For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏம்மா! இந்த சின்ன விஷயத்துக்கா இவ்வளோ அக்கப்போர் - Funny Photos

ஏம்மா! இந்த சின்ன விஷயத்துக்கா இவ்வளோ அக்கப்போர் - Funny Photos

By John
|

முன்ன எல்லாம் பயன்படுத்துன பழைய பொருள காயலாங்கடையில போட்டு ஏதாவது பிளாஸ்டிக், எவர்சில்வர், அலுமினிய பொருள் வாங்கி வெச்சுக்குவாங்க. கொஞ்சம் நல்லா இருந்தா அவங்களே பட்டி, டிங்கரிங் பார்த்து திரும்ப புதுசு பண்ணி வித்திடுவாங்க.

ஆனா, பெரும்பாலும் ஒண்ணத்துக்கும் ஆகாத பொருள தான் நம்மாளுங்க தூக்கிப் காயலாங்கடை காரங்களுக்கு போடுவாங்க. நிச்சயமா எப்படியான பொருளா இருந்தாலும், காயலாங்கடை காரங்க அதவெச்சு லாபம் பார்த்துடுவாங்க.

Funny Photos: People Trying To Take Photos of Mirror They Are Selling!

இப்ப எல்லாம் யாரு காயலாங்கடை பக்கம் போறாங்க. டக்குனு ஒரு போட்டோ பிடிச்சு ஓ.எல்.எக்ஸ் மாதிரியான பழைய பொருள் விக்கிற ஆன்லைன் மார்கெட்ல வித்திடுறாங்க. ஐநூறோ, ஆயிரமோ வந்த வரைக்கும் லாபம்னு எல்லாரும் இப்படி ஒரு ரூட்டுல போயிட்டு இருக்காங்க.

நம்ம ஊருல இது கடந்த நாலஞ்சு வருஷமா பிரபலமா இருக்கு. ஆனா, வெளிநாட்டுல பல வருஷமா இத அவங்க டீல் பண்ணிட்டு வராங்க. ட்ரெஸ் எல்லாம் கூட ஓல்ட் மார்கெட்ல விக்கிறது அவங்க பழக்கம். அந்த மாதிரி தாங்க, இங்க சிலர் வீட்டுல இருக்க கண்ணாடிய விக்கிறதுக்கு முன்வந்திருக்காங்க.

கண்ணாடிய ஆன்லைன்ல விக்கிறத விட, இவங்க அந்த கண்ணாடிய போட்டோ எடுக்க தான் படாதாபாடு பட்டிருக்காங்க. ஒரு புறாவுக்கு எல்லாம் போரா, ஒரே அக்கப்போராக அல்லவா இருக்கிறதுன்னு சொல்றது மாதிரி, ஒரே கூத்தா இருக்கு இவங்க போட்டோ எடுக்க எடுத்த அட்டம்ப்ட் எல்லாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: பண்டையக் காலங்களில் நீரினை தான் கண்ணாடியாக மக்கள் பயன்படுத்தினார்களாம்.

#2

#2

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: பண்டையக் காலங்களில் குளம் அல்லது ஒரு பாத்திரத்தில் நீரினை ஊற்றி அதை கண்ணாடியாக பயன்படுத்தி தங்கள் முகத்தை பார்த்து வந்துள்ளனர்.

#3

#3

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: கி.மு 6000த்தில் இருந்து தான் மக்கள் கண்ணாடி என்ற ஒன்றை பயன்படுத்த துவங்கி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

#4

#4

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: கண்ணாடி ஒளி அல்லது பம்பம் மட்டுமின்றி, ஒலியையும் ரிப்லக்ட் செய்யுமாம். இதை Acoustic Mirror என்று கூறுகிறார்கள்.

#5

#5

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: ரேடாரை கண்டுபிடிக்கும் முன், இரண்டாம் உலக போர் காலக்கட்டத்தில், எதிரிகளின் விமானங்கள் வருவதை கண்ணாடிகளை வைத்து எதிரி விமான சத்தத்தை கண்டறிந்தார்களாம்.

#6

#6

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: இன்றளவிலும் பல மதங்களில் கண்ணாடியை மூட நம்பிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

#7

#7

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: பல ஆண்டுகளாக கண்ணாடி உடைந்தால், அது கெட்ட சகுனமாக மக்கள் நம்பி வருகிறார்கள்.

#8

#8

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: இந்தியாவில் என்று மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் பண்டையக் காலங்களில் இருந்து இந்த மூட நம்பிக்கை இருந்து வருகிறது. ரோமானியர்கள் காலத்தில் இருந்து இந்த மூட நம்பிக்கை மக்கள் மத்தியில் பழக்கத்தில் இருக்கிறது.

#9

#9

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: கண்ணாடி மூலம் ஆவியை பிடிக்க முடியும், அடக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.

#10

#10

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: நீங்கள் இதை பல படங்களிலும் பார்த்திருக்க இயலும், ஆவி அல்லது பேய்களை பேயோட்டும் நபர்கள் கண்ணாடிக்குள் அடைப்பார்கள். இந்த நம்பிக்கை இன்றளவிலும் மக்கள் மத்தியில் காண இயல்கிறது.

#11

#11

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: என்ன தான் ஆவி, பேய் என மூட நம்பிக்கை சார்ந்த பொருளாக கண்ணாடி இருந்தாலும். இன்றும் மக்கள் அதை வீடுகளில் பயன்படுத்தி தான் வருகிறார்கள்.

#12

#12

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: பெரும்பாலான வீடுகளில் கண்ணாடி என்பது முகம் பார்க்க மட்டுமின்றி, ஒரு அலங்கார பொருளாகவும் இருக்கிறது.

#13

#13

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: இந்தியாவின் சில இடங்களில் வாழ்ந்து வரும் மக்கள், வீட்டு வாசலில் கண்ணாடி மாட்டி வைப்பதை பழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

#14

#14

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: வீட்டு வாசலில் கண்ணாடியை மாட்டி வைத்தால், வீட்டுக்கு வருவோரின் கன் திருஷ்டி படாது. அவர்கள் தங்கள் முகத்தை பார்த்து உள்ளே நுழையும் போது, பொறாமைப் படமாட்டார்கள் என்று நம்புகிறார்கள்.

#15

#15

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: True Mirror என்று ஒன்றை இப்போது சந்தையில் விற்று வருகிறார்கள். எப்போதும் கண்ணாடி உங்களின் ரிவர்ஸ் பிம்பத்தை தான் வெளிப்படுத்தும் இது தான் இயல்பு.

#16

#16

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: ஆனால், இந்த True Mirror உங்கள் அசல் பிம்பத்தை வெளிப்படுத்தும். இதை நீங்களே கூட உருவாக்கலாம். இரண்டு கண்ணாடிகளை எடுத்து, 90 டிகிரி கோணத்தில் சேர்த்து செட் செய்தால் True Mirror என்கிறார்கள்.

#17

#17

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: சராசரியாக கண்ணாடியை வெறும் கண்ணாடியாக தன் நிஜத்தை உணர குழந்தைகளுக்கு 24 மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளுமாம். அதுவரை, குழந்தைகள் கண்ணாடியில் தெரிவது வேறொரு நபர் என்ற நம்புகிறார்கள்.

#18

#18

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: கென்யா மற்றும் ஃபிஜியில் ஆய்வார்கள் குழந்தைகளை வைத்து நடத்திய ஆய்வில் இதை கண்டறிந்தனர்.

#19

#19

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: சிலர் இருட்டு அறையில் கண்ணாடியை பார்த்துக் கொண்டே இருந்தால் மாயத் தோற்றம் உருவாகும் என்று நம்புகிறார்கள்.

#20

#20

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: இருட்டு அறையில், கண்ணாடியில் இருந்து மூன்று மீட்டர் தூரத்தில் நின்று, பத்து நிமிடங்கள் தொடர்ந்து உற்று பார்த்தால், அதே அறையில், உங்கள் மாயத் தோற்றத்தை காண இயலும் என்று கூறப்படுகிறது.

#21

#21

Image Source - Twisted Sifter ; Courtesy - Google

Mirror Fact: வாழ்நாளில் ஆண்களை கட்டிலும், பெண்கள் தான் அதிகம் கண்ணாடியை பயன்படுத்துகிறார்கள். கண்ணாடியுடன் பெண்களுக்கான நெருக்கம் அதிகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Funny Photos: People Trying To Take Photos of Mirror They Are Selling!

Here we have shown some funny things happened, when people trying to take photos of mirror they are selling
Desktop Bottom Promotion