For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹிட்லருக்கும் அவரின் சகோதரி மகளுக்கும் இருந்த சோகமான காதல் கதை தெரியுமா?

ஹிட்லர் என்றாலே கொடூரமானவர் என்றுதான் உலகம் முழுவதும் கருத்து உள்ளது. அது ஓரளவுக்கு உண்மையாக இருந்தாலும் அவரும் காதல்வயப்பட்டது பலரும் அறியாத ஒரு தகவலாகும்.

|

உலக வரலாறு என்று வரும்போது அதில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் ஹிட்லர். உலகின் மிகமுக்கியமான அதேசமயம் கொடூரமான சர்வாதிகாரியாக கருதப்படுபவர் ஹிட்லர். ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் உலகமே தன் காலின் கீழ் இருக்க வேண்டுமென நினைத்தார். அதற்காக அவர் செய்த செயல்கள் உலகையே அச்சுறுத்தியது.

Untold and tragic love story of Adolf Hitler

ஹிட்லர் என்றாலே கொடூரமானவர் என்றுதான் உலகம் முழுவதும் கருத்து உள்ளது. அது ஓரளவுக்கு இருந்தாலும் அவரும் காதல்வயப்பட்டது பலரும் அறியாத ஒரு தகவலாகும். அப்படியே அறிந்திருந்தாலும் அது அவரின் இறுதி காதலை பற்றித்தான் இருக்கும். ஆனால் அவரின் முதல் காதலை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பதிவில் ஹிட்லரின் முதல் காதலி யார் என்பதையும் அந்த காதலின் முடிவு என்னவென்பதையும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹிட்லரின் காதலி

ஹிட்லரின் காதலி

Image Courtesy

ஹிட்லரின் முதல் காதலியின் பெயர் கெலி ரூபல். கெலியின் 17வது வயதில்தான் ஹிட்லர் அவர் வாழ்க்கையில் நுழைந்தார். ஹிட்லர் கெலியின் மாமா ஆவார். கெலியின் அம்மா ஏஞ்செலாவும் ஹிட்லரும் ஒரே அப்பாவிற்கு பிறந்தவர்கள். ஹிட்லருக்கும், கெலிக்கும் இடையேயான உறவு 1925ல் ஏஞ்செலாவின் அப்பா இறந்த பிறகுதான் தொடங்கியது.

உறவு மலர்தல்

உறவு மலர்தல்

தான் இன்னும் 6 வருடங்கள் ஹிட்லரின் ஆதரவுடன்தான் வாழ வேண்டும் என்று கெலி உணர்ந்தபோது ஹிட்லருக்கும், கெலிக்கும் இடையேயான வயது வித்தியாசம் 19 வருடம் ஆகும். காலங்கள் கடந்தது ஹிட்லரும், கெலியும் நெருக்கமானார்கள். 4 வருடங்கள் கழித்து கெலியின் அம்மா ஏஞ்செலா அந்த வீட்டை விட்டு வேறு இடத்திற்கு செல்ல முற்பட்டார். அவருக்கு வேறு வாய்ப்பும் இல்லை. ஏனெனில் அது ஹிட்லரின் கட்டளை ஆகும்.

கெலியின் முக்கியத்துவம்

கெலியின் முக்கியத்துவம்

ஆண்டுகள் கடந்தது, கெலி ரூபல் ஹிட்லரின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டார். ஹிட்லர் செல்ல முடியாத வணிக கூட்டங்களுக்கு அவருக்கு பதிலாக செல்வது, அவரின் அதிகாரிகளுக்கு கட்டளையிடுவது, அவருடன் வெளியே செல்வது போன்ற செயல்களை செய்துகொண்டிருந்தார். இரவு பகலாக கெலியின் ரம்மியமான பேச்சில் ஹிட்லர் மயங்கி இருந்தார். ஹிட்லருக்கு கெலி ஒரு போதையாகவே மாறிப்போனார்.

MOST READ: குரு பெயர்ச்சி முடிஞ்சிருச்சு... இன்னைக்கு எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது யோகம்?

ஹிட்லரின் நெருக்கடி

ஹிட்லரின் நெருக்கடி

கெலி எங்கு சென்றாலும் ஹிட்லரும் அவர் உடனேயே செல்வார். தன்னால் செல்ல முடியாத நேரத்தில் கெலியை கண்காணிக்க ஒரு பாதுகாவலர்களை அனுப்புவார். இது ஒருவகையான சந்தேகம் கலந்த பொறாமை என்றுகூட சொல்லலாம். ஆரம்பத்தில் கெலியின் வெறும் பாதுகாவலராக மட்டுமே இருந்த ஹிட்லர் நாளடைவில் அவர் மீது அதிகாரம் செலுத்த தொடங்கிவிட்டார். கெலியாலும் சக்திவாய்ந்த இந்த அடக்குமுறையாளரை எதிர்கொள்ள முடியவில்லை.

கெலியின் சுதந்திரம்

கெலியின் சுதந்திரம்

நாட்கள் கடக்க கடக்க கெலியின் சுதந்திரமும், மகிழ்ச்சியும் பறிபோனது. கெலிக்கும், அவரின் ஓட்டுனருக்கு இடையே இருந்த உறவு ஹிட்லருக்கு தெரிய வந்தவுடன் ஹிட்லர் கெலியின் காதலரை கொன்றுவிட்டார். அதன்பின் கெலியின் சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டது. அவருக்கு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது, அவரின் நண்பர்களை கூட பார்க்க அனுமதி அளிக்கப்படவில்லை. தன்னுடைய போதையாக இருந்த அந்த இளம்பெண்ணை இழக்க ஹிட்லருக்கு மனம் வரவில்லை. கெலியின் மீது தீவிர காதலில் இருந்தார் ஹிட்லர்.

ஹிட்லரின் பொறாமை

ஹிட்லரின் பொறாமை

ஹிட்லரின் காதல் அதிகரிக்க அதிகரிக்க அவரின் பொறாமையும், கோபமும் அதிகரித்து கொண்டே சென்றது. தன்னுடைய பாதுகாப்பற்ற உணர்வால் கெலியின் மீதான அவரின் கட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவர்களுக்குள் இருந்த காதல் நோய்வாய்ப்பட்ட காதலாக மாறிவிட்டது. அதேசமயம் உலகளவிலும் ஹிட்லருக்கு அச்சுறுத்துகள் அதிகரித்தது.

கெலி விலகி செல்ல நினைத்தல்

கெலி விலகி செல்ல நினைத்தல்

கெலியின் சுதந்திரம் பறிக்கப்பட்டவுடன் அவர் ஹிட்லரிடம் இருந்து விலகி செல்ல நினைத்தார். ஜெர்மனியில் இருந்து விலகி வியட்னாமிற்கு சென்று ஒரு பாடகியாக மாற வேண்டும் அங்கே ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையை தொடங்க எண்ணினார்.

MOST READ: உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க, பீட்ரூட்டை இவற்றுடன் சேர்த்து குடித்தாலே போதும்..!

கெலியின் முடிவு

கெலியின் முடிவு

ஹிட்லரின் காதல் முடிவுக்கு வரும் காலமும் வந்தது. ஒருநாள் ஹிட்லர் வெளியே செல்லும்போது கேலி ஜன்னல் அருகில் வந்து எது பற்றியோ கத்தி கேட்டார்.அதற்கு ஹிட்லர் அறவே முடியாது என்று பதிலளித்து விட்டார். பிறகு கெலி வீட்டில் அவர் மார்பில் துப்பாக்கி குண்டு துளைக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அந்த துப்பாக்கி ஹிட்லரிடம் இருந்து திருடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அது கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்றும் புரியாத மர்மமாக உள்ளது.

கெலியின் கடிதம்

கெலியின் கடிதம்

அது தற்கொலையாக கருதப்பட்டாலும் கெலியின் டைரியில் தற்கொலை பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை. அந்த கடிதத்தில் அவரின் எதிர்கால திட்டங்கள் பற்றி மட்டுமே எழுதப்பட்டிருந்தது. இதற்கு காரணம் " திருப்தியற்ற கலைத்துவ சாதனை " என்று கூறப்பட்டது. அதன்பின் அவரின் உடல் கத்தோலிக்க கல்லறையில் புதைக்கப்பட்டது.

ஹிட்லரின் மனஉளைச்சல்

ஹிட்லரின் மனஉளைச்சல்

இந்த செய்தியை கேட்டு ஹிட்லர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. கெலியின் கல்லறையில் நீண்ட நேரம் ஹிட்லர் அழுததாகவும் கூறப்படுகிறது. ஆனால் கெலியின் மறைவு ஹிட்லரின் இலட்சியத்தை தடுக்கவில்லை. இந்த செய்தி விரைவில் மக்களின் நினைவுகளில் இருந்து திட்டமிட்டு அழிக்கப்பட்ட்டது.

ஹிட்லரின் காதல்

ஹிட்லரின் காதல்

ஹிட்லர் கெலியை தன் பாலியல் ஆசைகளுக்காக பயன்படுத்தி கொண்டாரா என்பது தெரியாத ஒன்று. ஆனால் கெலி மீது அவர் அளவற்ற அன்பு வைத்திருந்தார் என்பது உண்மை. ஏனெனில் கெலிக்கு அவ்வளவு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் இது அனைவராலும் ஒரு முறையற்ற உறவாகவே கருதப்படுகிறது. கெலியின் மறைவுக்கு பின்னர் தன் இறுதிக்காலத்தில் ஹிட்லர் ஒரு பத்திரிகையாளரை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: உதடு லேசா வீக்கமா இருக்கா?... அத உடனே எப்படி சரிசெயய்லாம்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync history வரலாறு
English summary

Untold and tragic love story of Adolf Hitler

Hitler was one of the most cruel ruler of the world. But he had a tragic love story too.
Desktop Bottom Promotion