உலகின் டாப் 10 பணக்கார குடும்பங்கள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

பெரும்பாலும் உலகப் பணக்காரர் என்றாலே நமது மனதில் பில்கேட்ஸ் என்ற பெயர் தான் உதிக்கும். காரணம் ஒரு சாதாரண நபரின் மகனாக பிறந்து தனது தனி திறமை மற்றும் முயற்சியால் மைக்ரோசாப்ட் எனும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி இன்று வரையிலும் அதை நல்வழிப்படுத்தி அழைத்து சென்றுக் கொண்டிருக்கிறார் பில் கேட்ஸ்.

அன்றைய ராஜ குடும்பங்கள் அல்லது சென்ற நூற்றாண்டுகளில் உலகப் பணக்காரர்களாக இருந்தவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். அவர்கள் எல்லாம் இன்றும் பணக்காரர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால், சொத்து பிரிந்து, பிரிந்து பட்டியலில் கொஞ்சம் பின்தங்கி இருக்கிறார்கள்.

உலகின் பணக்காரக் குடும்பத்தார் என்ற பட்டியல் வகுக்கப்படும் போது அவர்கள் தான் முன்னிலையில் வந்து நிற்கிறார்கள். அந்த வகையில் உலகின் பணக்கார குடும்பங்களாக திகழும் குடும்பங்களை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தி ரோத்ஸ் சைல்டு குடும்பம்!

தி ரோத்ஸ் சைல்டு குடும்பம்!

இது ஒரு ஜெர்மன் குடும்பம். இவர்களின் சொத்து மதிப்பு நானூறு பில்லியன் டாலர்கள் ஆகும். 18ம் நூற்றாண்டில் ஐரோப்பியாவில் வங்கிகள் மற்றும் ஃபைனான்ஸ் ஆரம்பித்த பிறகே இவர்கள் பெருமளவு வளர்ச்சி கண்டனர் என்று கூறப்படுகிறது.

1760ல் இவர்கள் குடும்பத்தை சேர்ந்த மேயர் அம்ஷேல் ரோத்சைல்டு தான் தொழில் செய்ய ஆரம்பித்த முதல் நபர் ஆவர். இவர் பிரஞ்சு புரட்சியின் போது ஒட்டுமொத்த வங்கி அமைப்பையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

இன்று, இவரது வழித்தோன்றல்கள் ரோத்ஸ்சைல்டு துவங்கிய பல நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். எனர்ஜி, ஃபைனான்சியல் சர்வீஸ், ரியல் எஸ்டேட் மற்றும் சில நாடுகளில் இயங்கும் ஒயின் ஆலைகள் என பல தொழில்களை கடந்த இருநூறு ஆண்டுகளாக லாபகரமாக நடத்தி வருகிறார்கள்.

 தி ஹவுஸ் ஆப் சவூதி!

தி ஹவுஸ் ஆப் சவூதி!

சவுதி அரேபியாவில் இருக்கும் அரசு குடும்பம் தான் இந்த ஹவுஸ் ஆப் சவூதி குடும்பம் ஆகும். இவர்களது குடும்பத்தில் இருக்கும் பல நபர்களுடைய சொத்து மதிப்பு பில்லியன்களை தொடுகிறது. இந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் திரியாஹ் (Diriyah) சாம்ராஜிஜ்யதை சேர்ந்த முகமது பின் சவூதின் வழித்தோன்றல்கள் ஆவர்.

இன்று சவூதி அரேபியாவில் இருக்கும் பெரும் சக்தி கொண்ட குடும்பம் இவர்களுடையது. கிங் சல்மான் இப்போது ஆட்சி செய்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு மட்டுமே ஐநூறு மில்லியன் டாலர்கள் தாண்டும் எனப்படுகிறது.

தி வால்டன் குடும்பம்!

தி வால்டன் குடும்பம்!

இந்த வால்டன் குடும்பம் உலகின் மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமான சுப்பர்மார்கெட் நிறுவனமான வால்மார்ட் கொண்டுள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பில் பெரும்பங்கு புட் மற்றும் சாம் வால்டன் ஆகிய இருவரிடம் இருக்கிறது. இவர்கள் தான் வால்மார்ட் துவங்கிய நிறுவனர்கள் ஆவர்.

தி கோச் குடும்பம்!

தி கோச் குடும்பம்!

ஃப்ரெட் கோச் மூலம் இந்தகுடும்பதின் செல்வம் அதிகரிக்க துவங்கியது. இவர் தான் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் புதிய பாணியை கொண்டுவந்தவர் ஆவார். இன்று அமெரிக்காவில் இரண்டாவது மிகப்பெரிய ப்ரைவேட் தொழில் செய்து வரும் அமெரிக்க குடும்பம் என்ற பெயர் பெற்றுள்ளனர்.

ஃப்ரெட் கோச்சின் நான்கு மகன்களில் இருவர் மட்டுமே இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இவர்கள் அரசியலிலும் செயற்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தி மார்ஸ் குடும்பம்!

தி மார்ஸ் குடும்பம்!

மார்ஸ் இன்.கார்ப்பரேஷன் நிறுவனர் பிராங்க்ளின் கிளாரன்ஸ் மார்ஸ்ன் குடும்பம் தான் இது. இந்த குடும்பம் தயாரித்த மில்கி வே பார் சாக்லேட் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகும். இவர்கள் 1988ல் வால்டன் குடும்பத்தை முந்தி பணக்கார குடும்பம் என்ற பெயரை பெற்றனர். இவர்களது குடும்பம் மிகவும் ப்ரைவேட்டாக இயங்கி வருகிறது. இவர்களை புகைப்படம் எடுப்பதோ, பேட்டிக் காண்பதோ மிகவும் கடினம்.

தி ஸ்லிம் குடும்பம்!

தி ஸ்லிம் குடும்பம்!

இவர்கள் ஒரு மெக்ஸிகன் குடும்பம் ஆவர். இவர்கள் க்ரூபோ கார்ஸோ என்ற டெலிகாம் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் நிறுவனர் கார்ல்சோ ஸ்லிம். இவரது மூன்று மகன்கள் இப்போது இவரது நிறுவனத்தை தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்கள்.

தி கார்கில் (Cargill) மெக்மில்லன் குடும்பம்!

தி கார்கில் (Cargill) மெக்மில்லன் குடும்பம்!

அமெரிக்காவின் பணக்கார குடும்பங்களில் இவர்களும் அடங்குவர். அமெரிக்காவில் மாபெரும் ப்ரைவேட் கம்பெனி நிறுவனங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளனர் இவர்கள். வில்லியம் கார்கில் இறந்த பிறகு, சற்று சறுக்கல் கண்ட கம்பெனியை ஜான் மெக்மில்லன் தான் காப்பாற்றியுள்ளார்.

தி பெத்தன்கூர்ட் குடும்பம்!

தி பெத்தன்கூர்ட் குடும்பம்!

L'Oreal அழகு சாதனா தயாரிப்பு நிறுவனத்தில் பிரின்சிபால் ஷேர் ஹோல்டரான லிலியான் பெத்தன்கூர்ட் தான் இந்த குடும்பத்தின் ஆணிவேர். இவரது அப்பாவினால் துவங்கப்பட்ட இந்த கம்பெனி L'Oreal-ம் 33% பங்குகளை கொண்டுள்ளது.

இவர்கள் பெத்தன்கூர்ட் ஃபவுண்டேஷன் ஒன்று ஆரம்பித்து மருந்துகள் மற்றும் மனிதாபினாமன் நிறைந்த பிராஜக்ட்டுகள் செய்து வருகிறார்கள். லிலியான் பெத்தன்கூர்ட் இறந்த போது, அவர் தான் உலகின் பணக்கார நபராக இருந்தாராம்.

தி அர்னால்ட் குடும்பம்!

தி அர்னால்ட் குடும்பம்!

பெர்னார்ட் அர்னால்ட் (Arnault) தான் எல்.வி.எம்.எச்-ன் தலைமை செயல் அதிகாரி. எல்.வி.எம்.எச் ஒரு பன்னாட்டு ஆடம்பர பொருட்கள் நிறுவனம். இதை 1971ல் துவக்கினார்கள். இன்று இதன் பங்கு சந்தை மதிப்பு பல பில்லியன் டாலர்கள் ஆகும்.

தி காக்ஸ் குடும்பம்!

தி காக்ஸ் குடும்பம்!

தி காக்ஸ் எண்டர்பிரைசஸ் ஆனது தி காக்ஸ் குடும்பத்தாரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை ஜேம்ஸ். எம். காக்ஸ் என்பவர் 1989ல் துவக்கினார். இவர்கள் தினசரி செய்தித்தாள், வானொலி நிலையம் மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் காக்ஸ் ஆட்டோமோட்டிவ் வைத்துள்ளனர். இவர்கள் நன்கொடை வழங்குவதில் நற்குணம் கொண்டவர்கள். 2014ல் மட்டும் கிட்டத்தட்ட 92 மில்லியன் டாலர்கள் இவர்கள் நன்கொடையாக அளித்துள்ளனர்.

All Image Source:thedailyrecords

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Richest Families in The World

Ten Richest Families in The World