சீனப்பெருஞ்சுவரில் மனித எலும்பு கூடுகள் புதைந்துள்ளனன்வா? உண்மை என்ன? - டைம் பாஸ் #003

Posted By:
Subscribe to Boldsky
Random Facts to know #003

Cover Image Courtesy: Wikipedia

நாம் அறிந்த கேள்விகளுக்கான தெரியாத பதில்களும், அறிந்த விஷயங்கள் குறித்த தெரியாத தகவல்களும்...

இன்றைய டைம் பாஸ் #003ல் நாம் காணவிருக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்...

  • யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர், ஒரு யூதகுல பெண்ணை ஒருதலையாக காதலித்தார் என்று உங்களுக்கு தெரியுமா?
  • சனி கிரகத்திற்குள் சென்றால் விண்கலம் தானாக நொறுங்கும் அபாயம் இருக்கிறது ஏன்?
  • மன அழுத்தம் காரணமாக பெண்களுக்கு ஏற்படும் அபாயம் என்ன?
  • ஓர் ஆண் தனது ஆண்குறியால் எவ்வளவு அதிகமான எடையை தூக்க முடியும் என எண்ணுகிறீர்கள்?
  • உலகில் வாழ்ந்த மிக உயரமான தாவர உண்ணி டைனோசர் பற்றி உங்களுக்கு தெரியுமா?
  • ஆதி மனிதன் பிறந்தது ஆப்ரிக்காவிலா? ஆதாரமாக கூறப்படும் இரண்டு ஆய்வறிக்கைகள்!
  • பச்சைக்குத்திக் கொள்வதற்காக மட்டும் வருடத்திற்கு அமெரிக்கர்கள் எத்தனை ஆயிரம் கோடிகள் செலவு செய்கிறார்கள் தெரியுமா?
  • சீனப்பெருஞ்சுவரில் மனித எலும்பு கூடுகள் புதைந்துள்ளனன்வா? உண்மை என்ன?
  • பெண்ணும், பெண்ணும் உறவில் ஈடுபட்டாலும் கூட பால்வினை நோய் தாக்கம் பரவுமா?
  • ஒயினை சேமித்து வைக்க பாதுகாப்பான இடம் எது?
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம்!

மன அழுத்தம்!

பெண்கள் பலவீனம் அடைய 25% காரணமாக இருப்பது மன அழுத்தம் தான் என கூறப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்நாளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். இதன் மூலம் அவருக்குள் ஏற்படும் கடுமையான தாக்கமானது, அவரை பலவீனம் அடைய செய்கிறது.

ஹிட்லரின் காதல்!

ஹிட்லரின் காதல்!

சுய சரிதை எழுத்தாளரான ஆகஸ்ட் குபிசெக் என்பவர், ஹிட்லர் தனது பதின் வயதில் ஒரு யூதகுல பெண் மீது காதல் கொண்டிருந்தார் என்றும். அவரது பெயர் ஸ்டெபானி ஐசக் என்றும் கூறியுள்ளார். ஐசக் மீது அதீத காதல் கொண்டிருந்த ஹிட்லர், ஒரு கட்டத்தில் அவர் கிடைக்காவிட்டால், அவரை கடத்தி சென்று ஒன்றாக தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்றும் திட்டமிட்டிருந்தார் என குபிசெக் குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கோள்!

சனிக்கோள்!

சனிக்கோளின் வளிமண்டல அழுத்தமானது பூமியுடன் ஒப்பிடும் போது நூறு மடங்கு அதிகமானது என்று கூறப்படுகிறது. சனிக்கோளின் இந்த சக்திவாய்ந்த அழுத்தத்தால் வாயுவை கூட நீராக்கிவிடும் என்கிறார்கள். மேலும், வெளியிலிருந்து ஏதாவது விண்கலம் சனிக்கோளினுள் சென்றால், அதை தனது அழுத்த சக்தியால் நொறுக்கிவிடும் தன்மை கொண்டிருகிறது.

அடேயப்பா!

அடேயப்பா!

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஒரு சாமியார் தனது ஆண்குறி மூலம் ஒரு மினிடோர் ஆட்டோவை இழுத்ததே உலகம் முழுக்க வைரல் ஆனது. ஆனால், ஹாங்காங்கை சேர்ந்த மோ கா வாங் எனும் நபர், கடந்த 1995ம் ஆண்டு தனது ஆண்குறி மூலம் 250 பவுண்ட் எடையை இரண்டடி உயரத்திற்கு தூக்கி சாதனை செய்துள்ளார்.

மனிதர்களின் பிறப்பு!

மனிதர்களின் பிறப்பு!

கடந்த 1974ல் எத்தியோப்பியாவின் ஹடர் எனும் இடத்தில் லூசி எனும் மனித குளத்தின் மூதாதையராக கருதப்படும் உயிரினத்தின் எலும்புக்கூடு கண்டறியப்பட்டது. அந்த எலும்புக் கூடுகள் ஏறத்தாழ 3.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்திருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டது. மேலும், 1965ல் தன்சானியாவின் கிபிஷ் பகுதியில் ஹோமொனிட் எனப்படும் மனித குல மூதாதையராக கருதப்படும் இனத்தை சேர்ந்த 165 பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த இரண்டு ஆய்வு குறிப்புகளை வைத்து ஆதி மனிதன் ஆப்ரிக்காவின் வடகிழக்கு பகுதியில் தோன்றியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

உயர்ந்த டைனோசர்!

உயர்ந்த டைனோசர்!

உலகில் வாழ்ந்த மிக உயரமான தாவர உண்ணியாக கருதப்படுகிறது டைனோசர் இனத்தை சேர்ந்த பிரைச்சிசோரஸ். இது ஆப்ரிக்கா பகுதியில் உயிர் வாழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதன் தலை மட்டும் தரையில் இருந்து 39 அடி நீளம் உயரத்தில் இருக்குமாம். அதாவது 12 மீட்டர்.

165 கோடி டாலர்கள்!

165 கோடி டாலர்கள்!

பொதுவாகவே அமெரிக்கா சென்றால் ஏகபோக வாழ்க்கை வாழலாம் என்பது உலக மக்களின் நினைப்பு. முக்கியமாக இந்தியர்கள் மத்தியில் இந்த எண்ணம் அதிகமாகவே இருக்கிறது. அது உண்மையும் கூட. அங்கே குதூகலிக்க, வாழ்க்கையை அனுபவிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

எப்படி செலவு செய்வது என தெரியாத அமெரிக்கர்கள் வருடத்திற்கு 165 கோடி டாலர்களை டாட்டூ குத்த மட்டும் செலவு செய்கிறார்கள் என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. இன்றைய டாலர் மதிப்புக்கு இது இந்திய பணத்தில் 10,506 கோடிக்கு இணையானது என்கிறார்கள்.

மனித எலும்பு கூடுகள்...

மனித எலும்பு கூடுகள்...

சீனப்பெருஞ்சுவர் கட்டுமானம் நடந்துக் கொண்டிருக்கும் போது அந்த சுவரின் வலிமையை அதிகரிக்க, சுவர்கள் கட்ட பயன்படுத்தப்பட்ட கற்களின் இடையே இறுக்கத்தை அதிகரிக்க மனித எலும்புக் கூடுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவெறும் செவிவழி செய்தி தான். ஆனால், இது உண்மையானது அல்ல. உண்மையில் அரிசி மாவு போன்ற பொருள் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறுகிறார்கள். மற்றபடி மனித எலும்பு கூடுகள் சீனப்பெருஞ்சுவரின் எந்த பகுதியிலும் உபயோகப்படுத்தப்படவில்லை என்கின்றனர்.

ஒயின்!

ஒயின்!

ஒயினை சேமித்த வைக்க தகாத இடமாக கூறப்படுகிறது கிச்சன். கிச்சனில் எப்போதும் அளவுக்கு மிகுதியான சூடு இருக்கும். இது ஒயின் சேமித்து வைக்க ஏதுவான இடமில்லை என்கிறார்கள். அதே போல ஃபிரிட்ஜில் வைப்பதும் பாதுகாப்பானது அல்ல. ஃபிரிட்ஜின் குளுமை ஒயினுக்கு மிகையானது. ஆகவே, மிகுந்த சூடும், மிகுந்த குளுமையும் இல்லாமல் மிதமான தட்பவெப்பத்தில் ஒயினை வைக்க வேண்டும் என்கிறார்கள்.

பால்வினை நோய்!

பால்வினை நோய்!

பொதுவாக ஒரு ஆண் பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டால், அல்லது பல ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்ட பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது, பால்வினை நோய் இருக்கும் ஆணுடன் ஒரு பெண் உறவு வைத்துக் கொண்டால் தான் பால்வினை நோய் பரவும் என அறியப்படுகிறது.

ஆனால், ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டாலும் பால்வினை நோய் தொற்று உண்டாக வாய்ப்பு உள்ளதாம். எனவே, லெஸ்பியன் போன்ற உறவில் ஒருவருக்கு பால்வினை தொற்று இருந்தாலும், வருடம் ஒருமுறை ஸ்க்ரீனிங் டெஸ்ட் செய்துக் கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Random Facts to know #003

Random Facts 003
Story first published: Friday, January 19, 2018, 11:30 [IST]
Subscribe Newsletter