For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய இராணுவ வீரரின் அசத்தல் நடன திறமை - வைரலாகும் வீடியோ!

போராடுவது மட்டுமல்ல, போரடித்தால் ஆடவும் செய்வோம் - வைரலாக பரவும் இந்திய இராணுவ வீரரின் வீடியோ!

|

போர், படை, தாக்குதல், தன்னார்வ ஈடுபாடுகள், ஐநாவின் அமைதிக்கான ஆப்ரேஷன்களில் பங்கெடுத்துக் கொள்வது என பல வகைகளில் இந்திய இராணுவம் உலக அளவில் பெரும் சிறப்பு பெற்றிருக்கிறது. இன்று கொஞ்சமாவது நாம் நிம்மதியாக இந்தியாவில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு நிச்சயம் காரணம் இந்திய இராணுவ வீரர்கள் தான்.

Viral Video: Indian Army Man Showcased His Dancing Skill in Front of His Teammates.

இராணுவ வீரர்கள் என்றால் அதிகாலை எழுந்து ஜில் தண்ணியில் குளித்து கிலோமீட்டர் கணக்கில் ஓடி, உடற்பயிற்சி செய்து. சிறுண்டி கழித்த பிறகு போர் பயிற்சிகளில் ஈடுபட்டுவிட்டு. பிறகு மதிய உணவு, மீண்டும் பயிற்சிகள்.. என நாளை கடத்திவிடுவார்கள். இராணுவ வீரனாக இருப்பது மிகவும் கடினம் என்று நினைக்கிறீர்களா?

ஆம்! இராணுவ வீரனாக இருப்பது கடினம் தான். ஆனால், அங்கேயும் பிற திறமைகள் கொண்ட அசாத்திய திறமை சாலிகள் இருக்கிறார்கள்.

இதோ! அப்படி நடனத்தில் பெரும் திறமை கொண்ட ஒரு இந்திய இராணுவ வீரரின் வீடியோ நேற்றில் இருந்து வைரலாக உலகம் முழுவதும் பரவி வருகிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2.24 நிமிடங்கள்

2.24 நிமிடங்கள்

இந்திய இராணுவ படையில் சேவை செய்து வரும் இளம் இராணுவ வீரர் ஒருவர் அலூ சாட் (Aloo Chaat) என்ற பிரபலமான இசை பாடலுக்கு தன் குழுவினர் முன் ஸ்டைலிஷாக நடனமாடி அசத்தி இருந்தார். ஒரு தேர்ந்த நடனக் கலைஞருக்கு இணையாக அவர் பல நடன அசைவுகள் போட்டு அசத்தி இருந்தார். இவரது இந்த நடன காணொளிப்பதிவு 2.24 நிமிடங்கள் ஒளிப்பரப்பாகி இருந்தது. இதில் இவர் ஹிப்-ஹாப் மற்றும் லாக்கிங் போன்ற மாடர்ன் நடன முறையில் நடனமாடியிருந்தார்.

வீடியோ!

அலூ சாட் என்ற பாடல் கையாஷ் கேர், ஆர்டிபி மற்றும் நிந்தி கவுர் இணைந்து உருவாக்கிய பாடலிது. இந்த பாடலுக்கு இந்திய இராணுவ வீரர் ஒருவர் ஸ்டைலிஷாக நடனமாடி இருக்கிறார். ஃப்ளோரில் அவர் வளைந்து நெளிந்து நடனமாட சுற்றி இருந்த இராணுவ வீரர்கள், அதிகாரிகள் கைத்தட்டி அவரை உற்சாகப்படுத்தினார்கள்.

இந்திய இராணுவத்தை பற்றிய வேறு சில சுவாரஸ்யமான தகவல்கள்...

படை!

படை!

1) இந்திய இராணுவம் கடந்த 1776ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் கிழக்கிந்திய கம்பெனியால் கலக்கத்தாவில் துவக்கபப்ட்டது.

2) இந்திய முழுவதிலும், இந்திய ராணுவத்தில் 53 கண்டோன்மெண்டுகள், 9 இராணுவ தளங்கள் இருக்கின்றன.

3) கடல் மட்டத்தில் இருந்து சியாச்சின் ஐந்தாயிரம் மீட்டர் உயரத்தில் இருக்கிறது. உலகிலேயே இது தான் உயரமான போர் தளமாக கருதப்படுகிறது. அதை இந்தியா தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம்.

தன்னார்வம்!

தன்னார்வம்!

தன்னார்வமாக இராணுவத்தில் இணையும் ஆர்மி என்ற வகையில் உலகில் பெரிய இராணுவ படை இந்தியாவுடையது தான் என்று புகழ்ந்து கூறப்படுகிறது. இந்திய இராணுவத்தில் தான் எந்த ஒருவொரு கட்டாயமும், வலியுறுத்தலும் இன்றி தன்னார்வமாக நிறைய பேர் இணைந்து சேவை செய்கிறார்களாம். இதைவிட பெரிய புகழ் வேறென்ன இருக்கிறது இந்தியாவிற்கு.

ஐநா!

ஐநா!

1) காடுகளில் பதுங்கி சண்டையிடுவதில் இந்திய இராணுவ வீரர்கள் உலக அளவில் சிறப்பு பெற்று காணப்படுகிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பியா, ரஷ்யா போன்ற இராணுவ வீரர்கள் கூட Jungle Warfare Schoolக்கு வந்து பார்வையிட்டு சென்றிருக்கிறார்கள்.

2) உலகிலேயே மூன்று நாடுகளில் மட்டும் தான் குதிரைப்படை இன்றளவும் இருக்கிறது. அதில் இந்திய இராணுவமும் ஒன்று.

3) ஐநா சபையும் அமைதிக்கான ஆப்ரேஷன்களுக்கு பங்களிப்பு அளிப்பதில் இந்திய இராணுவ குழுக்கள் பெரும் பங்கு கொண்டிருக்கிறது.

கட்டுமானம்!

கட்டுமானம்!

இந்தியாவின் பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் ஏஜன்சிகளில் மிலிட்டரி என்ஜினியரிங் சர்வீசஸூம் ஒன்று என்பதை இந்திய மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும்.

திராஸ் மற்றும் சுரு (Dras & Suru) இடையே லடாக்கின் பள்ளத்தாக்கில் பெய்லி பாலம் (Baily Bridge) இருக்கிறது. இது உலகிலேயே உயரமான பாலமாக கருதப்படுகிறது. இதை கட்டியது இந்திய இராணுவம் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Viral Video: Indian Army Man Showcased His Dancing Skill in Front of His Teammates.

Viral Video: Indian Army Man Showcased His Dancing Skill in Front of His Teammates.
Desktop Bottom Promotion