ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஆண் உச்சநிலை இன்பம் அடைய முடியாது ஏன்? - டைம் பாஸ் #001

By John
Subscribe to Boldsky
Random Facts To Know #001

Cover Image: commons.wikimedia

நாம் அறிந்த கேள்விகளுக்கான தெரியாத பதில்களும், அறிந்த விஷயங்கள் குறித்த தெரியாத தகவல்களும்...

இன்றைய டைம் பாஸ் #001ல் நாம் காணவிருக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்...

  • ஒரே வேளையில் 34 இலட்சம் பேருக்கு எங்கே? எப்படி? எதற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டது?
  • ஒருமுறை ஆண் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு உச்சநிலை அடைந்த பிறகு, மறுமுறை மீண்டும் அந்த உச்ச நிலை அடைய நேர தாமதம் ஆவது ஏன்?
  • இன்றைய உலகில் பல்வேறு நாடுகளில் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் அதிகரித்து வருவதன் காரணம் என்ன?
  • நாம் விரும்பி பருகும் சூப் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரியுமா?
  • ஆன்மீகத்தையும், கடவுள் நம்பிக்கையும் கொண்டிருக்கும் அனைவரும் முஸ்லிம் தான்... எப்படி தெரியுமா?
  • ஒரு காட்சியை நடித்து முடிக்க முன்னூறுக்கும் மேற்பட்ட டேக்குகள் வாங்கிய அந்த சூப்பர்ஸ்டார் நடிகர் யார்?
  • போதுமான அளவு சுகாதாரமான நீர் கிடைக்காமல் உலகில் வருடத்திற்கு எத்தனை கோடி குழந்தைகள் இறக்கிறார்கள்?
  • உறங்கிக் கொண்டிருந்தாலும் கூட மரக்கிளையில் இருந்து பறவை கீழே விழாது, அதன் காரணம் என்ன?
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரண தண்டனை!

மரண தண்டனை!

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளான அமெரிக்கா, தி கிரேட் பிரிட்டன் மற்றும் ரஷ்யா சேர்ந்து ஜெர்மனியில் De-Nazification என்ற பெயரில் போர் முடிவுக்கு பின் நாசி இயக்கத்தை சேர்ந்த 34 இலட்சம் பேருக்கு பல வகையில் மரண தண்டனை அளித்தனர். மேலும், பல இனவெறி சட்டங்களை ரத்து செய்தனர். பள்ளி பாடங்களில் இருந்து இனவெறி அரசியல் பாடங்களை நீக்கினார்கள். நாசியின் கூட்டு அமைப்புகள் அனைத்தையும் அழித்தனர்.

உச்ச நிலை இன்பம்!

உச்ச நிலை இன்பம்!

ஆண்கள் தாம்பத்தியத்தின் போது உச்ச நிலை இன்பம் கண்ட பிறகு Refractory Period (பலனற்ற காலம்) என சில மணித்துளிகள் இருக்கும். இந்த நேரத்தில் (நிலை) முடியும் வரை ஆண்களால் அடுத்த உச்சகட்ட நிலையை அடைய முடியாது. இதை ஏறத்தாழ ரீசார்ஜ் டைம் என்பது போல கோரலாம். இந்த காலத்தின் இடைவேளை துணை மற்றும் வயதை சார்ந்து மாறுபடலாம் என்றும் கூறப்படுகிறது.

மார்பக புற்றுநோய்!

மார்பக புற்றுநோய்!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு மருத்துவ நாளேட்டில்... பெண்களுக்கு இந்த காலத்தில் அதிகளவில் மார்பக புற்றுநோய் தாக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மல்டிவைட்டமின் மருந்துகள் அதிகம் எடுத்துக் கொள்வது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் ஏற்பட காரணியாக இருப்பது அவர்கள் பயன்படுத்தும் மேக்கப் பொருள்களில் இருக்கும் கெமிக்கல் என்றும் கூறப்படுகிறது.

சூப்!

சூப்!

சூப் பிடிக்காது என்று கூறும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கும். சைவம், அசைவம் என இரண்டு பிரிவிலும் சூப் விரும்பும் மக்கள் மிகையாகவே இருப்பார்கள். சிலர் சூப் குடித்தால் அதிகம் சாப்பிட முடியாது என்று காரணம் கூறி சூப் பருக மறுப்பார்கள்.

உங்களுக்கு தெரியுமா? முதன் முதலில் எப்போது சூப் தயாரிக்கப்பட்டது என்று.

6000 B.C.யில் முதன் முதலில் நீர்யானை மற்றும் பேரிச்சம் பழம் கொண்டு சூப் தயாரித்தனர் என சில தகவல்கள் கூறுகின்றன. கிட்டத்தட்ட சர்க்கரை பொங்கலும், கறிக்குழம்பு காம்பினேஷன் தான்!

இஸ்லாம்!

இஸ்லாம்!

இஸ்மால் என்பது ஒரு அரபு சொல். இதன் பொருள் அமைதி, பாதுகாப்பு மற்றும் அர்பணிப்பு. முஸ்லிம் என்றால், கடவுளிடம் தன்னை அமைதிக்காக அர்பணிக்கும் நபர் என்று பொருளாம். முஸ்லிம் என்பது தனி மதத்தை குறிக்கும் சொல் கிடையாது. எந்த மதமாக இருந்தாலும் யார் ஒருவர் தன்னை கடவுளிடம் அர்பணித்துக் கொள்கிறாரோ அவரை முஸ்லிம் என்று கூறலாம். இது ஒரு பொதுச்சொல்.

சிட்டி லைட்ஸ்!

சிட்டி லைட்ஸ்!

பொதுவாக சினிமா எடுக்கும் போதும், ஏதேனும் காட்சி கடினமாக இருந்தாலும் பல டேக்குகள் எடுப்பார்கள். சில சிறந்த நடிகர்கள் எவ்வளவு கடினமான காட்சியாக இருந்தாலும் அசால்ட்டாக சிங்கிள் டேக்கில் முடித்துவிடுவார்கள்.

உங்களுக்கு தெரியுமா? சார்லி சாப்ளின் நடித்த சிட்டி லைட்ஸ் என்ற உலக புகழ்பெற்ற திரைப்படத்தின் ஒரு காட்சியை நடித்து முடிக்க சாப்ளின் 324 டேக்குகள் வாங்கினாராம். இந்த படம் 1931ல் வெளியான ஊமைப்படம் என்பது குறிப்பிடத்தக்க