For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்த 10 இடங்கள்தான் மாந்திரீகம் செய்வதற்கு பெயர் பெற்றதாம்... இங்க செய்ற மந்திரம் உடனே பலிக்குதாம்..

  By Suganthi Rajalingam
  |

  இந்து கோயில்கள் என்றாலே மந்திர தந்திரங்களுக்கு பேர் போனது. அங்கு வழிபடும் பக்தர்களும் மந்திர தந்திரங்களை ஓதி தான் வழிபாடே செய்கின்றனர்.

  Top Ten mysterious Tantra Temples

  இந்த மாதிரியான சிறப்பு வாய்ந்த கோயில்களில் 'உயிர்ப் பலி' என்ற பெயரில் விலங்குகளை கடவுளுக்கு காவு கொடுக்கும் சடங்குகளும் காலங் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட சில கோயில்களை பற்றிய தொகுப்பு. கஜூராகோ கோயில், கால பைரவர் கோயில், ஜ்வாலாமுகி கோயில், மகாகாலேஸ்வரர் கோயில் போன்றவற்றின் தாந்திரீக சிறப்புகள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  தாந்திரீக கோயில்கள்

  தாந்திரீக கோயில்கள்

  இந்து கோயில்கள் என்றாலே மந்திர தந்திரங்களுக்கு பேர் போனது. அங்கு வழிபடும் பக்தர்களும் மந்திர தந்திரங்களை ஓதி தான் வழிபாடே செய்கின்றனர். இந்த மாதிரியான சிறப்பு வாய்ந்த கோயில்களில் 'உயிர்ப் பலி' என்ற பெயரில் விலங்குகளை கடவுளுக்கு காவு கொடுக்கும் சடங்குகளும் காலங் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் உஜ்ஜயினி மகா காளி கோயில் இங்கே இறந்த உடலின் சாம்பலை கொண்டு தான் காளி தேவிக்கு ஆர்த்தியே எடுக்கின்றனர்.

  கஜூராகோ சிற்ப சிலையை நீங்கள் கண்டது உண்டா. கஜூராகோ கோயில், கால பைரவர் கோயில், ஜ்வாலாமுகி கோயில், மகாகாலேஸ்வரர் கோயில் போன்றவற்றின் தாந்திரீக சிறப்புகள். காம சிற்பங்களை வடித்த கோயிலாக இது திகழ்கிறது. அன்னை பார்வதி தேவியின் உடல்பாகம் பூலோகத்தில் விழுந்ததை கொண்டு ஒவ்வொரு சக்தி பீடங்களாக எல்லா இடங்களிலும் வழிபாடு செய்கின்றனர். எண்ணற்ற தாந்திரீகர்கள் இதற்காக மந்திரங்கள் ஓதி அன்னையை தரிசித்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு தலைமை தாந்திரீகரான ஸ்ரீ அக்கோரிநாத் ஜி சொல்லும் பத்து அற்புதமான தந்திரக் கோயில்கள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

  MOST READ: அரசு சலுகைகளோடு விபச்சாரத் தொழில் நடக்கும் டாப் 15 நாடுகள்

  காமாக்கியா கோவில், அஸ்ஸாம்

  காமாக்கியா கோவில், அஸ்ஸாம்

  இந்தியாவில் உள்ள சக்தி வாய்ந்த மந்திர தந்திரக் கோயில்களில் இது மிகவும் சிறப்பு பெற்றது. இது அஸ்ஸாமின் வட கிழக்கு பகுதியான நீலாச்சல் குன்றில் அமைந்துள்ளது. 108 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. கடவுள் சிவபெருமான் தன் மனைவி சதியின் பிணத்தை சுமந்து செல்லும் போது அவரின் யோனி பகுதி இங்கே விழுந்ததாகவும் அதுவே கோயிலாக அமைக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இந்த கோயில் எண்ணற்ற வளைவுகளை கொண்ட பாதாள குகை மாதிரி செல்கிறது . உள்ளே செல்ல செல்ல ஒரே இருட்டாகத் தான் இருக்கும். அங்கே பட்டு சேலை அணிந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மந்திர யோனியை காணலாம். மேலும் இந்த கோயில் மந்திர தந்திரங்களுக்கும் தாந்திரீகவாதிகளுக்கும் பேர் போனதாக உள்ளது.

   காளிகாட், மேற்கு வங்காளம்

  காளிகாட், மேற்கு வங்காளம்

  கல்கத்தாவில் உள்ள காளிகாட் கோயில் மந்திர தந்திரங்களுக்கு மிகவும் சிறந்தது. அன்னை பார்வதி தேவியின் உடலிருந்து ஒரு விரல் விழுந்து எழுந்த இடம் தான் இது. இங்கே ஆடுகளை உயிர்பலி கொடுத்து வழிபடுகின்றனர். தாந்திரீக மந்திர முறைகள் ஒழுக்கமாக கடைபிடித்து வருகின்றனர்.

  மேற்கு வங்காளத்தில் உள்ள மற்றொரு இடம் தான் பிஷ்ணுபூர் என்பது. இங்கே ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் நாகத்தை தெய்வமாகக் கொண்டு திருவிழா நடத்துகின்றனர். இதுவும் மந்திர தந்திரங்களுக்கு பேர் போன இடம்.

   வைத்தல் கோயில், புவனேஸ்வர் (ஒரிசா)

  வைத்தல் கோயில், புவனேஸ்வர் (ஒரிசா)

  ஒரிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் பகுதியில் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயில் தான் இந்த வைத்தல் கோயில். மாந்ரீகத்திற்கு பேர் போன கோயில். இங்கே உள்ள அம்மனை சாமுண்டா என்று அழைக்கின்றனர். இந்த அம்மன் கால்களில் மனித மண்டை ஓட்டால் ஆன அணிகலனை அணிந்து கொடூரமாகக் காட்சியளிக்கிறது. பழம் பெரும் மந்திர தந்திர முறைகளையும் சக்தி வாய்ந்த வரலாறும் இக்கோயிலின் சிறப்பாக உள்ளது.

  ஏக்லிங்க் , ராஜஸ்தான்

  ஏக்லிங்க் , ராஜஸ்தான்

  நான்கு முகங்கள் கொண்ட கருப்பு பளிங்கு கற்களால் ஆன சிவபெருமானை இங்கே காணலாம். இந்த கோயில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் உள்ளது. இங்கயும் ஏராளமான தாந்திரீகவாதிகள் வழிபாடு செய்கின்றனர்.

  MOST READ: வாக்கிங் போகும்போது செருப்பு போடாமல் நடக்கலாமா?...

  பாலாஜி, ராஜஸ்தான்

  பாலாஜி, ராஜஸ்தான்

  ராஜஸ்தான் மாநிலத்தில் தாந்திரீக சடங்குகளுக்கு பெயர் போன மற்றொரு இடம் தான் பாலாஜி கோயில். ஜெய்ப்பூர் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள பரத்பூர் என்ற இடத்தில் இது அமைந்துள்ளது. மெகந்திபூர் பாலாஜி கோயில் ராஜஸ்தானில் உள்ள தெளஷா மாவட்டத்தில் உள்ளது. இங்கே போகின்ற வழியில் எல்லாம் எண்ணிலடங்காத மக்கள் பேயோட்டுவதை காணலாம். பார்க்கும் போது நம்மளுக்கே நரம்புகள் சிலிர்க்க இந்த பேயோட்டும் செயல் நடந்து கொண்டிருக்கும். ஆக்ரோஷம் கதறலும் தான் நாம் போகும் வழியெல்லாம் கேக்கும். சல சமயங்களில் மக்கள் இங்கயே தங்கியிருந்து பேயோட்டி செல்கின்றனர். இது கண்டிப்பாக ஒரு வியத்தகு அனுபவமாக இருக்கும்.

  கஜூராகோ, மத்திய பிரதேசம்

  கஜூராகோ, மத்திய பிரதேசம்

  கஜூராகோ மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சிற்றின்ப சிற்ப கலைக்கு பேர் போன இயற்கை அழகு வாய்ந்த கோயில். ஆனால் இங்கே சில மக்கள் தாந்திரீக செயல்களையும் செய்து வருகின்றனர். உலக ஆசைகளை துறந்து ஆன்மீக ஆசையில் ஈடுபட்டு இறுதியில் இந்த நிர்வாண உடல் மண்ணுக்கு போகிறது என்பதையே இந்த கோயில் எடுத்துக் காட்டுவதாக கூறப்படுகிறது. வருடம் முழுவதும் நிறைய மக்கள் இங்கே சுற்றுலாப் பயணிகளாக வலம் வருகின்றனர்.

  கால பைரவர் கோயில், மத்திய பிரதேசம்

  கால பைரவர் கோயில், மத்திய பிரதேசம்

  இந்த கால பைரவர் கோயில் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் மாநிலத்தில் உள்ளது. தாந்திரீகத்திற்கு பேர் போன இங்கே கால பைரவரை கருப்பு முகத்தால் ஆன சிலையை கொண்டு வழிபடுகிறார்கள். தாந்திரீகம், வசியம், பாம்பாட்டி வித்தை போன்றவற்றிற்கு இது பெயர் போனதாக உள்ளது. இங்கே இருக்கும் மற்றொரு வழக்கம் கால பைரவருக்கு மது கொடுக்கப்படுகின்றன. பூசாரியிடம் பக்தர்கள் மதுபாட்டில்களை கொடுக்கிறார்கள், அதை அவர் திறந்து ஒரு தட்டில் ஊற்றி கால பைரவரின் வாயருகே வைத்தால் அவர் முழுவதையும் உறிஞ்சி கொள்ளும் அதிசயம் அங்கே நிகழ்கிறது.

  மகாகாலேஸ்வர் கோயில், மத்திய பிரதேசம்

  மகாகாலேஸ்வர் கோயில், மத்திய பிரதேசம்

  மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் உள்ள மற்றொரு சிறப்பு வாய்ந்த கோயில் இது. இங்கே பெரிய மதிலால் சூழப்பட்ட இடத்தில் கருவறைக்கு மேலே விமான சிற்ப வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே சிவலிங்கத்தை தெய்வமாக வழிபடுகின்றனர். இங்கே நிறைய விழாக்கள் பூஜைகள் இருந்தாலும் சாம்பல் சடங்கு பெயர் போனது. சாம்பல் சடங்கு செய்யும் நாட்களில் பிணத்தின் சாம்பலால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். இந்த சாம்பல் சுற்றியுள்ள எல்லா சுடுகாட்டில் இருந்தும் கொண்டு வரப்பட்டு செய்கின்றனர். இதன் மூலம் அகால மரணம் அடைந்தவர்களின் ஆத்மா சாந்தியடைகிறது என நம்பப்படுகிறது.

  இந்த கோயிலின் மேல் தளம் எப்பொழுதும் மூடப்பட்டே இருக்கும். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அதாவது நாக பஞ்சமி நாளிக்கு மட்டுமே இது திறக்கப்பட்டு மக்கள் அணுமதிக்கப்படுவர். இங்கே இரண்டு நாகங்கள் சேர்ந்த படத்தை கொண்டு சக்தி வாய்ந்த மந்திர தந்திரங்களை ஓதி கோரிநாத்கள் வழிபாடு செய்கின்றனர்.

  MOST READ: சர்க்கரை நோயாளிகள் இதெல்லாம் சாப்பிட்டிங்கன்னா பரலோகம் தான்...

  ஜ்வாலாமுகி கோயில், இமாச்சலப் பிரதேசம்

  ஜ்வாலாமுகி கோயில், இமாச்சலப் பிரதேசம்

  இதுவும் தாந்திரீக வேலைக்கு பெயர் போனது. ஏராளமான மக்கள் தாந்திரீக வாதிகளை பின்பற்றி அருள் பெறுகின்றனர். சக்தி வாய்ந்த மந்திரங்களும் கட்டுப்பாடுகளும் மேற்கொள்ளப்படுகிறது. நிறைய படிக்கட்டுகள் தாங்கிய குகை போன்று கோயில் செல்கிறது. இங்கே ஒரு தெளிவான நீரோடை போன்று இரண்டு குளங்கள் இருக்கிறது. இந்த குளத்திற்கு அருகில் உள்ள செம்பு குழலின் வழியாக மூன்று தீ ஜ்வாலைகள் எரிந்து கொண்டே இருக்கின்றன. இதனால் அங்கே அடிக்கும் குளிர்க்கு இந்த வெதுவெதுப்பான நீராடல் உங்களுக்கு உற்சாகத்தை அழிக்கிறது. இங்கே தாந்திரீகர்கள், பக்தர்கள் எல்லாம் நீராடி அம்மனின் சக்தியை பெறுகின்றனர்.

  பஜிநாத் கோயில், இமாச்சலப் பிரதேசம்

  பஜிநாத் கோயில், இமாச்சலப் பிரதேசம்

  நீங்கள் இமாச்சல பிரதேசத்தில் அடுத்ததாக பார்க்க கூடிய கோயில் தான் இது. இங்கே சிவபெருமான் வைத்தியநாதர் என்ற லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இங்கே கோயில் அமைக்கப்படுவதற்கு முன்பு சிவன் ஒரு மருத்துவராக வாழ்ந்து வந்ததாக நம்ம பட்டு வருகிறது. பண்டைய கோயில் என்பதால் ஏராளமான மக்கள் இதைக் காண வருகின்றனர். தாந்திரீகர்கள் மற்றும் யோகிகள் இங்கு பயணம் செய்து சிவனின் சக்திகளை பெற்று வந்தனர். பல நோய்களையும் குணப்படுத்தி வந்தனர். இங்குள்ள தண்ணீர் தான் சுற்றியுள்ள கங்கிரா மலை மக்களுக்கு நீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Top Ten mysterious Tantra Temples

  we discuss about tantra temples in india. Kamakhya Temple, Kalighat, Baitala Deula or Vaital Temple and so on.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more