Latest Updates
-
மே 7-ம் தேதி இந்த திசையில் மணி பிளாண்ட் வையுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும் ரகசியம்! -
பாபா வங்கா கணிப்பு படி அடுத்த 100 வருடத்தில் உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா? -
கேந்திர திரிகோண ராஜயோகம்: புதனால் மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
வீட்டில் சிரிக்கும் புத்தரை வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்
பல்வேறு கலாச்சரங்கள் கலந்துள்ள இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மதத்தினரும் வீட்டில் வைத்திருக்கும் ஒரு பொருள் என்றால் அது சிரிக்கும் புத்தர் சிலைதான்.
பல்வேறு கலாச்சரங்கள் கலந்துள்ள இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மதத்தினரும் வீட்டில் வைத்திருக்கும் ஒரு பொருள் என்றால் அது சிரிக்கும் புத்தர் சிலைதான். இதனை தமிழ்நாட்டில் செட்டியார் பொம்மை என்று கூறுவார்கள். வீட்டில் இந்த சிலையை வைத்தால் வீட்டில் உள்ள அதிர்ஷ்டமும், செல்வமும் பெருகும் என்பது பரவலாக நிலவும் ஒரு நம்பிக்கையாகும்.

இது உண்மையும் கூட, ஆனால் இந்த சிரிக்கும் புத்தரை பற்றி நமக்கு தெரியாத தகவல்கள் நிறைய இருக்கிறது. எந்த இடத்தில் வைத்தால் இவர் என்ன நன்மையை செய்வார், எந்த இடத்தில் வைக்கக்கூடாது, யாருக்கு இதனை பரிசாக கொடுக்கக்கூடாது என சிரிக்கும் புத்தரில் ஏராளமான மர்மங்கள் மறைந்துள்ளது. இந்த பதிவில் அந்த மர்மங்களுக்கான பதில்களை பார்க்கலாம்.

சிரிக்கும் புத்தரின் வரலாறு
சிரிக்கும் இந்த புனித புத்தரின் இயற் பெயர் ஹோடேய் அல்லது பு-டாய் ஆகும். கிட்டதட்ட 1000 ஆண்டுகளுக்கு முன் புத்தமத துறவியாக இருந்த இவர் நாளடைவில் புத்த மதத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்டார். இவரின் இயற்கையான இனிமையான குணமும், பெரிய தொப்பையும், அழகான சிரிப்பும் இவருக்கு சிரிக்கும் புத்தர் என்று பெயரை பெற்றுத்தந்தது.

ஏழை மற்றும் குழந்தைகளின் பாதுகாவலர்
சிரிக்கும் புத்தரின் சிலைகள் பெரும்பாலும் வழுக்கைத்தலையுடன் சிரிக்கும் மனிதர் பெரிய தொப்பையுடன் நிற்பார். இது மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் மற்றும் முழுமைத்தன்மை போன்றவற்றை குறிக்கும். இவரின் சிலையோ அல்லது படமோ பெரும்பாலான கோவில்களில், கடைகளில், இல்லங்களில் கூட இருப்பார். இவர் எப்போதும் துணியுடனும் அதில் சில புனிதமான பொருட்களுடனும், குழந்தைகளுக்கான இனிப்புகளையும், விதைகளையும் வைத்திருப்பார். இவர் குழந்தைகளின் பாதுகாவலராக கருதப்படுகிறார்.

கையில் இருக்கும் கிண்ணம்
சிரிக்கும் புத்தர் எப்போதும் கையில் தானம் பெற ஒரு கிண்ணத்தை வைத்திருப்பார் இது புத்த மதத்தின் இயற்கையான பண்பாகும். சில இடங்களில் இவர் அமர்ந்திருக்கும் தொனியில் கையில் ஒரு விசிறியுடன் இருப்பார். இது உணர்த்தும் பாடம் என்னவென்றால் இவர் நாம் கேட்கும் வரங்களை வழங்கக்கூடியவர் என்பதாகும். உலகில் உள்ள துன்பங்களை விரட்டுவதே இவரின் தலையாய கடமையாகும்.

சிரிக்கும் புத்தரின் தொப்பை
புராணங்களின் படி சிரிக்கும் புத்தரின் பெரிய தொப்பையை தேய்த்தால் அது உங்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் பணவரவை தரும். ஹோடேய் அதிர்ஷ்டத்தின் கடவுளாக பலராலும் கருதப்படுகிறார். பல ஆண்டுகளாக, அவர் மகிழ்ச்சி, செழிப்பு, உள்ளடக்கம் போன்ற பல பயனுள்ள பண்புகளை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

செல்வம் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம்
உங்கள் வீட்டில் சிரிக்கும் புத்தரின் சிலையை வைப்பது உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவை பரவச்செய்யும். இவர் நமக்கு எப்போதும் உணர்த்தும் ஒரு பாடம் என்னவென்றால் எப்போதும் பேராசை மட்டும் கூடாது. இவரது பிறந்த நாளான மே 8ஆம் நாள் இவரின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவது சிறப்பானதாகும். அவ்வாறு வழிபடும்போது நீங்கள் மனவேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.

குடும்ப பிரச்சினைகளை தீர்க்க
உங்கள் குடும்பத்தில் தொடர்ந்து வாக்குவாதங்கள் ஏற்பட்டாலோ, பதட்டமான சூழ்நிலை நிலவினாலோ உங்கள் இல்லத்தில் சிரிக்கும் புத்தரின் சிலை அல்லது படத்தை வைப்பதன் மூலம் அதனை சரிசெய்யலாம். அவரை கிழக்கு திசையை பார்க்கும்படியோ அல்லது எங்கு வைத்தால் உங்கள் வீட்டில் அனைவரையும் பார்க்க முடிகிறதோ அந்த இடத்தில வைத்துவிடவும். அதன் உங்கள் குடும்ப சூழ்நிலை தானாக மாறும்.

பணவரவை அதிகரிக்க
உங்களுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, சுய வளர்ச்சி, வெற்றி போன்றவை பெற ஆசையாக இருந்தால் சிரிக்கும் புத்தரை உங்களின் தனிப்பட்ட இடத்தில் வைத்துக்கொள்ளவும். அவர் உங்கள் இலட்சியங்களை அடைவதில் உறுதுணையாக இருப்பார்.

அதிர்ஷ்டம் அதிகரிக்க
உங்கள் வீட்டின் முன் அறையிலோ அல்லது உணவருந்தும் அறையிலோ அல்லது படுக்கையறையிலோ தென்கிழக்கு திசையில் சிரிக்கும் புத்தரை வைத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டமும், பணவரவும் அதிகரிக்கும். உயர் பதிவியில் இருப்பவர்கள், அரசியலில் ஈடுபடுபவர்கள் போன்றோர் தங்கள் வேலை செய்யும் இடத்தில் சிரிக்கும் புத்தரை வைத்துக்கொண்டால் எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறையும். மேலும் இதனால் தெளிவான மனநிலையும், பதற்றத்தையும் குறைக்கும்.

துரோகம் மற்றும் வாக்குவாதத்தை சமாளிக்க
உடன் வேலை செய்பவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் துரோகங்களை சமாளிக்க இந்த சிலையை உங்கள் வேலை மேஜையின் மீது வையுங்கள். இது உங்களுக்கு மற்றவர்களால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் உங்கள் எதிர்காலத்தையும் பிரகாசமாக்கும். மாணவர்களை பொறுத்தவரையில் நீங்கள் படிக்கும் மேஜையின் மீது இதனை வைப்பது உங்கள் கவனத்தை சிதறவிடாமல் பார்த்துக்கொள்வதுடன் படிப்பு தொடர்பான அதிர்ஷ்டத்தையும் வழங்கும்.

பரிசளிக்கும் முன் எச்சரிக்கையாக இருங்கள்
உங்களுக்கு பிடித்தவர்கள் கஷ்டப்படும் போது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்க நீங்கள் தரக்கூடிய ஒரு அற்புதமான பரிசு இந்த சிரிக்கும் புத்தர் ஆவார். இது அவர்களின் கஷ்டங்களை போக்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டுவரக்கூடியதாகும். ஆனால் எச்சரிக்கையாக இருங்கள் சிரிக்கும் புத்தர் அதிக மரியாதையை எதிர்பார்ப்பவர் எனவே அவரை தவறான இடங்களில் வைக்கக்கூடாது. குறிப்பாக சமையலறை, குளியலறை மற்றும் தரை போன்ற இடங்களில் வைக்கக்கூடாது. அதேபோல அவர் உங்கள் கண்களை கொண்டு நேராக பார்க்கும் உயரத்தில் இருக்க வேண்டும். நீங்கள் தலைகுனிந்து பார்த்தாலும் அது அவருக்கு ஏற்படும் அவமானமாகும். அப்படி செய்யும்போது அது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications