80களில் அமெரிக்காவில் அதிர்வலைகள் உண்டாக்கிய இந்திய சாமியாரின் மறுபக்கம்!

Posted By: Staff
Subscribe to Boldsky

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். இந்தியாவில் பெரும் அதிர்வலைகள் உண்டாக்கிய கலாச்சாரம் அது. ஓஷோ என்று அழைக்கப்படும் பகவான் ஸ்ரீ ராஜ்நீஷ்ன் கருப்பு பக்கங்களை மீண்டும் ஸ்பாட் லைட்டுக்கு கொண்டு வந்துள்ளது ராஜ்நீஷ் புரம்: வைல்டு வைல்டு கண்ட்ரி என்ற நிகழ்ச்சி.

ஓரிகன் நகரின் ஆண்டிலோப் பகுதி என்று அறியப்பட்ட அந்த இடமானது, பின்னாட்களில் ராஜ்நீஷ் புரமாக அழைக்கப்பட்டது. 1980களில் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய அந்த இடத்தில் நடந்த சில சம்பவங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு!

பிறப்பு!

சந்திர போகன் ஜெயின் என்ற இயற்பெயர் கொண்ட ஓஷோ பிறந்தது 1931ல். பிறகு 60களில் பகவான் ஸ்ரீ ராஜ்நீஷ் என்று அழைக்கப்பட்டார். பின்னாளில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற பிறகு 1970-80களில் ஓஷோவாக மாறினார்.

குடும்பம்!

குடும்பம்!

துணி வியாபாரம் செய்து வந்த குடும்பத்தில் பிறந்த ஓஷோவுடன் பிறந்தவர்கள் மொத்தம் 11 பேர் இதில் மூத்த மகன் தான் ஓஷோ. இவரது மூதாதையர்கள் குச்வாடா என்ற பகுதியில் வசித்து வந்தனர். இது மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஒரு குக்கிராமம் ஆகும்.

தாத்தா பாட்டியுடன்!

தாத்தா பாட்டியுடன்!

சிறு வயதில் அம்மா, அப்பா வியாபாரம் சார்ந்து பிசியாக வேலை செய்தி வந்த காரணத்தால், தாத்தா- பாட்டியுடன் வசித்து வந்துள்ளார் ஓஷோ. பிறகு பாட்டியின் மரணம், அவரது மரணத்தை தொடர்ந்து தாத்தாவும் மரணம் அடைய, பெற்றோருடன் சேர்ந்த வாழ துவங்கினார் ஓஷோ.

வற்புறுத்தல்!

வற்புறுத்தல்!

இவரது 21 வயதில் இவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் வற்புறுத்தினார்கள். ஆனால், 1953ல் தான் பன்வர்த்தல் பூங்காவில் இருந்த ஒரு மரத்தின் அடியே ஆன்மீக ஞானம் பெற்றேன் என்று கூறி, ஆன்மீகத்தில் பயணம் செய்ய துவங்கினார் ஓஷோ. ஓஷோ போலியான வாக்குறுதிகள் அளிக்கிறார் அவர் வெற்று சடங்குகள் செய்து வருகிறார் என்று பிற ஆன்மீக தலைவர்கள் கூறி வந்தனர்

மா யோகா லட்சுமி

மா யோகா லட்சுமி

ஓஷோவின் சீடர் மற்றும் லட்சுமி தகர்சி குருவா என்பவர் ஒரு செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ஓஷோவின் செயலாளர் மற்றும் முதற்கட்ட சீடரும் ஆவார். இவருக்கு பின்னாளில் ஓஷோ மா யோகா லட்சுமி என்று பெயர் சூட்டினார்.

உபதேசம்!

உபதேசம்!

ஓஷோ வழங்கிய பெரும்பாலான உபதேசங்கள் செக்ஸ் கலந்து இருந்தது. திறந்தவெளியில், வெளிப்படையாக, செக்ஸ் குறித்த தனது கருத்துகளை முன்னெடுத்து வைத்தார் ஓஷோ. இந்திய ஊடகங்கள் இவரை அதன் பிறகு செக்ஸ் குரு என்ற குறிப்பிட ஆரம்பித்தன.

ரோல்ஸ் ராய்ஸ்!

ரோல்ஸ் ராய்ஸ்!

பகவான் ஸ்ரீ ராஜ்நீஷ் என்று அழைக்கப்பட்டு வந்த ஓஷோ 98 ரால்ஸ் ராய்ஸ் கார்களை சொந்தமாக வைத்திருந்தார். இவர் ஒரு ஆடம்பரமான வாழ்கையை வாழ்ந்து வந்தார். தான் வசித்து வந்த இடத்தை சுற்றி தினமும் ஆடம்பர காரில் உலா வருவது இவரது வழக்கம். இவரை காண இவரது சிஷியர்கள், பின்தொடர்பவர்கள் வழிநெடுக்க வரிசையில் நிற்பார்கள்.

மேற்கத்திய மக்கள்!

மேற்கத்திய மக்கள்!

தனது விளக்கவுரையில் ஓஷோ தனது சுய ஆய்வுகள் மற்றும் பிற ஆன்மீக சடங்கு, போதகர்கள் மற்றும் உள்ளுணர்வுவாதிகள் கருத்துகள் மீதான தனது சொந்த சிந்தனைகளை வைத்து எழுதியது மற்றும் பேசியது மேற்கத்திய நாடுகளில் வசித்து வரும் மக்களை ஈர்த்தது. இதனால் ஓஷோவை அவர்கள் பின் தொடர ஆரம்பித்தனர்.

1981

1981

இந்தியாவில் பெரிதாக சீடர்கள் கிடைக்காத ஓஷோ 1981ல் அமெரிக்க சென்றார். அங்கே தனது சர்வதேச மையத்தை நிறுவி அதற்கு ராஜ்நீஷ் புரம் என்று பெயர் வைத்து நடத்தி வந்தார். இங்கே தான் பின்னாட்களில் பல சர்ச்சைகள் வெடித்தன.

போதை!

போதை!

பகவான் ராஜ்நீஷ் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். இதை இவரது சிஷியர்களே பின்னாட்களில் சில பேட்டிகளில் கூறி இருந்தனர்.

இவருக்கு இருந்த பல உடல்நல கோளாறுகள் காரணமாக அலியம் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற போதை பொருட்களை தொடர்ந்து இவர் எடுத்து வந்தார் என்று அறியப்படுகிறது.

செக்ஸ் கலாச்சாரம்!

செக்ஸ் கலாச்சாரம்!

இந்தியாவில் ஏற்கனவே செக்ஸ் குரு என்ற பெயர் வாங்கிய ராஜ்நீஷ் தொடர்ந்து அமெரிக்காவிலும் அதே வேலைகள் தான் செய்து வந்தார். ராஜ்நீஷ் பல பெண்களுடன் செக்ஸ் உறவில் இருந்துள்ளார். மேலும், இவர் ஹியூமன் செக்ஸுவல் சார்ந்த மக்களுக்கு தெளிவு ஏற்படுத்தினார் என்றும் இவரது சீடர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

பிரச்சனை!

பிரச்சனை!

உணவில் விஷம் வைத்ததாக கூறப்பட்ட புகார்கள், , ஆயுதங்கள் வைத்திருந்தது, சட்டத்திற்கு எதிரான திருமணங்கள் என பல பிரச்சனைகள் எழ அமெரிக்காவில் ஓஷோவின் ராஜ்நீஷ் புரம் பெரும் கண்காணிப்புக்கு உள்ளானது. அங்கே வரும் அழைப்புகள் ரெகார்டு செய்யப்பட்டன. ராஜ்நீஷ் புரம் மீது அமெரிக்கா விமானம் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது என்றும் அறியப்படுகிறது.

மரணம்!

மரணம்!

1990ள் ஓஷோ மரணம் அடைந்தார். மாரடைப்பு மூலம் மரணம் அடைந்தார் என்று கூறப்பட்டாலும், இவரது மரணத்திற்கு காரணம் அமெரிக்கா என்றும் சிலர் கூறினர். அவர்களது சாதியின் காரணமாகவே ஓஷோ மரணம் அடைந்தார் என்றும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகின்றன.

சர்வதேச மையம்!

சர்வதேச மையம்!

ஓஷோவின் மறைவுக்கு பிறகு இந்தியாவில் வெளிநாட்டவர் வந்து செல்லும் பெரிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக அவரது சர்வதேச மையம் மாறி உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த இடத்திற்கு இரண்டு இலட்சத்திற்கும் மேலானவர்கள் வந்து செல்கிறார்கள் என்று அறியப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking Facts about Osho Rajneeshpuram and His Sex Cult!

Shocking Facts about Osho Rajneeshpuram and His Sex Cult!