For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன கொடுமை சார் இது....!?!??! - Funny Photos

By John
|

நாம ஒன்னு நினைக்கிறோம், கடவுள் ஒன்னு நினைக்கிறார்னு நாம அடிக்கடி சொல்லுவோம். நாம நினைக்கிறது இல்ல, பிளான் பண்றது எல்லாம் அப்படியே நடந்துட்டா வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்காதுன்னும் சிலர் தத்துவமா பேசுவாங்க.

Funny Photos: Inconvenience Situations People Faced

சில சமயம் நாம நினைக்காத விஷயங்கள் சிலது நடக்கும்... அதுல இருந்து எப்படிடா தப்பிக்கிறதுன்னு விழிப்பிதுங்கி போய் நிப்போம். இங்க நாம பார்க்க போற படங்களும் அப்படியானது தான்.

எதிர்பாராத நேரத்துல நடந்த சில எதிர்பாராத விஷயங்கள். ஆனா, ஒவ்வொரு படத்துலயும் தாக்கும் கொஞ்சம் கூட, குறைய இருக்கும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

வளர்த்துவிட்ட ஏணிய எட்டி உதைக்க கூடாதுன்னு சொல்வாங்க. ஆனா, இப்படி ஆளில்லாத இடத்துல வேலை பண்ணிட்டு இருக்கும் போது ஏறி வந்த ஏணி அதுவா கழண்டு விழுந்துட்டா என்ன பண்ண முடியும் சொல்லுங்க...

#2

#2

கூரைய பொழந்துட்டு கீழ தொங்கிட்டு இருக்கோம்ங்கிற பயமில்ல, அம்மா வந்து பார்த்தா... இந்த மாசம் பெரிய செலவு வெச்சிட்டியேன்னு திட்டுவாங்கங்கிற பொறுப்பு இல்ல.... அசால்டா தின்பண்டத்த தின்னுக்கிட்டு இருக்க...

#3

#3

இதுக்கு தான நாலு எழுத்து படிச்சிக்க டா, அப்ப தான் பொழைக்க முடியும்னு சொல்லுவாங்க. அட்லீஸ்ட் பொழைக்க முடியாட்டியும் இப்படி அலர்ஜி மருந்த டூத் பேஸ்ட்னு நெனச்சு பல்லு துலக்காமயாவது தப்பிச்சிருக்கலாம்...

#4

#4

அதாச்சும் ரெண்டு, மூணு நாள் சாப்பிடும் போதுதான் உறுத்தலா இருந்திருக்கும். இங்க இந்த பொண்ணு பண்ணியிருக்க வேலைய பாருங்க. தங்கச்சியோட ஹேர் ரிமூவர் க்ரீம் எடுத்து ஷாம்பூனு நெனச்சு நல்ல தேச்சு குளிச்சிருக்கு. அழுக்கு போச்சோ இல்லையோ, தலையில இருந்த முடி எல்லாம் கொட்டிப் போச்சு....

#5

#5

தம்பி யோசிச்சது என்னவோ சரி தான்! ஆனா, எந்த ஒரு விஷயமும் என்ன பலன் கொடுக்கும்னு திங் பண்ற மாதிரியே, அதோட பக்கவிளைவுகள் எப்படி இருக்கும்னும் திங் பண்ணனும். அதாவது வகை புயல் பாஷையில சொல்லனும்னா எதா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும். இல்லாட்டி இப்படி தான்.

#6

#6

சாலை விதிகள கண்டிப்பா மதிக்கணும். அது உங்க உயிர் காக்கும்னு சொல்லுவாங்க. சில சமயம் உங்க வாகனங்களையும் காக்கும். இல்லாங்காட்டி இப்படி தான் சிக்கிட்டு தவிக்க வேண்டிய நிலைமை உண்டாகும்...

#7

#7

எப்படியும் எல்லாருடைய வட்டத்துலையும் ஒரு அன்லக்கி ஃபெல்லோ இருப்பார். லக்குன்னு ஒன்னு இல்லவே இல்லன்னு சொன்னாலும், அவனுக்கு மட்டும் மார்க் பண்ணி வெச்ச மாதிரி எல்லாமே அபசகுனமா இல்லாட்டி, கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையேங்கிற மாதிரியே நடக்கும். இதோ! அப்படி ஒரு அன்லக்கி ஃபெல்லோ தான் இவரு!

#8

#8

டூட், புல்லு புதர்னு நெனச்சு, முள்ளு புதர்குள்ள பாஞ்சுட்டார் போல. கண்ட இடத்துல எல்லாம் எசகபிசக முள்ளு குத்தி இருக்கும் போல... தட் பாயோட மைண்ட் வாய்ஸ்: என்னாங்கடா மூணு பெரும் சுத்தி நின்னு வேடிக்கை மட்டும் தான் பாக்குறீங்க, ஒருத்தன் கூட புடுங்க மாட்டேங்கறீங்க...

#9

#9

ரொம்ப பாவமா தானுங்க இருக்கு. கல்யாண ட்ரெஸ்ல ஒருபொண்ணு ஓடியாந்து, இப்படி மெட்ரோ ட்ரெயின்ல சோகமா அழுதுட்டு இருந்தா மனசு கொஞ்சம் ஃபீலிங்கா ஆவுது. அந்த பொண்ணுக்கு என்ன சோகமோ, என்ன வருத்தமோ... கண்டிப்பா அந்த நாள், அந்த பொண்ணோட வாழ்க்கையில ஒரு மறக்க முடியாத நாளா தான் இருக்கும்.

#10

#10

இது தான் ரியல் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாத மொமன்ட். பொறுமை அவசியம்னு பெரியவங்க சும்மாவா சொல்லி வைச்சாங்க. அதான் பிளேட் வரைக்கும் பிட்சா வந்திடுச்சுல அப்பறம் எடுத்து அவசரம்... இப்ப சோனமுத்தா மொத்தமா போச்சா...

#11

#11

எல்லாரும் காதல் தோல்வி தான் உலகத்துலயே பெரிய வலின்னு நெனச்சுட்டு இருக்காங்க. ஆனா, அதவிட பெரிய வலி நிறையா இருக்கு, ஃபுட்பால் ஆடும் போது, படாத இடத்துல அடிப்படுறது, பீரோ, சோபா, டேபிள் முனையில கால் சுண்டு விரல் இடுச்சுக்கிறது, இதோ! அப்பறம் ஜாலியா விளையாடிட்டு இருக்கும் போது மூஞ்சில இப்படி ஒரு அடி விழுகிறது. மூக்கு பஞ்சர் ஆயிருக்கும்னு நினைக்கிறேன் அந்த பொண்ணுக்கு.

#12

#12

ரெமோ படத்துல செஞ்சுட்டாலே, செஞ்சுட்டாலே பாட்டுல வர மாதிரி நிஜமாவே குபிட் வந்து அம்பு விட்டுடுச்சு போல. சிட்டுவேஷன் கூட கரக்டா அதே மாதிரி அமைஞ்சிருக்கு பாருங்களேன். அங்க டாக்டர் இங்க நர்ஸ், அம்புட்டு தான் வித்தியாசம். எல்லாம் ஒகே தான்., ஆனா, பையன பக்கத்தல வெச்சுட்டு ரொமான்ஸ் பண்றது தான் தவறான விஷயம்!

#13

#13

ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்ல எல்லாம் எக்ஸ்பெக்டேஷன், ரியாலிட்டினு நிறையா மீம்ஸ் பார்த்திருப்பீங்க. அதோ, அதுக்கான இன்னொரு டெம்ப்ளேட் இதுதான். DIYனு நிறையா விஷயங்கள் நாம இணையத்தளங்கள பார்த்திருப்போம். ஆனா, அத ட்ரை பண்ணிப் பார்த்தா, நமக்கான ரிசல்ட் இப்படியா தான் இருக்கும். ஆனாலும், முயற்சி உடையார்,இகழ்ச்சி அடையார்ங்கிறத நீங்க மறந்திட கூடாது.

#14

#14

கழுதை மேய்க்கிற பயலுக்கு இம்புட்டு அறிவான்னு, இவனுங்களுக்கு எல்லாம் பொறாமை. இத தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதிவெச்சுட்டு, அங்கயே பக்கத்துல நீ உட்கார்ந்துக்கங்கிற மாதிரி, பயபக்கி கலாய்ச்சு எழுதி வெச்ச மாதிரியே ஏதோ நடந்திருக்கு போல... ரெம்ப சோகமா இருக்கான்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Funny Photos: Inconvenience Situations People Faced

Here we have shown some Funny Photos, which contains the Inconvenience Situations People Faced.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more