For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மர்மங்கள் நிரம்பிய மர்லின் மன்றோவின் வாழ்க்கையில் இவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கிறதா?

  |

  திரைப்படத்துறை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமும் மர்லின் மன்றோ பெயரை அவ்வளவு எளிதாக மறந்திடாது. காலங்கள் பல கடந்து சென்றாலும் மர்லின் பற்றிய சில வதந்திகள் இன்னமும் உயிர்ப்புடன் உலா வந்து கொண்டே தான் இருக்கின்றன.

  செக்ஸ் என்பதன் அடையாளமாகவும் மர்லின் மன்றோ பார்க்கப்பட்டார். அதோடு வரலாற்று அறிஞர்கள் பலரும் பாப் கலாச்சாரத்தின் மகாராணி மர்லின் மன்றோ என்று புகழாரம் சூட்டினர். ஒரு பக்கம் புகழின் உச்சியில் இருந்த மர்லின் மன்றோ இன்னொரு பக்கம் எண்ணற்ற கொடுமைகளை சந்தித்தார். அவரது இளமைக்காலம், குறிப்பாக குழந்தைப் பருவம் அவ்வளவு எளிமையானதாக இருக்கவில்லை மன அழுத்தத்தாலும், தூக்கமின்மை போன்ற பல இன்னல்களை சந்தித்தார்.

  மூன்று திருமணங்கள் அதோடு ஜான் ஃப்.கென்னடியுடனான கள்ளத் தொடர்பு ,முப்பாத்தாறு வயதில் திடீர் மரணம் ஆகியவை மர்லின் மன்றோ குறித்து இன்னமும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. இங்கே அவரைப் பற்றிய சில தகவல்களை கொடுத்திருக்கிறோம். மர்லின் மன்றோ இன்னமும் பேசப்படுவதற்கான காரணத்தையும் அவர் ஏன் செக்ஸ் சிம்பல் என்று அழைக்கப்பட்டார் என்ற உண்மை விளக்கத்தையும் கண்டறியலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  அனாதை இல்லம் :

  அனாதை இல்லம் :

  மர்லின் மன்றோ குழந்தைப் பருவத்தில் அனாதை இல்லத்தில் தான் வளர்க்கப்பட்டார். ஏனென்றால் மர்லின் மன்றோவின் தாய்க்கு மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் தாயின் நெருங்கிய நண்பரான கிரேஸ் மற்றும அவரது குடும்பத்தார் தான் மர்லினை வளர்த்தனர்.

  பதினாறு வயதிலேயே மர்லின் திருமணம் செய்து கொண்டார். ஏனென்றால அவருக்கு அங்கே இருக்க துளியும் விருப்பமில்லை.

  Image Courtesy

  விலங்குகள் :

  விலங்குகள் :

  மர்லின் மன்றோவுக்கு தெருவில் அனாதைகளாக சுற்றிக் கொண்டிருக்கும் விலங்குகள் மீது அலாதி ஆர்வம் உண்டு. தெருவில் இருக்கிற விலங்குகளுக்கு உணவளிப்பது, அதற்கு மருத்துவம் பார்ப்பது, மழையில் நனைந்து கொண்டிருந்தால் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வது என்று இறங்கி வேலை செய்வாராம் மர்லின் மன்றோ

  ஒரு முறை மழையில் நனைந்து கொண்டிருந்த மாட்டிற்கு தன் வீட்டிற்குள்ளேயே அழைத்து இடம் கொடுத்திருக்கிறார் மர்லின். இதனை அவரது முதல் கணவரான ஜேம்ஸ் டவுட்ரி தெரிவித்திருந்தார்.

  Image Courtesy

  பெயர் :

  பெயர் :

  மர்லின் மன்றோ என்பது இவரது உண்மையான பெயரல்ல பிப்ரவரி 23 ஆம் தேதி 1956 ஆம் ஆண்டு நியூயார்க்கில் இருக்கிற நகர நீதிமன்றத்திலிருந்து நோர்மா ஜேன் மோர்டென்சன் என்ற பெயரை மர்லின் மன்றோ என்று மாற்றிக் கொள்ளும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

  Image Courtesy

  வாரிசு :

  வாரிசு :

  மர்லின் மன்றோ தன்னுடைய சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக இருந்த ஜேம்ஸ் மன்றோ தான் என்னுடைய தந்தை என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அதற்கான சான்று எதுவும் இல்லாததால் இவர் அமெரிக்க குடியரசு தலைவரின் வாரிசு என்று சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.

  Image Courtesy

  உடல் நலம் :

  உடல் நலம் :

  மர்லின் மன்றோவிற்கு என்டோமெட்ரியோசிஸ் என்ற நோய் இருந்திருக்கிறது. இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு கர்பப்பையில் இருந்த திசுக்கள் உடலின் பிற பாகங்களுடன் ஒட்டிக் கொள்ளும் இதனால் மாதவிடாயில் பிரச்சனை,அதீத வயிற்று வலி ஆகியவை ஏற்படும். சில நேரங்களில் மலட்டுத்தன்மையை கூட ஏற்படுத்திடும். மர்லின் மன்றோ இந்த பிரச்சனையினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

  பேசும் போது திக்கித் திக்கித் தான் பேசுவார், அவருக்கு தொடர்ந்து பேச்சுப் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

  Image Courtesy

  கருக்கலைப்பு :

  கருக்கலைப்பு :

  அர்தர் மில்லரை திருமணம் செய்து கொண்ட போது ஜூலை 1957 ஆம் ஆண்டு மற்றும் நவம்பர் 1958 ஆம் ஆண்டு என இரண்டுமுறை கருத்தரித்தார். ஆனால் இரண்டுமுறையும் கருக்கலைப்பு ஏற்பட்டுவிட்டது.

  Image Courtesy

  பேட்மேன் :

  பேட்மேன் :

  பேட்மேனை உருவாக்கியவரும் ஆர்டிஸ்ட்டுமான போப் கேன் விக்கி வேல் கதாப்பாத்திரத்திற்கு மர்லின் மன்றோவைத்தான் ரெஃபரன்ஸாக வைத்திருந்தார். 1973 ஆம் ஆண்டு எல்டன் ஜான் என்பவர் மர்லின் மன்றோவிற்கு நினைவாக கேண்டில் இன் விண்ட் என்ற ஆல்பத்தை வெளியிட்டார்.

  பின்னர் 1997 ஆம் ஆண்டு அதே பாடலில் சில அப்டேட் செய்து இளவரசி டயானாவிற்காக வெளியிட்டார்.

  கல்வி :

  கல்வி :

  மர்லின் மன்றோ பள்ளிக்குச் சென்று படிக்கவேயில்லை. அதோடு தன்னுடைய பெயரை மர்லின் மன்றோ என்று மாற்றிய பிறகு அந்த பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கூட தெரிந்திருக்கவில்லையாம்.

  முதன் முதலாக மர்லின் மன்றோ என்ற தன் பெயரை ஆட்டோகிராப் போட்ட போது தான் அதனை உச்சரிக்க பழகியிருக்கிறார். அதோடு அந்த நேரத்தில் மர்லின் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போதும் அதில் இடம்பெறுகிற ‘ஐ' என்ற வார்த்தையை எங்கே சேர்க்கவேண்டும் என்றும் குழம்பியிருக்கிறார் மர்லின் மன்றோ

  Image Courtesy

  நூலகம் :

  நூலகம் :

  ஆரம்பத்தில் பெயரைச் சொல்லவே அவ்வளவு சிரமப்பட்டாலும் காலப்போக்கில் புத்தகங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். மர்லின் மன்றோ மட்டும் பயன்படுத்திய நூலகத்தில் கிட்டத்தட்ட நானூறு புத்தகங்கள் வரை இருந்திருக்கிறது. கலை, வரலாறு, கவிதைகள்,சைக்காலஜி,தத்துவம் என பல துறைகளைச் சார்ந்த புத்தகங்கள் இருந்தன.

  இவை 1999 ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்டது.

  Image Courtesy

  மரணம் :

  மரணம் :

  கலிஃபோர்னியாவில் இருந்த தன் வீட்டில் கையில் போனுடன் படுக்கையில் குப்புற விழுந்தபடி மரணித்திருந்தார் மர்லின் மன்றோ அந்த நேரத்தில் அவர் நிர்வாணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

  இறந்து பல வருடங்கள் ஆனபின்பும் மர்லின் மன்றோவின் முன்னால் கணவரும் பேஸ்பால் வீரருமான ஜோடி மேஜியோ மர்லின் மன்றோவின் நினைவிடத்திற்கு சென்று ரோஜாப் பூக்கள் வைப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

  Image Courtesy

  பாலியல் வன்கொடுமை :

  பாலியல் வன்கொடுமை :

  தன்னுடைய சுயசரிதையில் சிறுவயதில் தான் அனாதை இல்லத்தில் வளர்க்கப்பட்ட போது பல்வேறு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தெரிவித்திருக்கிறார் மர்லின் மன்றோ.அவர் மரணமடைந்த இருபது ஆண்டுகள் கடந்த போதும் அது கொலையா தற்கொலையா என்ற விவாதம் நடைப்பெற்றது.

  1982 ஆம் ஆண்டு இந்த விவாதம் நடந்த போது அவர் அளவுக்கு அதிகமான போதை மாத்திரைகளை உட்கொண்டிருப்பார் அதுவே மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

  Image Courtesy

  போதை மருந்து :

  போதை மருந்து :

  மர்லின் மன்றோ தீவிரமான மன அழுத்தத்தினாலும் தூக்கமின்மை பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் தினமும் தூக்க மாத்திரை சாப்பிடும் பழக்கமும் அவரிடம் இருந்திருக்கிறது. நீண்ட நேரம் தூங்க வேண்டும் என்பதற்காக தூக்க மாத்திரைகளை மதுவில் கலந்து குடிக்கும் பழக்கமும் அவரிடம் இருந்திருக்கிறது.

  Image Courtesy

  கின்னஸ் :

  கின்னஸ் :

  கென்னடியும் இவரும் இணைந்து பாடிய ஹேபி பர்த்டே மிஸ்டர் பிரசிடண்ட் என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற்றது அதோடு அந்த நேரத்தில் அவர் அணிந்திருந்த உடை 1,267,500 டாலருக்கு விற்கப்பட்டது. இதுவரையில் ஒருவர் பயன்படுத்திய ஆடை இவ்வளவு விலை போனது அதுவே முதல் முறை. இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது.

  முதன் முதலாக மாடலிங் செய்த போது மர்லின் மன்றோவிற்கு ஐந்து டாலர் மட்டுமே வழங்கப்பட்டது. அதன் பிறகு 1953 ஆம் ஆண்டு நயகரா என்ற திரைப்படத்தில் நடித்த போது கூட இவர் ஸ்டாக் ஆர்டிஸ்ட் என்று சொல்லி மர்லின் மன்றோவின் மேக்கப் மேனை விட குறைவான சம்பளமே வழங்கப்பட்டது.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Surprising Facts About Marlin Monroe

  Surprising Facts About Marlin Monroe
  Story first published: Friday, April 27, 2018, 12:20 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more