For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் அங்கீகாரத்திற்கு ராகுல் தகுதியானவர் என்பதற்கான 13 காரணங்கள்!

ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் அங்கீகாரத்திற்கு ராகுல் தகுதியானவர் என்பதற்கான 13 காரணங்கள்!

|

ஐசிசி தனது ஹால் ஆப் ஃபேமில் புதியதாக இந்திய வீரர் ராகுல் திராவிடை இணைத்துள்ளது. இவருடன் பாண்டிங், டைலர் போன்றவர்களும் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹால் ஆப் ஃபேமில் பெற ராகுல் திராவிட்டுக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர் செய்த சாதனைகள் எல்லாம் என்ன?

ராகுல் திராவிட் அன்று இந்திய கிரிக்கெட் அணியின் தி கிரேட் வால். இன்று வளர்ந்து வளரும் இளம் இந்திய அணியின் அஸ்திவாரம். அன்றும், இன்றும், என்றும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் சரி, ரசிகர்களுக்கும் சரி... ஒரு பெரும் ஊக்கம் அளிக்கும் நபர் ராகுல் திராவிட்.

Rahul Dravid Inducted in ICC Hall of Fame!

Image Soure: Sayitloud

சச்சின் என்ற ஜாம்பவான் பிம்பத்துடன் சேர்ந்து இந்திய அணியின் பெரும் தூணாக நீண்ட காலம் பயணித்தவர் ராகுல் திராவிட். இன்று இந்திய அணி ஒரு ஃபிட்டான அணியாக இருக்கிறது. ஆனால், அன்றைய இந்திய அணியில் ஃபிட்டாக இருந்த சிலரில் ராகுலும் ஒருவர்.

இனி... ஹால் ஆப் ஃபேமில் இடம்பெற ராகுல் தன்வசம் வைத்திருக்கும் பெரும் தகுதிகளும், சாதனைகளும் குறித்து காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகள் என இரண்டுமுக்கிய பிரிவுகளிலும் பத்தாயிரத்திற்கும் அதிகமான ரன்கள் குவித்த ஏழு வீரக்ளில் ராகுல் திராவிட்டும் ஒருவராவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ராகுல் மொத்தம் 13, 288 ரன்களை தான் விளையாடிய 164 போட்டிகளில் குவித்துள்ளார். இவரது சராசரி 52.31 ஆகும். இது டெஸ்ட் அரங்கில் ஒரு சிறந்த சராசரி விகிதம் ஆகும். இவர் சச்சின் மற்றும் காலிஸ் ஆகியோருக்கு அடுத்த இடம் வகிக்கிறார்.

#2

#2

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகப்படியான பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ராகுல். தனது 16 வருட டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் ராகுல் 31,258 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். மேலும், அதிக நேரம் கிரீஸில் இருந்த வீரர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார் ராகுல். இவர் 44, 152 நிமிடங்கள் அதாவது 736 மணி நேரம் கிரீஸில் நின்று விளையாடி இருக்கிறார். பந்து எதிர்கொண்ட சாதனையில் ராகுலை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சச்சின் இருக்கிறார். இவர் டெஸ்ட் அரங்கில் 29, 437 பன்ன்துகளை எதிர் கொண்டிருக்கிறார். இதனால் தான் ராகுலை தி வால் என்று அழைக்கின்றனர்.

#3

#3

டெஸ்ட் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றிருந்த பத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக் காரர் ராகுல் திராவிட். விக்கெட் கீப்பராக அல்லாமல், அதிக கேட்சுகள் பிடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக் காரர் ராகுல் திராவிட் தான். இவர் தான் விளையாடிய 164 டெஸ்ட் போட்டிகளில் 210 கேட்சுகள் பிடித்துள்ளார்.

#4

#4

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பொறுமையும் ராகுல் திராவிட்டுக்கு இருக்கிறது. மொத்தம் தான் விளையாடிய 219 இன்னிங்க்ஸ்ல் 10, 524 ரன்கள் குவித்துள்ளார் ராகுல். இதில் இவரது சராசரி 52.88 ஆகும்.

#5

#5

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் வாக்கிற்கு அடுத்ததாக உலகக் கோப்பை போட்டிகளில் அடுத்ததடுத்த போட்டிகளில் தொடர்ந்து சதமடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார் ராகுல் திராவிட். 1999ம் நடந்த உலக கோப்பைப் போட்டி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் ராகுல் திராவிட் ஆவார். அந்த தொடரில் ராகுல் மொத்தம் 461 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#6

#6

ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இரண்டு முறை முன்னூறுக்கு அதிகமான பார்ட்னர்ஷிப் ரன்கள் குவிப்புகளில் இடம் பிடித்திருந்தவர் ராகுல். இந்தியாவில் அல்லாமல் வெளிநாட்டில் நடந்த போட்டிகளில் அதிக ரன் சராசரி வைத்திருந்த இந்திய வீரர் என்ற பெருமையும் ராகுலையே சேரும். ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து அதிக சராசரி கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலில் 54.58 என்ற சராசரி விகிதம் வைத்திருக்கிறார் ராகுல்.

#7

#7

தொடர்ந்து நான்கு இன்னிங்ஸ்களில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்த காரர் ராகுல். இவர் இதை 2012ம் ஆண்டு நிகழ்த்தினார். இங்கிலாந்துக்கு எதிராக மூன்று இன்னிங்க்ஸில் 115, 148 மற்றும் 217 ரன்கள் குவித்த ராகுல். தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் நூறு ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

#8

#8

டெஸ்ட் போட்டிகளில் பார்ட்னர்ஷிப் முறையில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் ராகும் இரண்டாவது இடம் வகிக்கிறார். இவர் மொத்தம் பார்ட்னர்ஷிப் முறையில் 32,039 ரன்கள் சேர்த்திருக்கிறார். இவருக்கு முன்னதாக முதல் இடத்தில் இருப்பவர் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் சந்திரபால் ஆவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Rahul Dravid Inducted in ICC Hall of Fame!

Rahul Dravid Inducted in ICC Hall of Fame, here are the reasons why he deserves his Place on Hall of fame.
Story first published: Tuesday, July 3, 2018, 17:11 [IST]
Desktop Bottom Promotion