For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  திருமணம் செய்து கொண்டதால் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவு ?

  |

  உலகிலேயே மிகப்பழமையான அரசாட்சியை இன்றளவும் கடைபிடித்து வருபவர்கள் ஜப்பான் மன்னர் குடும்பம் தான். இவர்களது அரசாட்சி ஆறாம் நூற்றாண்டில் துவங்கியதாக சொல்லப்படுகிறது. வழி வழியாக அதே குடும்பத்தினர் தான் மன்னராக இருகிறார்கள். இரண்டாம் உலகப்போர் வரையில் இவர்கள் தான் ஆட்சி செய்திருக்கிறார்கள்.

  இப்படி பழமையான பாரம்பரியமான ஓர் அரசாட்சி இனியும் தொடருமா? அல்லது முடிவுக்கு வருமா என்ற சந்தேகம் எல்லாருக்கும் எழுந்துள்ளது. மன்னர் குடும்பத்தில் பிறந்த இளவரசி அரச குடும்பத்தை சாராத ஒரு சாதரண ஆணை காதலிக்கிறார் அவரையே திருமணமும் செய்து கொள்ள திட்டமிட்டிருக்கிறார். அது தான் அத்தனை களேபரங்களுக்கும் காரணம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  மன்னருக்கு அரசியல் ரீதியாக எந்த அதிகாரமும் கிடையாது. அமைச்சவரையில் பங்கேற்பார்.எல்லாரும் ஒரு மனதாக ஒப்புதல் அளித்தால் அதனை அங்கீகரிக்கும் வேலை மன்னருடையது.

  இவர் ஜப்பான் நாட்டின் ஓர் அடையாளமாகவும், மக்களை ஒற்றுமையுடன் பாதுகாப்பது மன்னரின் பொறுப்பு.

  Image Courtesy

  #2

  #2

  ஜப்பான் அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் கடந்த வாரம் ஒரு செய்தியை வெளியிட்டார். மறைந்த மன்னர் டகாமொடோவின் மூன்றவது மகளும் இளைய இளவரிசியுமான அயகா கெய் மொரியா என்ற 32 வயது இளைஞனை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று வெளியிடப்பட்டது.

  இதனைத் தொடர்ந்து சர்ச்சைகள் எழ ஆரம்பித்து விட்டது.

  Image Courtesy

  #3

  #3

  சுமார் ஆயிரம் வருட பாரம்பரியம். காலங்காலமாக கடைபிடித்து வரும் வழக்கப்படி அரச குடும்பத்தில் பிறந்த பெண்கள் அரசு குடும்பத்தினரை தவிர வேறு யாரை திருமணம் செய்து கொண்டாலும் அவர்கள் அரச குடும்பத்திலிருந்து நீக்கப் படுவார்கள். அவர்களுக்கு எந்த பொறுப்புகளும் வழங்கப்படமாட்டாது.

  ஜப்பான் அரச குடும்பத்தில் பதினோறு வம்சாவளியினர் இருக்கிறார்கள் அத்தனை பேருக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். ஆனால் ஆண்களுக்கு இந்த விதிமுறை இல்லை. அரச குடும்பத்தில் உள்ள ஆண்கள் அரச குடும்பத்தை சாராத பெண்களை திருமணம் செய்து கொண்டாலும் அவர்கள் அரச குடும்பத்தின் வாரிசாகத்தான் கருதப்படுகிறார்கள். அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுகிறது.

  Image Courtesy

   #4

  #4

  இதற்கு முன்னதாக இளவரசி அயகாவின் மூத்த சகோதரியும் வெளிநபரை திருமணம் செய்து கொண்டு அரச குடும்பத்திலிருந்து விலகிச் சென்றிருக்கிறார். 2005 ஆம் ஆண்டு அக்காள் சயாகோ திருமணம் செய்து கொண்டு செல்லும் போது எல்லாம் சரியாப்போகும் நான் சமாளிப்பேன் என்று சொல்லியிருக்கிறார்.

  இப்போது அரச குடும்பத்தில் 20க்கும் குறைவான நபர்கள் தான் இருக்கிறார்கள். ஒரு பக்கம் மூத்தவர்களின் இயற்கை மரணம் இன்னொரு பக்கம் இப்படி அரச குடும்பத்திலிருந்து விலகிச் செல்பவர்கள்.

  Image Courtesy

  #5

  #5

  இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் தங்களுக்கென அதிகாரித்தில் பங்கு வைத்திருப்பது சாதரண விஷயம் கிடையாது. இவர்களை பிற நாட்டினர் அரசு விருந்தினர்களாக அழைக்கிறார்கள்.

  இதனால் சர்வதேச உறவுக்கும், ஒப்பந்தத்திற்கும் அரச குடும்பத்தினர் முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள்.

  Image Courtesy

  #6

  #6

  இப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிற இளவரசி அயகா மற்றும் அவரது காதலர் கெய் மொரியா ஒரு வருடத்திற்கு முன்பாக சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  இருவருக்கும் பிடித்துப் போக காதலிக்க துவங்கியிருக்கிறார்கள். ஆகஸ்ட் பன்னிரெண்டாம் தேதி நிச்சியதார்த்தமும் அக்டோபர் 29 ஆம் தேதி திருமணமும் நடத்தப்போவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

  Image Courtesy

  #7

  #7

  இனி இளவரசி அயகா அரச குடும்பத்தினருக்கு கிடைக்கக்கூடிய எந்த மரியாதை, சலுகைகளும் கிடைக்காது. மொத்தமாக அரச குடும்பத்திலிருந்து நீக்கப்படுகிறார் என்றாலும் அயகாவிற்கு ஒரு மில்லியன் டாலர் தொகை வரை வழங்கப்படும் என்று எண்ணப்படுகிறது.

  Image Courtesy

  #8

  #8

  இன்னும் நாங்கள் திருமணத்திற்கு தயாராகவில்லை அதனால் அக்டோபர் மாதம் நடத்துவதாக இருந்த எங்களின் திருமணத்தை பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிவைப்பதாகவும் அயகா சார்பில் சொல்லப்படுகிறது.

  அடுத்தபடியாக மன்னர் குடும்பத்தில் இருப்பவர்கள் மேலும் அரசு குடும்பத்தை சாராத நபரை திருமணம் செய்து கொண்டால் என்ன நடக்கும், அரசாங்க பொறுப்புகள் வேறு யாரிடம் பிரித்து வழங்கப்படும் என்று தொடர்ந்து விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse relationship marriage
  English summary

  Story About Japan Royal Family

  Story About Japan Royal Family
  Story first published: Saturday, June 30, 2018, 13:36 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more