For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட கேலியான இந்திய திருமண புகைப்படங்களின் தொகுப்பு!

  By Staff
  |

  கல்யாணம்ங்கிறதே ஒரு சுவாரஸ்யமான விஷயம் தான். புது உறவுகள், நமக்குன்னு நடக்கிற ஒரே ஃபங்க்ஷன்... நம்மள கொண்டாடுற சிலர், நாமதான் மொத்த ஹைலைட். ரெண்டு மூணு நாளைக்கு நாம தான் ஹீரோ. இப்படியான ஒரு நிகழ்வு எவ்வளவுக்கு எவ்வளோ சுவாரஸ்யமா இருக்கோ, அவ்வளவுக்கு அவ்வளோ பதட்டங்கள், கேலி கிண்டலும் நிறைஞ்சு இருக்கும்.

  முக்கியமா கேலிங்கிறது நாலஞ்சு டேபிள் ஸ்பூன் எக்ஸ்ட்ராவே இருக்கும். வரவன் போறவன் எல்லாம் மாப்புள முகத்துல வெட்கத்து பாருன்னு சொல்லிட்டு போவான். ஆனா, நம்ம மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கும். போட்டோக்கு நாம சிரிச்ச முகமா போஸ் கொடுத்த மாதிரி தான் இருக்கும். ஆனா, கல்யாண ஆல்பத்துல பார்த்தா... வேற மாதிரி இருக்கும்.

  இப்படி கல்யாணத்துல நடக்குற கேலி, கூத்துக்கு பஞ்சமே இருக்காது. அதுலயும் சில சமயம் இந்த மாதிரி சில ரேர் மொமண்டு நடக்கவும் வாய்ப்புகள் இருக்கும். இது சிரிக்க மட்டுமே...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  என்ன ஆட்டம்?

  என்ன ஆட்டம்?

  ஆட்டமா... தேரோட்டமா... ன்னு ஆடிக்கிட்ட இருந்த பொண்ணு தொபக்கட்டீர்ன்னு விழுந்திடுச்சு. இதுக்கு தான் வேகம் மட்டும் போதாது விவேகமும் வேணும்ன்னு சொல்றது. நல்லா ஆடி என்ன பயன், ஸ்டேஜ் எம்புட்டு நீளம் இருக்குன்னு தெரிஞ்சுக்காமா ஆடுனா இப்படி தான்.

  அலங்காரம்...

  அலங்காரம்...

  அலங்காரம் பண்றேன்னு அலங்கோலம் பண்ணி வெச்சுட்டீங்களே அப்பறசண்டிகளா... நிச்சயமா யாரோ மாப்பிளையோட க்ளோஸ் ஃபிரென்ட் தான் இந்த அலங்காரம் செஞ்சிருக்கணும். பாவம்யா அந்த மனுஷன்.. ஆம்பளைங்க சிரிச்ச முகமாக கடைசியா இருக்கிறதே அந்த கல்யாண போட்டோல தான் அதுல போயி இப்படி கும்மியடிச்சு விளையாடிருக்காங்க.

  வெரி நைஸ்...

  வெரி நைஸ்...

  கல்யாணம்னு வந்துட்டா சில அடிகள் விழத்தான் செய்யும்ன்னு சொல்லுவாங்க... ஆனா இப்படி கல்யாண மேடையிலேயே விழும்னு யாரும் எதிர்பார்க்கல. படக்கூடாத இடத்துல அடி படாம இருந்திருந்தா சரி.

  தப்பு தம்பி...

  தப்பு தம்பி...

  இதெல்லாம் முதராத்திரில தான்.... நீ என்னப்பா ஸ்ட்ரைட்டா ரிசப்ஷன்லையே இப்படி பண்ற... தப்பு தம்பி... இது ரொம்ப ரொம்ப தப்பு...

  கன்ஃபியூஸ்..

  கன்ஃபியூஸ்..

  பாவம் வாழ்த்த வந்த அவரே கன்ஃபியூஸ் ஆயுட்டாரு போல.. பொண்ணுக்கு இப்பவே புருஷன் பல்பு வாங்குனா இப்படி சிரிப்பு வருது... வாழ்க்கையில நாம சிரிச்சு வாழலாம்... ஆனா நம்மள பார்த்து நாலு பேரு சிரிக்கிற மாதிரி வாழ்ந்திட கூடாது. ஆரம்பமே நம்ம ஆளுக்கு அமர்களமா ஸ்டார்ட் ஆயிருக்கு.

  சுந்தரா டிராவல்ஸ்..

  சுந்தரா டிராவல்ஸ்..

  சுந்தரா டிராவல்ஸ் படத்துல கல்யாண ஃபங்க்ஷனுக்கு போகும் போது அலங்காரத்துக்காக கொஞ்சம் இலை வெச்சு அலங்காரம் பண்ற மாதிரி அண்ணன் சைக்கிள்ல ஏதோ பண்ணியிருக்காரு. ஒருவேளை இயற்கை விரும்பியா இருப்பாரு போல. சரி இப்ப யாருங்க இயற்கை விரும்புறா... குழந்தையே ஐவிஎப் முறையில செயற்கையா தான் பிறக்குது.

  ஆண்டி, பாட்டி...

  ஆண்டி, பாட்டி...

  நம்ம ஊர்லயும் கூட கல்யாண வீட்டுல ஆடலும், பாடலும் இருக்கும். ஆனா இந்த ஆண்டி, பாட்டி ஆடுற மாதிரி ஆட்டம் எல்லாம் இருக்காதுப்பு. குதுகலமா இருக்க ஆடுங்கனா... இவங்க ஏதோ முத ராத்திரிக்கு கிளாஸ் எடுக்குற மாதிரி ஆடிக்கிட்டு இருக்காங்க... ச்சீ... ச்சீ...! :)

  வாய்ப்புகள் இருக்கு...

  வாய்ப்புகள் இருக்கு...

  இப்ப எல்லாம் இப்படி பொண்ணு மாப்பிளைய பிரிச்சு வெச்சு போட்டோ எடுக்கிறது ஃபேஷன் ஆயிடுச்சாம். இவங்களும் இந்த பழைய ஜோக்க.. இன்னும் டிரென்ட்டுன்னு நெஞ்சு போய்வர கல்யாணத்துல எல்லாம் பண்றாங்க... இந்த டிரென்ட் மக்கி மண்ணாகி பல நூற்றாண்டுகள் ஆச்சுங்கிறத இவங்க எப்ப தான் தெரிஞ்சுக்குவான்களோ.

  பாவம் பேட்டி!

  பாவம் பேட்டி!

  தனது மகள் திருமணமாகி போகும்போது எல்லா அம்மாக்களுக்கும் மடைதிறந்த நீராய் கண்ணீர் பொங்கி வழியும், அப்போ, இப்படி எல்லாம் ஓடிப் போய் கட்டிப் பிடிச்சுக்குவாங்க. ஆனா, இப்படி கீழ விழுகுற அளவுக்கு எல்லாம் கட்டிப் பிடிக்கிறது ரொம்பவும் தப்பு மாதாஜி!

  என்ஜினீயர்!

  என்ஜினீயர்!

  படிச்ச படிப்ப மறக்க கூடாதுன்னு சொல்வாங்க. இதோ நம்ம பயலுக... கல்யாண ஊர்வலத்த கூட தான் படிச்ச என்ஜீனியரிங் மறக்காம இருக்க மாதிரி நல்லா செஞ்சிருக்காங்க. சிவில் என்ஜீனியர் போல...

  சக்தி கொடு!

  சக்தி கொடு!

  அம்மா அகிலாண்டேஸ்வரி தாய கும்பிட சொன்னா... நம்ம பய அவன் பொண்டாட்டி கிட்ட இருந்து காப்பாத்த, சக்தி கொடுன்னு ஒயின் ஷாப்ப பார்த்து கும்பிடுறாப்புல.

  சரி சரி கடைசியில எல்லா தாலி கட்டுன குடி மகன்களுக்கும் அடைக்கலம் தர ஒரே இடம் அதுதான். அதுக்குன்னு தாலி கட்டுறதுக்கு முன்னவே கையெடுத்து கும்பிடுறது எல்லாம் கொஞ்சம் ஓவர்.

  ஷேம், ஷேம்!

  ஷேம், ஷேம்!

  இந்த படத்த எடுத்த போட்டோகிராபர் எங்கன்னு அந்த மனுஷன் கடந்த பத்து வருஷமா தேடிட்டு இருக்காராம். சரி எடுத்தது தான் எடுத்த, அத ஏண்டா ஆல்பத்துல சொருகுனன்னு கொலை வெறியோட தேடுறாராம். தப்பில்லையா பின்ன... பார்க்கும் போதெல்லாம் கைக்கொட்டி சிரிப்பாங்களே... முகத்த எங்க போய் வெச்சிக்க முடியும்.

  இவரு தான் அவரோ...

  இவரு தான் அவரோ...

  ஒரு வேளை நாம முந்த போட்டோல பார்த்த அந்த ஆளு தேடுற போட்டோ கிராபர் இந்த மனுஷனா இருப்பரோ... பல கல்யாணத்துல நீங்க இத கண்கூட பார்க்கலாம். வைல்டு லைப் போட்டோ எடுக்குறவங்க கூட இம்புட்டு ரியாக்ஷன் மற்றும் ஹார்ட் வர்க் பண்ண மாட்டாங்க. ஆனா, நம்ம கல்யாண போட்டோ கிராபர்கள் வேற லெவல்ல பர்பார்மன்ஸ் காமிப்பாங்க.

  பழிக்குப்பழி!

  பழிக்குப்பழி!

  நீங்க மட்டும் தான் இந்த ட்ரென்ட்டிங் டெம்ப்ளேட் யூஸ் பண்ணுவீங்களா? நாங்களும் பண்ணுவோம்னு ஒரு கூட்டம் களமிறங்கி இருக்காங்க. அவங்களுக்கு நம்ம வாழ்த்துக்கள் கூறி நன்று தெரிவிச்சு இத்தோட இந்த தொகுப்ப முடிச்சுக்குவோம்.. இதே மாதிரி வேற ஏதாவது மொக்கை தொகுப்பு கிடைக்குதான்னு போய் தேடிட்டு வரோம்... நாளை சந்திப்போம்.!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Hilarious Indian Wedding Photos Which Clicked on Right Time!

  Hilarious Indian Wedding Photos Which Clicked on Right Time!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more