கூகுள் எர்த்க்கே 2 நிமிஷம் தலைசுற்றல் ஏற்படுத்திய வினோத புகைப்படங்கள் - டாப் 25!

Posted By:
Subscribe to Boldsky
கூகுள் மேப் மூலமாக கண்டறியப்பட்ட சில வினோதமான பகுதிகள்- வீடியோ

உலகில் சுவாரஸ்யங்களுக்கும், விசித்திரங்களுகும் பஞ்சமே இல்லை. நாம் கண்டுப்பிடித்த, கண்டுப்பிடிக்காத, மர்மமாக நீடிக்கும் பல உலக வினோதங்கள் இருக்கின்றன. ஆனால், கூகுள் எர்த் மாறும் மேப்பில் நாம் உலக மக்கள் அறியாத பல விசித்திரமான இடங்கள் பதிவாகியிள்ளன. இப்படி சில இடங்கள் இருக்கிறது என அந்தந்த ஊரில் வாழும் மக்களுக்கே கூட தெரியாமல் இருக்கலாம்.

இதோ! கூகுள் எர்த் மற்றும் மேப் மூலமாக கண்டறியப்பட்ட உலகின் சில வினோதமான பகுதிகள்...

All Image Source: Google Map and Google Earch Screen Shots

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விமான மயானம்!

விமான மயானம்!

ஆங்கிலத்தில் Aerospace Maintenance and Regeneration Group (AMARG) என்றழைக்கப்படும் இந்த இடமானது ஒரு விண்வெளி பராமரிப்பு மற்றும் மீளுருவாக்கம் குழு அமைப்பிடம் ஆகும். இது தான் உலகின் மிகப்பெரிய விமான மயானம் என்று அழைக்கிறார்கள். இது அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் இருக்கிறது. இங்கே எப் 16 , எப் 4 பாண்டாம் IIஎஸ் மற்றும் பி 52 ரக வெடிகுண்டு வீசும் பழுதடைந்த பழைய விமானங்கள் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ளன. வரலாறு சார்ந்த பெரும் ஈர்ப்பு கொண்ட நபராக நீங்கள் இருந்தால், முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் முக்கிய பங்கு வகித்த பல விமானங்களை நீங்கள் இங்கே சென்று காணலாம்.

லயன் பாயிண்ட்!

லயன் பாயிண்ட்!

ஐக்கிய ராஜ்ஜியத்தின் டன்ஸ்டாபில் (Dunstable) என்ற பகுதியில் இருக்கிறது இந்த லயன் பாயிண்ட். இது ஒரு பயிரடம் ஆகும். இங்கே சிங்கத்தை போன்ற உருவத்தில் புற்கள் முளைந்த இடத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இது வூட்ஸ்நேட் மிருகக்காட்சி சாலைக்கு அருகமையில் இருக்கிறது.

பிரம்மாண்ட முயல்!

பிரம்மாண்ட முயல்!

தரையில் இருந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது. ஆனால், ஆகாயத்தில் இருந்து பார்த்தால் நீங்கள் கார்டன் நெட்வர்க்கில் பார்த்தும், பார்த்து ரசித்து முயலின் தோற்றத்தை கண்டு ரசிக்கலாம். இது இத்தாலியில் வியன்னா கலை அமைப்பிடத்தில் 200 அடி சிலையாக இருந்து வருகிறது.

நீச்சல் குளம்!

நீச்சல் குளம்!

ஜெர்மனியில் பெர்லின் ஆற்றின் பகுதியில் இடம்பெற்றுள்ளது இந்த பிரம்மாண்ட நீச்சல் குளம். இதை பெட்சிஃப் என்று அழைக்கிறார்கள். இங்கே பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. இங்கே பார்ட்டிகள் கொண்டாட்டங்கள், யோகா வகுப்புகள் மற்றும் ஸ்டேன்ட் அப் பேட்லிங் எனப்படும் நின்றப்படி ஒட்டக்கூடிய படகு மாதிரியான விளையாட்டு போன்ற நிகழ்வுகள் அதிகமாக நடக்கிறது.

பாலைவனம்!

பாலைவனம்!

இதை பாலைவனத்தின் சுவாசம் (Desert Breath) என்று அழைக்கிறார்கள். இது எகிப்தில் இருக்கும் ஒரு மர்மமான இடமாக திகழ்கிறது. இங்கே வட்ட வட்டமான அமைப்புகள் விசித்திரமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது முதன் முறையாக 1997 ஆண்டு உடுவாகியிருக்கிறது. இங்கே மொத்தம் இதுபோன்ற 87 வட்ட அமைப்புகள் உருவாகியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

வால்டோ

வால்டோ

வால்டோ என்பது ஒரு பொம்மை. ஒருமுறை கூகுள் மேப்பில் ஓர் இடத்தை துழாவிக் கொண்டிருந்த போது, ஏதோ ஒரு இக்கட்டிடத்தின் மாடியில் இந்த வால்டோ பொம்மை பெரியளவில் அமைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. ஆனால், இதே இந்த கட்டிடம் மூடப்பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது. யாரேனும் விளையாட்டாக கூட இந்த பொம்மையை வரைந்து வைத்திருக்கலாம்.

வா வந்து விளையாடு...

வா வந்து விளையாடு...

கூகுள் மேப்பில் நீங்கள் ஒரு இடத்தை தேடி சென்றால், அந்த இடத்தில் என்ன இடம் இருக்கிறது, அது என்ன தெரு, ஊர் என்ற விவரங்கள் எல்லாம் பெற இயலும். ஆனால், இங்கே ஒரு இடத்தில், மேலே இருந்து யாராவது இந்த கட்டிடத்தை பார்த்தல் "Come on down and play" என்ற வாசகத்தை படிக்கும் படி அமைத்து வைத்துள்ளனர்.

பள்ளம்!

பள்ளம்!

இது ஏதோ வேற்றுகிரகத்தின் புகைப்படம் என்று நீங்கள் கருத வேண்டாம். இது ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன் ஒரு விண்கல் விழுந்து பூமியில் 26,000 மைல் தொலைவுக்கு உருவான பிரம்மாண்ட பள்ளம் என்று கூறப்படுகிறது.

26,000 மைல் என்பது சராசரியாக ஒரு நகரத்தின் அளவு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதனால் தான் விண்கல் வருவது போல தெரிந்தால் நாசா விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள் போல.

முக்கோணம்!

முக்கோணம்!

நெவாடா பாலைவனம் (Nevada Desert) முக்கோணம். இது இங்கே வரும் சுற்றலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் இடமாக திகழ்கிறது. ஆனால், முந்திய நாட்களில் இது இராணுவ வீரர்கள் வெடிகுண்டு பரிசோதனை செய்யும் இடமாக இருந்தது.

கப்பற்சிதைவு

கப்பற்சிதைவு

ஈராக்கில் இருக்கும் பஸ்ராஹ் எனும் இடத்தில் கப்பற்சிதைவு ஏற்படும் நிகழ்வு கூகுள் மேப்பில் பதிவாகியிருக்கிறது. இப்போது இந்த இடம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறி வருகிறது.

சோலார் எனர்ஜி களம்

சோலார் எனர்ஜி களம்

சோலார் எனர்ஜி மூலம் ஆயிரக்கணக்கான இடங்களுக்கு மின் சக்தி வழங்க இயலும். இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இருக்கிறது... கலிபோர்னியாவில் இருக்கும் இந்த பெரிய சோலார் எனர்ஜி களம் கூகுள் எர்த்தில் இருந்து பார்க்கும் போது ஜொலிக்கும் கண்ணாடி போல காட்சியளிக்கிறது.

மேட்டல் (Mattel) சின்னம்

மேட்டல் (Mattel) சின்னம்

மெட்டல் என்பது அமெரிக்காவை சேர்ந்த ஒரு பன்னாட்டு பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். குழந்தைகளை கவரும் வகையில் இவர்கள் பல பொம்மைகள் தயாரித்து வருகிறார்கள். கூகுள் மேப்பில் இருந்து பார்த்தாலும் கூட எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் இவர்கள் Mattel என்ற பெயரை வடிவமைத்து வைத்துள்ளனர்.

நீர்யானை குளம்!

நீர்யானை குளம்!

நீர்யானைகளுக்கு நீர் என்றால் மிகவும் பிடித்த விஷயமாகும். மேலும், இவை நீரில் நீந்த பேரார்வம் கொண்டிருக்கும் உயிரினமும் கூட. கூகுள் எர்த்தில் ஒரு நீச்சல் குளத்தில் நீர்யானைகள் கூட்டம் ஒன்றாக நீந்திக் கொண்டிருப்பது பதிவாகி இருக்கிறது.

பேட்லண்ட்ஸ் (Badlands Head)

பேட்லண்ட்ஸ் (Badlands Head)

பேட்லண்ட்ஸ் என்ற இடத்தின் ஒரு பகுதியில் தலை போன்ற பிரம்மாண்ட தோற்றம் அமைந்திருக்கிறது. இது கூகிள் மேப்பில் தெளிவாக பதிவாகியிருக்கிறது. இதை பேட்லண்ட்ஸ் காவலன் என்றும் அழைக்கிறார்கள். இது கிட்டத்தட்ட காண ஒரு மனிதனின் தலை போன்றே இருக்கிறது. ஆனால், இது மனிதரால் உருவாக்கப்பட்ட இடம் இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நட்சத்திர கோட்டை!

நட்சத்திர கோட்டை!

நெதர்லாந்தில் இருக்கிறது இந்த நட்சத்திர கோட்டை என்று அழைக்கப்படும் ஹென்ரிகஸ் கோட்டை. எதிரி படைகள் போர் தொடுத்து வரும் போது அவர்களிடம் இருந்து தற்காத்து கொள்ள இந்த கோட்டை அமைக்கப்பட்டது. இது 1812ல் அழிக்கப்பட்ட போதும், அதன் சுற்றுப்புற பகுதி நட்சத்திரம் போன்ற அமைப்பை இன்றளவும் பெற்று திகழ்ந்து வருகிறது.

கோக் நிறுவனத்தின் இலட்சினை!

கோக் நிறுவனத்தின் இலட்சினை!

விளம்பரம் செய்வதில் கில்லாடி என்று பலமுறை நிரூபித்த நிறுவனம் கோக். ஆனால், இப்படியும் கூட விளம்பரம் செய்வார்கள் என்று யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள். ஆம், சிலியில் இருக்கும் ஓரிடத்தில் தனது இலட்சினை எழுத்து வடிவத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி, அது கூகுள் மேப்பில் காணும் போதும் தெளிவாக இருக்கும்படி செய்துள்ளனர்.

ஸ்வஸ்திக் கட்டிடம்!

ஸ்வஸ்திக் கட்டிடம்!

சான்டியாகோ கப்பற்படை தளத்தில் ஒரு கட்டிட்டு வடிவமைப்பாளர் ஸ்வஸ்திக் போன்ற வடிவத்தில் பில்டிங் அமைத்து அசத்தியுலாளர். வானில் இருந்து பார்க்கும் போது இந்த கட்டிடம் ஸ்வஸ்திக் சின்னம் போன்று காட்சியளிக்கிறது.

வடக்கு சைப்பிரஸ் கொடி

வடக்கு சைப்பிரஸ் கொடி

இது கூகுள் எர்த்தில் பதிவான மற்றுமொரு சுவாரஸ்யமான படமாகும். வடக்கு சைப்பிரஸ் கொடி (Northern Cyprus Flag) நிலத்தில் வடிவமைக்கப்பட்டு அதன் அருகில் அந்நாட்டு மொழியில் துருக்கியர் என்று கூறும் போது ஒருவருக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது என்ற பொருள் தரும் வாக்கியம் எழுதப்பட்டுள்ளது.

குரங்கு முகம்!

குரங்கு முகம்!

ரஷ்யாவின் சகோட்ஸ்கி எனும் பகுதியை வானில் இருந்து பார்க்கும் போது அங்கே இருக்கும் சில பெரிய மணல் திட்டுகள் போன்ற அமைப்பு குரங்கின் முகத்தை பிரபலிப்பது போல இருக்கிறது.

ஜீசஸ்!

ஜீசஸ்!

அமெரிக்காவின் இடாஹோ எனும் மாகாணத்தின் தலைமை நகரான போய்சே எனும் பகுதியில் வானில் இருந்து பார்க்கும் போது ஜீசஸ் உங்களை விரும்புகிறார் என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பது வானில் இருந்து காணும் போது தெரிகிறது. இது கூகிள் மேப்பில் தெளிவாக பதிவாகியிருக்கிறது.

கிட்டார் காடு!

கிட்டார் காடு!

அர்ஜென்டினாவின் கார்டோபா எனும் இடத்தில் கிட்டார் போன்ற அமைப்பில் ஒரு காடே அமைக்கப்பட்டுள்ளது. வானில் இருந்து ஒருவர் பார்த்தால் இந்த காடு ஏதோ பெரிய சைஸ் கிட்டார் போன்றே காட்சியளிக்கிறது.

டார்கெட்!

டார்கெட்!

நெவேடா பாலைவனத்தில் வானில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரிவதற்கு டார்கெட் குறி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் முன்னாளில் இராணுவ வீரர்கள் வெடிகுண்டு பரிசோதனை செய்ய பயன்படுத்தி வந்த காரணத்தால், ஆகாயத்தில் இருந்து டார்கெட் செய்ய இப்படி ஒரு அமைப்பை அவர்கள் அமைத்திருக்கலாம் என்று அறியப்படுகிறது.

இதய குளம்!

இதய குளம்!

ஓஹியோ மாகணத்தில் கிளவ்லேண்ட் என்ற இடத்தில் இதயத்தின் வடிவத்தில் ஒரு குளம் அமைக்கப்பட்டிருப்பதை நாம் ககூகுள் மேப்பில் தெளிவாக காண முடிகிறது. ரொமாண்டிக் தம்பதிகள் சென்று வர இதுவொரு சிறந்த இடமாக இருக்கும்.

பேட்மேன்!

பேட்மேன்!

பொதுவாக வவ்வால்களை கீழிருந்து ஆகாயத்தில் பறப்பதை கண்டிருப்போம். ஆனால், ஆகாயத்தில் நீங்கள் பறக்கும் போது வவ்வாலை நிலத்தில் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் இதை மட்டும் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆம்! பேட்மேன் சிம்பலை யாரோ ஒரு நபர் தரையில் பெரிய சைஸில் அமைத்து வைத்துள்ளார். இதுவும் கூகுள் மேப்பில் பதிவாகியிருக்கிறது.

அத்தாமா ஜெயண்ட்

அத்தாமா ஜெயண்ட்

அத்தாமா ஜெயண்ட் (Atacama Giant) என்று இது அறியப்படுகிறது.இது 1000 - 1400 CE காலகட்டத்தில் அமைக்கப்பட்ட உலகின் பிரம்மாண்ட புவியியல் அமைப்பாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 25: Oddee Discoveries On Google Earth

Top 25: Oddee Discoveries On Google Earth
Story first published: Wednesday, January 24, 2018, 12:11 [IST]
Subscribe Newsletter