மவுண்ட் எவரஸ்ட் பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய உன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

எவரஸ்ட்! உயரத்திற்கு அன்று முதல் இன்று வரை உவமையாக பயன்படுத்தப்படும் பெயர். ஆனால், இந்த பெயர் யாருடையது, எப்படி இந்த பெயர் பெற்றது என்று நம்மில் யாருக்காவது தெரியுமா?

எவரஸ்ட் மலை சிகரத்தின் மேல் ஏறி சாதனை செய்ய வேண்டும் என்ற ஆசை, ஆர்வம் பலருக்கு இருக்கிறது. ஆனால், அந்த சாதனை பயணத்தில் சோகமாக முடிந்து அங்கேயே இறந்து இன்று வெறும் வழித்தடத்திற்கு பயன்படும் பொருளாக உள்ளவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

நமது ஊரில் வெற்றியாளர்களின் பெயரை மட்டுமே நினைவில் வைத்துக் கொள்வார்கள். அதுவும் முதல் ஆளாக வெல்ல வேண்டும். இரண்டாவது, மூணாவது இடம் பெற்றாலும் வரலாற்றில் பெரிதாக இடம் பெற முடியாது. எண்ணிலடங்காதா அளவுக்கு எத்தனையோ பேர் எவரஸ்ட் மலை சிகரத்தின் மீது ஏறியுள்ளனர். அதில் வெகு சிலரை பற்றி மட்டுமே நாம் அறிவோம்.

எவரஸ்ட் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் பலவன இருக்கின்றன. எவரஸ்ட் சில மோசமான சாதனைகளும் செய்துள்ளன. அவற்றை பற்றியும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டுமல்லவா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
5,000!

5,000!

இதுவரை எவரஸ்ட் மலை சிகரத்தை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளனர். இதில் 13 வயது சிறுவன், கண் பார்வை அற்ற நபர் மற்றும் 73 வயது மூதாட்டி போன்றவர்கள் அடங்குவார்கள்.

பிணங்கள்!

பிணங்கள்!

எவரஸ்ட் மலை சிகரத்தை தொட முயற்சி செய்து தோல்வியுற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த முயற்சியின் போது வலுவிழந்து பின்வாங்கியவர்கள் பலர், விடா முயற்சியுடன் முன்னேறி உயிரை இழந்தவர்கள் பலர்.

200-க்கும் மேற்பட்ட பிணங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது எவரஸ்ட் மலை சிகரம். இப்போது இந்த பிணங்கள் எல்லாம் உச்சியை நோக்கி மேலே ஏறி செல்வோருக்கும் ஒரு வழித்தடமாக இருக்கின்றன.

வயதானவர்!

வயதானவர்!

கடந்த 2013ல் யுய்சிரோ மியூரா என்ற 80 வயது ஜப்பானியர் எவரஸ்ட் மலை சிகரத்தை ஏறிய வயதான நபர் என்ற சாதனையைப் படைத்தார். எவரஸ்ட் மலை சிகரத்தை தொட்டு, வெற்றிகரமாக கீழே இறங்குவது சாதாரண விஷயம் அல்ல. சிலர் கீழே இறங்கும் போதும் பாதி வழியில் உயிரிழந்துள்ளார்கள் என கூறப்படுகிறது.

அழுக்கு!

அழுக்கு!

எவரஸ்ட் உலகிலேயே உயர்ந்த சிகரம் மட்டுமல்ல, மிகவும் அழுக்கான சிகரமும் இது தான். ஆம்! எவரஸ்ட் மலையில் மலை ஏறும் நபர்கள், பிணங்களை மட்டுமல்ல, அதிகப்படியான குப்பை குவியல்களையும் காண முடியும்.

இதுநாள் வரை ஐம்பது டன்களுக்கும் அதிகமான குப்பை குவியல் எவரஸ்ட் மலை சிகரத்தில் குவிந்துக் கிடக்கிறது. ஆகையால், உலகின் மிகவும் குப்பையான மலை என்ற பெயரும் பெற்றிருக்கிறது எவரஸ்ட்.

மரணம்!

மரணம்!

வரலாற்று குறிப்புகள் மூலம் அறியப்படும் மற்றுமொரு தகவல் யாதெனில், எவரஸ்ட் மலை சிகரத்தில் ஏறும் நூறு பேரில் நால்வர் இறந்துவிடுகிறார்கள் என்பதாகும். எவரஸ்ட் மலையை ஏற உடல் பலம் மட்டும் பத்தாது மன பலமும் தேவை.

ஒருவர் எவரஸ்ட் மலை சிகரத்தை ஏறி தொட்டு திரும்ப வேண்டும் என்றால் மொத்தம் 65,000 அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணக்கிடப்படுகிறது.

உயர்கிறது!

உயர்கிறது!

ஒவ்வொரு வருடமும் எவரஸ்ட் மலை சிகரம் 0.1576 அங்குலம், அதாவது நான்கு மில்லிமீட்டர் உயர்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், கடந்த 2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் போது எவரஸ்ட் மலை ஒரு அங்குலம் உயரம் குறைந்தது என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

பெயர் காரணம்!

பெயர் காரணம்!

பெயர் காரணம்!

திருமணம்!

திருமணம்!

கடந்த 2005ம் ஆண்டு நேபாளத்தை சேர்ந்த ஒரு ஜோடி எவரெஸ்ட் மலை சிகரத்தின் உச்சியில் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களே எவரஸ்ட் மலையில் திருமணம் செய்துக் கொண்ட முதல் தம்பதிகள் என்ற பெருமை பெற்றனர்.

மேலும், சார் எட்மண்ட் ஹில்லரியின் மகன் பீட்டர் ஹில்லரி 1990ல் எவரஸ்ட் மலை சிகரத்தை தொட்டார். இதன் மூலமாக தந்தை - மகன் என எவரஸ்ட் மலை சிகரம் ஏறிய முதல் ஜோடி எனும் பெருமை பெற்றனர்.

இந்திய பெண்மணி!

இந்திய பெண்மணி!

ஓடும் இரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டு தனது கால்களை இழந்த இந்திய பெண்மணி ஒருவர் கடந்த 2013ம் ஆண்டு எவரஸ்ட் மலை சிகரத்தை ஏறி சாதனைப் படைத்தார். இதன் மூலமாக கால்கள் இழந்த நிலையில் எவர்சட் மலை சிகரத்தை ஏறிய முதல் பெண்மணி என்ற பெருமை அடைந்தார் இவர்.

உயரம் கம்மி தான்....

உயரம் கம்மி தான்....

எவரஸ்ட் மலை சிகரம் பூமியின் மேற்பரப்பில் இருந்து கணக்கிடும் விகிதத்தில் தான் உலகின் உயர்ந்த சிகரமாக திகழ்கிறது. அடிமட்ட கணக்கில் இருந்து உயரம் அளந்து பார்த்தால், ஹவாயில் இருக்கும் மவுனா கே (Mauna Kea) என்ற சிகரம் தான் உயர்ந்தது என அறியப்படுகிறது.

மலைகளின் அன்னை!

மலைகளின் அன்னை!

நேபாள மொழியில் எவரஸ்ட் மலை சிகரத்தை சோமோலுங்மா (Chomolungma) என்றே அழைக்கிறார்கள். இதற்கு மலைகளின் பெண் கடவுள் என்ற பொருள் கூறப்படுகிறது.

மேலும், மவுன்ட் எவரஸ்ட் உச்சியை காண நேரில் தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கூகுள் மேப்பின் ஸ்ட்ரீட் வியூவில் எவரஸ்ட் மலை சிகரத்தை 360 கோணத்தில் தெளிவாக காண இயலும். மேலும், அங்கே கேம்ப் அமைத்து தங்கியிருக்கும் மக்களின் படங்களும் பதிவாகியுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mount Everest Facts

Mount Everest Facts
Story first published: Monday, January 15, 2018, 16:30 [IST]
Subscribe Newsletter