For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாமியாக கும்பிடற கல்லை கறி எடைபோட எடை கல்லாக பயன்படுத்திய இஸ்லாம் பெண்... அப்புறம் என்னாச்சு?

சாதனா என்னும் இஸ்லாமியப் பெண், கசாப்புக் கடை வைத்திருந்தார். அவருக்கு விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் சாலிக்கல் கிடைக்க அதை அவர் கறி எடை போடும் எடை கல்லாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஊர் மக்கள் சொல்லிய

|

சாதனாவின் தொழில் கசாப்பு கடை நடத்தி வருவது தான். இந்த தொழிலை அவர் பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறார். ஆட்டை வெட்டி அதன் மாமிசத்தை விற்று கசாப்பு கடை நடத்தி வந்தார். அவர் ஒரு முஸ்லிம் மதத்தை சார்ந்தவர்.

spirituality

image courtesy

அவருக்கு விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் சாலிக்கல் கிடைக்க அதை அவர் கறி எடை போடும் எடை கல்லாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஊர் மக்கள் சொல்லியும் கேட்காத அவருக்கு என்ன நடந்தது என்று தெரியுமா? அதைப் பற்றிய கதை தான் இது. படிச்சு பாருங்க. ஆச்சர்யப்படுவீங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படிப்பட்டவர்

எப்படிப்பட்டவர்

சாதனா ஒரு அப்பாவி மனிதர். எல்லா நேரத்திலும் மன நிறைவுடன் காணப்படும் ஒரு எளிமையானவர். தினமும் காலையில் கசாப்பு கடைக்கு சென்று ஆட்டிறைச்சியை விற்பது பின்னர் வீடு திரும்புவதுமாகத் தான் அவரது அன்றாடம் வாழ்க்கை இருந்தது.

பாடுதல்

பாடுதல்

நாள் முழுவதும் அவர் கடவுளை நினைத்து பாட்டு பாடிக் கொண்டே தான் தன் வேலையை செய்வார். அப்படியே உற்சாகமாக அதில் மூழ்கி விடுவார். ஒரு நாள் இதே மாதிரி பாட்டு பாடிக் கொண்டே வரும் சமயத்தில் மெய் மறந்து வேறொரு பாதையில் சென்று விட்டார்.

கருங்கல்

கருங்கல்

image courtesy

அந்த இடத்தில் தான் அவருக்கு ஒரு அடர்ந்த நிற கருங்கல் கண்ணில் பட்டது. அவர் உடனே கீழே குனிந்து அந்த கல்லை தன் கைகளால் எடுத்தார். அந்த கல் மிகவும் கனமாகவும் வலிமையாகவும் இருந்தது. அதை அவர் மாமிசத்தை அளவிட எடைக்கல்லாக பயன்படுத்தலாம் என்று நினைத்தார்.

எடைக்கல்

எடைக்கல்

அவர் கடைக்கு திரும்பச் சென்றதும் தான் எடுத்து வந்த கருங்கல்லை கடைத் தராசில் போட்டு மாமிசத்தை அளவிட பயன்படுத்தினார். அவரது கசாப்பு கடை நிழல் தரும் மரங்களுக்கு நடுவில், தண்ணீர் வசதி செழிப்பான இடத்தில் அமைந்திருந்தது. எனவே மக்கள் எல்லாரும் மாமிசத்தை வாங்க இவர் கடைக்கு தான் அதிகமாக வருவார்கள். பயணிகள், புனிதர்கள் என்று எல்லாரும் இங்கே வருவார்கள்.

நட்பானவர்

நட்பானவர்

சாதனா எல்லோருக்கும் பிடித்தமான ஒரு நட்பான மனிதர். அவரின் கவர்ச்சியான புன்னகை முகம் எல்லோரையும் வெகுவாக கவர்ந்து விடும். அவரது உருக்கமான கடவுள் பாடல்களும் பிரார்த்தனைகளும் எல்லாரிடத்திலும் பிரபலமாக இருந்தது.

ஷாலிக்கிராம் கல்

ஷாலிக்கிராம் கல்

image courtesy

சாதனாவிடம் இருந்த கருங்கல்லை பார்த்த ஒரு இந்துக்காரர் அதை அறிந்து கொண்டார். அது சாலிக்கிராம் கல் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். இந்த கல் இந்து மதத்தில் மிகவும் புனிதமாக பரிசிக்கப்படும் பொருள். இது விஷ்ணுவின் வடிவமாக வணங்கப்படுகிறது. அதை நீ இறைச்சியுடன் பயன்படுத்துவது பாவம் என்று அந்த இந்து பண்டிதர் கூறினார்.

பாவம்

பாவம்

இது சாதனா நீண்ட காலமாக பாவம் செய்து வந்ததை குறிக்கிறது என்று அவர் கூறினார். ஆனால் சாதனா அவர் பேச்சை கொஞ்சம் கூட நம்பவில்லை. அதை மறுத்தார். அந்த கல்லை எடைக்கல்லாக பயன்படுத்துவதை மறுபடியும் தொடர ஆரம்பித்தார். அவரை நம்பச் செய்ய யாராவது முயற்சித்தாலும் அவரின் திறமையான பேச்சுக்கு முன் தோற்று விடுவார்கள். தன்னுடைய கூர்மையான பேச்சுத் திறனால் எல்லோரையும் வென்றெடுத்து விடுவார்.

கல்லை எடுக்க வேண்டும்

கல்லை எடுக்க வேண்டும்

image courtesy

எனினும் இதை பார்த்து தாங்க முடியாத பூசாரி ஒருவர் அதை சுத்தம் செய்ய பிராத்தனை செய்ய வேண்டும் என்று எண்ணினார். இந்த எண்ணத்தோடு சாதனாவிடம் கேட்டால் அவர் தருவாரா என்ற சந்தேகம் அவர் மனதில் எழும்பியது. ஆனால் சாதனாவும் அதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார். கல்லை எடுத்து சென்று கடவுள் விஷ்ணுவை நோக்கி பூஜிக்க அவர் அனுமதியளித்தார்.

பூசாரி வழிபாடு

பூசாரி வழிபாடு

பூசாரி அந்த கல்லைக் கொண்டு கடவுளை நோக்கி தியானித்தார். அவரின் பக்தியின் பயனால் கடவுள் அவர் முன் மட்டும் தோன்றி அவருக்கு ஞானத்தையும் இரட்சிப்பையும் வழங்கினார். அதே நேரத்தில் கடவுள் அந்த சாலிக்கிராம் கல்லை திருப்பி சாதனாவிடம் கொடுத்து விடும் படி கேட்டுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

கடவுளின் அன்பை பெற்றவர்

கடவுளின் அன்பை பெற்றவர்

ஏனெனில் சாதனா தினமும் ஆட்டை கொன்று வேலை செய்து வந்தாலும் அவன் எப்பொழுதும் கடவுளாகிய என் பெயரைத்தான் துதித்து வருகிறான். அவன் ஒரு நாளும் என்னை மறக்கவே இல்லை. என்னை அவன் துதிக்காத நாளே இல்லை. பூசாரியாகிய நீ என்னை ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே நினைக்கிறாய் அதனால் தான் உன் முன் காட்சி கொடுத்தேன். ஆனால் தினந்தோறும் எந்நேரமும் துதிக்கும் சாதனாவுடன் எப்பொழுதும் இருக்க ஆசைப்படுகிறேன் என்றாராம் கடவுள்.

சாதனா ஒரு கசாப்பு கடைக்காரராக இருந்தாலும் கடவுளின் அசைக்க முடியாத அன்பை பெற்றவர். கடவுளை எப்பொழுதும் மதத்தால் அடைய முடியாது. நம் அன்பால் மட்டுமே அடைய முடியும் என்பதற்கு இந்த கதை ஒரு சிறந்த உதாரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

the story of sadhana the butcher who got the black stone

Sadhna was a butcher by profession, who had continued his family profession of slaughtering the goats. An innocent man with a simple heart, filled with contentment all the time.
Desktop Bottom Promotion