For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  5 Min Break | வரலாற்றில் இடம்பெற்ற ஆச்சரியமான புகைப்படங்கள் - ரிலாக்ஸ் பண்ணுங்க #012

  |

  கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை வெறித்துப் பார்த்து சோர்ந்து போயிருக்கும் உங்களை கொஞ்ச நேரம் வியக்க வைக்கும் சிறிய புகைப்பட தொகுப்பு தான் இது.

  சில சமயம் சில கண்டுபிடிப்புகள் டி20-க்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த மங்கூஸ் பேட்டை போல உபயோகமற்று போகும்.

  ஆம், கவனமாக எந்த ஒரு இடையூர் இல்லாமல் படிக்க வேண்டும் என்றால்... நாம் தான் அமைதியான இடத்திற்கு போக வேண்டுமே தவிர, இரைச்சல் நிறைந்த இடத்தில் உட்கார்ந்துக் கொண்டு காதில் கிலோ கணக்கில் பஞ்சை அடைத்துக் கொள்வது முட்டாள்தனம்.

  இதுவே முட்டாள்த்தனமான செயல் என்றால், இதற்கு ஒரு கருவி, அந்த கருவியில் சுவாசிக்க ஒரு செயற்கை குழாய் என்றெல்லாம் வசதிகள் இருந்தது. அதை மக்கள் பயன்படுத்தினார்கள் என்றால் நீங்கள நம்புவீர்களா?

  நம்பி தான் ஆகவேண்டும். ஏனெனில், அப்படி ஒரு கண்டுபிடிப்பு இருந்தது. அதற்கான சான்றாக புகைப்படங்களும் இருக்கின்றன.

  இப்படி உலகில் நடந்த சில ஆச்சரியமான நிகழ்வுகளுக்கு ஆதாரமாக இருக்கும் புகைப்படங்களை பற்றி தான் நாம் காணவிருக்கிறோம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  இஸ்பெஷல் சாதா!

  இஸ்பெஷல் சாதா!

  இது படிப்பாளிகளுக்கு என பிரத்தியேகமாக கண்டுபிடிக்கப்பட்ட மாஸ்க்குங்க சாமியோவ். இந்த மாஸ்க்கை அணிந்துக் கொண்டால் வெளியே என்ன சம்பதம் வந்தாலும் கேட்காது. கண் பார்வை ஒரு குறுகிய வட்டத்தை விட்டு அகலாது. இதனால் எந்த ஒரு கவன சிதறலும் இன்றி நீங்கள் நன்கு படிக்கலாம். மேலும், சுவாசிக்க எளிதாக இருக்க சுவாச குழாய் வசதியும் இருக்கிறது.

  அடப்பக்கி இதுக்கு பேசமா... எதாச்சும் லைப்ரரி பக்கமா போய் ஓராம உட்கார்ந்து படிக்க வேண்டியது தானே!

  சிறப்பு! மிகச்சிறப்பு!

  சிறப்பு! மிகச்சிறப்பு!

  அன்பார்ந்த குடிமக்களே! இந்த வசதி இப்போ இல்லாம போச்சேன்னு நீங்க வருத்தப்படலாம். இத கண்டுப்பிடிச்ச நபர தேடி நீங்கள் கூகுள்ல அலையலாம். ஆனா என்னப்பண்ண நோ யூஸ்!

  சாதாரணமா எல்லா அலுவலகத்திலயும் தண்ணிக் குடிக்க வாட்டர் பியூரிஃபயர் இருக்கும். ஆனால், 1950களில் சில மேற்கத்திய நாடுகளில் விஸ்கி வழங்கும் கருவியை பொருத்திவைத்து பணியாட்களை குஷிப்படுத்தியுள்ளனர்.

  அடப்பாவிகளா...

  அடப்பாவிகளா...

  1890களில்... இரு இரும்பு டவரில் இருந்து கடலில் குதிரை குதிக்கும் போட்டியாக இது அட்லாண்டிக் நகரத்தில் நடந்து வந்துள்ளது.

  ஒரு உயரமான இரும்பு டவரின் மேல் இருந்து, குதிரையும், அதன் பாகனும் ஒன்றாக கடலில் குதிக்கும் போட்டி தான் இது. இந்த போட்டியை இரண்டாம் உலகப்போருக்கு பிறது இரத்து செய்துவிட்டனர். இதற்காகவே மனித சமூகத்திற்கு ஒரு கும்பிடு போடலாம்.

  கு(கூ)த்து சண்டை!

  கு(கூ)த்து சண்டை!

  ஆரம்பக் காலக்கட்டத்தில் குத்து சண்டையானது ஆண்கள் மட்டுமே பங்குபெறும் வீர விளையாட்டாக இருந்தது. பிறகு, ஆண்கள் மட்டும் தான் வீரர்களா? ஏன் எங்களுக்கு குத்த தெரியாதா... என்று பெண்களும் இந்த போட்டியில் பங்குபெற ஆரம்பித்தனர். இன்று பெண்களுக்கான குத்து சண்டை போட்டிகளும், உலக சாம்பியன்ஷிப் நிகழ்வுகளும் பரவலாக நடக்கிறது. இது நாம் அனைவரும் அறிவோம்.

  இதோ! 1930களில் வீட்டின் மாடி பகுதியில் பெண்கள் குத்து சண்டையிட்டு பயிற்சி செய்யும் படம். ஒரே கூத்தா இருந்திருக்கும் போல...

  நடமாடும் சிறைச்சாலை!

  நடமாடும் சிறைச்சாலை!

  மொபைல் கோர்ட் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், மொபைல் சிறைச்சாலை பார்த்ததுண்டா...?

  ஆம்! 1921 காலக்கட்டத்தில்... இப்படி ஒரு நடமாடும் சிறை இருந்திருக்கிறது.

  சாலையில் யாரேனும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால், போலீஸ் உடனே அவர்களை தங்கள் மூன்று சக்கர பைக்கில் பொருத்தபட்டிருக்கும் இந்த கூண்டில் அடைத்து அழைத்து சென்று விடுவார்கள்.

  கரணம் தப்பினால், மரணம்!

  கரணம் தப்பினால், மரணம்!

  1930களில் எடுக்கப்பட்டமாக இது கருதப்படுகிறது.

  40 வால் ஸ்ட்ரீட் பகுதியில் ஒரு பெரிய கட்டிடத்தின் மேல் மாடியில் பீமில் நின்று ஸ்டைலாக சிகரட் பிடித்தவாறு வேலை செய்துக் கொண்டிருக்கும் வேலையாள் இவர். இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா? எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இன்று அவர் அந்த சிறிய அகலம் கொண்ட பீமில் ஒரு மூட்டையை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு நிற்கிறார். நிச்சயம் கரணம் தப்பினால் மரணம் தான் என்ற சூழல் இது. (இந்த இடத்துல அவர் அன்னிக்கி போஸ் கொடுத்திருக்காட்டி, நாம இன்னிக்கி இப்படி எழுதிட்டு இருக்க முடியாதுங்கிறது வேற விஷயம்.)

  தி கிரேட் மாண்டா!

  தி கிரேட் மாண்டா!

  தி கிரேட் மாண்டா என்று அழைக்கப்படும் இந்த கடல்வாழ் உயிரினம் ஏழு மீட்டர் அகலமும் நீளமும் கொண்டுள்ளது. அதாவது ஏறத்தாழ 23 அடி. இது குறைந்தபட்சம் 1500 கிலோ இருக்குமாம்.

  கடந்த 1933 ஆகஸ்ட் 26ம் நாள் கேப்டன் எ.எல். காஹ்ன் தி கிரேட் மாண்டா ரேவை பிடித்த போது எடுத்தப் புகைப்படம் இது.

  எம்ஜிஎம்!

  எம்ஜிஎம்!

  உலக பிரபல திரைப்பட மற்றும் கார்டூன் தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம் லோகோவை காட்சிப்படுத்தப்பட்ட போது எடுத்த புகைப்படம் இது. இந்த படத்தை கடந்த 1927ல் எடுத்துள்ளனர். இதில், நீங்கள் அந்த சிங்கத்தை காட்டிலும் அதிக கவனத்துடன் பார்க்க வேண்டியது அந்த பழங்கால கேமராவும், மிக்ஸர் கனக்ஷன் போர்டையும் தான்.

  ஃபெண்டாஸ்டிக் ஃபோர்!

  ஃபெண்டாஸ்டிக் ஃபோர்!

  இது ஏதோ நான்கு வயதானவர்கள் ஒன்றாக அமர்ந்து அரட்டையடிக்கும் காட்சி என்று தான் இந்த படத்தை பார்த்த உடன் உங்கள் மனதில் ஒரு கருத்து எழும்.

  ஆனால், இந்த படத்தில் இருக்கும் நால்வர் சாதரான நபர்கள் அல்ல.

  ஹென்றி ஃபோர்ட், தாமஸ் ஆல்வா எடிசன், வாரன் ஜி. ஹார்டிங், ஹார்வே சாமுவேல் ஃபயர்ஸ்டோன் ஆவர்.

  பணிப்பெண்...

  பணிப்பெண்...

  மீண்டும் உங்களுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் புகைப்படம் இது...

  இது யாருடா... ஏதோ ஒரு ஃபேக்டரியில் ஸ்பேனர் வைத்துக் கொண்டு நிற்கும் பெண்கள் படமெல்லாம் வரலாற்று சிறப்பு பெற்ற புகைப்படம் என்று கூறுகிறார்கள் என்று நீங்கள் குமுறலாம்.

  இந்த பெண் யார் தெரியுமா? நார்மா ஜீன்.

  ஆம்! நார்மா ஜீன் என்ற இயற் பெயர் கொண்ட இந்த மிடில் கிளாஸ் பெண்மணி தான். திருமணம் செய்து குழந்தை பெற்று, மாடலிங் உலகில் கால் பதித்து பிறகு கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று... பிறகு பல கோடி ரசிகர்களின் மனதில் கவர்ச்சி கன்னியாக உலா வந்த மர்லின் மன்றோ!

  ப்ளீஸ் கோச்சுக்காதீங்க!

  ப்ளீஸ் கோச்சுக்காதீங்க!

  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான கார்டூன் கதாபாத்திரம் மிக்கி மவுஸ். எலியை அவ்வளவு அழகாக அதற்கு முன் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று வாரணம் ஆயிரம் சூர்யா அளவிற்கு நாம் வசனம் பேசும்படி மிக அழகான எலி மிக்கி மாவுஸ்.

  ஆனால், நீங்கள் படத்தில் காணும் இந்த தோற்றம் தான் ஆரம்ப கால மிக்கி மவுஸ்ன் ஸ்கெட்ச் ஆகும்.

  ஸ்கெட்ச் அம்சமா இருக்கா?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Strange Photos From The Past That Will Blow Your Mind!

  Strange Photos From The Past That Will Blow Your Mind!
  Story first published: Saturday, February 3, 2018, 12:04 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more