TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
பெயரின் முதல் எழுத்து B -ல் ஆரம்பிக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் எதிர்காலம் எப்படியிருக்கு
ஒரு நபரின் பெயரின் ஆரம்ப எழுத்து நம்பர்களுடன் தொடர்புடையது என எண் கணிதம் கூறுகிறது. இந்த நம்பரை வைத்து ஒரு நபரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். ஒருவரின் இயல்பு, அவரது தேர்வுகள், அவரது வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கை முதலியனவற்றை ஒரு நபரின் பெயரின் ஆரம்ப எழுத்தை வைத்தே எளிதில் அறியலாம்.
எண்கணித வல்லுனர்கள் பெயர்களின் முதல் எழுத்தை வைத்தே அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் எனக் கூறுகின்றனர். முதல் எழுத்தே ஒருவரின் பெயரின் ஆரம்பம் என்பதால், அதுவே அந்த நபரின் ஆளுமை மீது அதிகபட்ச விளைவைக் கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில், இங்கே 'B' என்ற எழுத்தில் தொடங்கும் நபர்களின் ஆளுமைப் பண்புகளின் பட்டியலைப் பாருங்கள்,
காதல்
அந்த அளவுக்கு இல்லையென்றாலும், இந்த நபர்களும் காதல் நபர்களின் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் காதல் பற்றி ஒரு ஆக்கப்பூர்வமான மனம் மற்றும் அழகான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வெளியில் செல்வது , திரைப்படங்கள் மற்றும் தங்களது துணையுடன் தனிமைச் சுற்றுலா போன்றவற்றின் திட்டமிடுதலைச் சிறப்பாகச் செய்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான ஒரே விஷயம் துணையின் ஒப்புதல். துணையின் செல்லத்தைப் பெறுவதால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். எனினும், அவர்கள் தங்கள் உணர்வுகளின் மீது அற்புதமான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார்கள்.
சென்சிடிவ் :
" B " எழுத்தில் ஆரம்பிக்கும் நபர்கள் எண் கணிதத்தின் படி அதிக உணர்திறன் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. மற்றவர்களின் உணர்ச்சிகளை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தாலும், அவர்களும் எளிதாக காயப்படுத்தப்படுவார்கள். அவர்களது உணர்வுத்தன்மையே அவர்களுக்கு நண்பர்களுடனும் குடும்பத்துடனும் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறது. அன்பளிப்புகளை வழங்குவதும் பெற்றுக்கொள்வதுமே அன்பானவர்களிடம் அன்பை வெளிப்படுத்தும் வழி என எண்ணுவார்கள். இவர்களின் உணர்திறனின் ஒரு பகுதியாக தொண்டு வழியில் சாய்ந்து அடிக்கடி நன்கொடைகள் வழங்க விரும்பலாம்.
MOST READ: பருத்த உடம்பையும் ஊசிபோல் மெலியச் செய்யும் கருணைக்கிழங்கு... எப்படி சாப்பிடணும்?
அமைதி விரும்பிகள்:
இந்த மக்கள் ஒத்துழைப்பு மற்றும் சமாதானக் காதலர்கள். ஒரு வாதத்தைத் தவிர்க்க இவர்கள் தனக்குத் தெரிந்த அனைத்தையும் முயற்சி செய்வார்கள். அதனால்தான் அவர்கள் அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்படுவார்கள் மற்றும் அவர்கள் கோபப்படுவதில்லை என்றும் மக்கள் நினைப்பார்கள். சமாதானம் என்ற ஆளுமையின் அடிப்படை பண்பைக் கொண்டே அவர்கள் எளிதாக மற்றும் கவனிப்புடன் மக்களைக் கையாள முடியும். இவர்கள் கோபமடைந்தாலும் கூட, அமைதியாக இருப்பதோடு, அந்த விஷயத்தில் இருந்து தங்கள் கவனத்தைத் திசை திருப்ப விரும்புவார்கள்.
சமூகம் :
எல்லோரும் அவர்களுடன் நெருக்கமாக இல்லாவிடிலும் இந்த மக்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். இவர்கள் பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்புவார்கள். மக்களைப் பற்றியும் அவர்களைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் பற்றியும் அறிந்துகொள்ளவும் விரும்புவார்கள். அவர்களின் சமூக வரவேற்பு இயல்பே அவர்களை எல்லோர்க்கும் பிடிக்க வைக்கும். இருப்பினும், அனைவருடனும் அவ்வளவு எளிதாக நெருங்கிப் பழக மாட்டார்கள் இவர்கள்.
MOST READ: ஆயுள் விஷயத்தில் விதி மாறுமா? எந்தெந்த பாவத்தால் ஆயுள் குறையும் என விதுர் நீதி சொல்கிறது?
வீரம் மற்றும் தீர்மானம்:
அவர்களின் வாழ்க்கையில் "பயம்" என்ற ஒன்றை ஒருபோதும் நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் போதுமான பொறுமை உடையவர்களாக இருந்தாலும், தன்னைச் சுற்றியுள்ளவரைக் காப்பாற்றுவதற்கு ஒரு தேவை இருக்கும்போது ஒரு கணம் கூட தாமதிக்காத அளவுக்கு அவர்கள் மிகவும் தைரியமாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சென்சிடிவ் இதயத்தைக் கொண்டிருப்பதால், மக்களின் துன்பங்களை அவர்களால் சகிக்க முடியாமல் ஒரு உண்மையான மீட்பராக வந்துவிடுகிறார்கள். தைரியம் அவர்களை தீர்மானிக்க வைக்கிறது, எனவே எளிதாக விட்டுக்கொடுத்தல் அவர்களின் இயல்பே கிடையாது.