TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
தனுசு ராசிக்காரர்கள் இந்த மே மாதம் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?
வெளிப்படையான மனநிலையுடன் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!.மற்ற ராசிக்காரர்களை காட்டிலும் பயணத்தை அதிகமாக விரும்பும் நபர்கள் இவர்கள். தத்துவார்த்தமான பார்வையுடனும் வெளிப்படையான மனதுடனும் காணப்டுபவர்கள். இந்த ராசிக்காரர்கள் உற்சாகமான நபராக இருப்பதோடு பிறருக்கு உற்சாகத்தையும் அளித்து செயலில் இறங்கி வெற்றி காண்பவர்கள்.
இவர்களின் நகைச்சுவை உணர்வால் நட்பு வட்டாரத்தை தன் வசம் இழுப்பவர்கள். ஆழ்ந்த ஆர்வத்துடன் செயல்பட்டு காரியங்களை முனைப்புடன் முடிக்கும் நபர்கள். நேர்மையானவர்களாகவும் அதே நேரத்தில் பொறுமைசாலியாகவும் இருந்து பிரச்சினைகளை சமாளிப்பவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதம் எந்த மாதிரியான அணுகூலன்களை கொடுக்கப் போகிறது என்பதை மாத ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்வோம்.
உடல் நலம்
இந்த மாதம் உங்கள் உடல் மற்றும் மன வலிமை இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதே நேரத்தில் சின்ன சின்ன உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். உடனே சரி செய்வது நல்லது. கண் தொற்று போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடலாம். சரியான சிகிச்சையை மேற்கொண்டால் இதைப் பற்றிய அநாவசியமான கவலை இருக்காது. கவனமாக கையாண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.
தொழில்
உங்களுக்கான தொழில் வாய்ப்புகள் கதவை திறந்து தட்டும் மாதமாகும். புதிய முயற்சிகள் மற்றும் புதிய திட்டங்கள் மூலம் லாபத்தை பெறலாம். அதே நேரத்தில் மறு புறம் உங்களுக்கு கிடைக்கும் நற்பெயர்கள், பாராட்டுகளால் சக பணியாளர்களிடையே விரிசல் ஏற்படலாம். சரியான ஓய்வு மேற்கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
பொருளாதாரம்
இந்த மாதம் பொருளாதார நிலை உங்களுக்கு ஏதுவாக அமையாது. வழக்குகளில் உங்களுக்கு எதிரான முடிவுகள் நேரிடலாம். சிறிய ஆதாயங்கள் வருவது கூட சிரமமாக இருக்கும். எனவே முன்னெச்சரிக்கையாக பணத்தை எதிர்காலத்திற்கு சேமித்து வைத்துக் கொள்வது நல்லது.
காதல்
இந்த மாதத்தில் காதலை தள்ளி வைத்து விட்டு உங்கள் தொழில் சார்ந்த திட்டங்களை மேற்கொள்வீர்கள். ஆனால் வெற்றிகரமான காதல் உறவிற்கு உங்கள் துணையை கவனிப்பதும் முக்கியம். எனவே உங்கள் வேலை நேரத்தை தள்ளி வைத்து விட்டு உங்கள் துணையுடன் காதல் உறவை கொண்டாடுங்கள்.
அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டமான எண்கள் :17, 40, 46,61,மற்றும் 76
அதிர்ஷ்டமான தேதிகள் :6,78,17,18,25, 26
அதிர்ஷ்டமான நிறங்கள் :காக்கி பச்சை, ஆரஞ்சு - சிவப்பு.