்தனைகளும் பெற்றோர்கள் மீதான அக்கறையும் உண்டாகும். பெற்றோர்களிடம் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். நிலுவையில் இருந்து வந்த பணவரவுகள் உண்டாக வாய்ப்புண்டு. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, மனம் மகிழ்ச்சி உண்டாகும். கடன் தொல்லையால் சில சங்கடங்கள் உண்டாகும். சொத்துக்கள், வீடு, மனை வாங்குவதற்கான எண்ணங்கள் தோன்றும்.

விருச்சிகம்
செய்கின்ற வேலைகளை முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். சுப செய்திகள் வந்து சேரும். உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். உங்களுடைய உடன் பிறப்புகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்்து அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதால் உங்களுக்கு சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்களுக்கு இடையே செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாலினத்தவர்களிடம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. வெளியூர் பயணங்கள் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும்.
MOST READ: இந்த ஆறில் உங்க உள்ளங்கை எந்த கலர்னு சொல்லுங்க... உங்க விதி எப்படினு தெரிஞ்சிக்கோங்க...

தனுசு
தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு பெற்றோர்களின் துணை உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். தொழிலில் உங்களுடைய நுணுக்கமான செயல்திறனால் லாபம் அதிகரிக்கும். சுப செய்திகள் மூலம் சுப விரயச்செலவுகள் ஏற்படும். நீண்ட நாள் ஆசை ஒன்று உங்களுக்கு நிறைவேறும். பணியில் உங்களுடைய பொறுப்புகளும் இட மாற்றங்களும் உண்டாகும். மனதுக்குள் குழப்பங்க்ள உ்ணடாகும். அதனால் முடிவெடுப்பதில் தடுமாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.

மகரம்
முக்கிய உத்தியோகஸ்தர்கள் உள்ளவர்கள் தங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். பெற்றோர்களுடைய உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எந்த செயலாக இருந்தாலும் அதை கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். வியாபாரங்களில் நல்ல லாபங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலில் ஆதாயங்கள் ஏற்படும். தேவையற்ற செயல்கள் செய்தீர்கள் என்றால் நெருக்கடியான சூழலைச் சந்திக்க வேண்டியிருக்கும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். மனதுக்குள் உண்டாகும் குழப்பங்களை மற்றவர்களிடம் ஆலோசித்து தெளிவு பெற்றுக் கொள்வது நல்லது.
MOST READ: பித்ருக்களின் அடையாளமாக ஏன் காகத்தை குறிப்பிடுகிறோம்?

கும்பம்
மனதுக்குள் இருக்கின்ற சில பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் பணிபுரியும் இடங்களில் இருந்து வந்த சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். தொழில் தொடர்பான முதலீடுகளால் உங்களுக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களிகால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். போட்டினில் வெற்றி வாய்ப்புகள் உங்கள் பக்கமே இருக்கும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். அதனால் உங்களுடைய செல்வாக்கும் உயர ஆரம்பிக்கும். நீங்கள் செய்கின்ற செயல்களில் வேகம் அதிகரிக்கும்.

மீனம்
உங்களுடைய தொழில் ரீதியான பயணங்கள் அனுகூலங்களைக் கொடுக்கும். அதனால் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் குடும்பத்தினரிடம் சின்ன சின்ன வாக்குவாதங்கள் உண்டாகும். நீங்கள் கொஞ்சம் நிதானத்துடன் இருப்பது நல்லது. தெளிவான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயங்கள் ஏற்படும். தாய்வழைி உறவினர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழிலில் பெரியோர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள்.