For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  யப்பா சாமி! எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க... # Funny Cheating Photos

  By Staff
  |

  ஏமாத்துற பழக்கம் இருக்குற ஒருத்தர ஈஸியா நாம சீட்டர், ஏமாத்துக்காரன், மோசம் பண்றவன்ன்னு சொல்லி திட்டிடுவோம்... ஆனா, யார் கிட்டயும் மாட்டாம, யாருக்கும் தெரியாம ஏமாத்துறது எவ்வளவு பெரிய கஷ்டம்ன்னு அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்.

  இங்க நாம பார்க்க போறது, மத்தவங்க, பொருள், மதிப்பு, பதவி, உழைப்ப திருடி மோசம் பண்ணி ஏமாத்துனவங்கள பத்தி இல்ல. இவங்க எல்லாம் ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்ல டகால்ட்டி கொடுத்து எஸ்கேப் ஆகுற ஆளுங்க. இவங்களையும் நாம சீட்டர், ஏமாத்துக்காரன், மோசம்ன்னு திட்ட தானே சொல்வோம்.

  ஆபீஸ்ல மேனஜர் கிட்ட இருந்த வேலை பண்ணாம தப்பிக்கிறவங்க, லேப் அட்மின் பார்வையில இருந்து ஜகா வாங்குறவங்க... அம்மா, அப்பாக்கே தெரியாம வீட்டுல இருந்து மிட் நைட்ல எஸ்கேப் ஆகுரவங்க, போலீஸ்ஸ கூட ஈஸியா வேஷம் போட்டு ஏமாத்துறவங்கன்னு சில வகையில சிலர் நம்மள சுத்தி இருப்பாங்க'ல... அவங்க எப்படி எல்லாம் ஏமாத்துறாங்கன்னு தான் இந்த புகைப்படத் தொகுப்புல நாம பார்க்க போறோம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  கடின உழைப்பாளி!

  கடின உழைப்பாளி!

  அடடே! கொஞ்சம் கூட அசையாம சிலை மாதிரி உட்கார்ந்து பொண்ணு வேலை பார்த்துட்டு இருக்கு. முப்பது நிமிஷம் மட்டுமில்ல, நீங்க முப்பது நாலு கழிஞ்சு வந்து பார்த்தாலும் இந்த பொண்ணு இப்படி தான் அசையாம வேலை பார்த்துட்டு இருக்கும். ஏன்னா கொஞ்சம் பக்கத்துல பொய் பார்த்தா தான் தெரியும்... அது பொண்ணு இல்ல கம்பியூட்டர் ஸ்க்ரீன்ல ஓட்டி இருக்க ஸ்டிக்கர்ன்னு. கண்டிப்பா இதொரு சீனா பிராடக்டா தான் இருக்கணும்.

  அடேங்கப்பா!

  அடேங்கப்பா!

  ஒரு அக்கா, தங்கச்சி... ரெண்டு பேரு... நைட்டு தூங்குற மாதிரி பெட்ரூம்ல ஒரு செட்டப் ஏற்பாடு பண்ணிட்டு எஸ்கேப் ஆயிருக்காங்க. அதாவது, அவங்க ரெண்டு பேரோட முடிய கொஞ்சம் கட் பண்ணி, பெட்ல போர்வைக்கு வெளிய தெரியிற மாதிரி செட் பண்ணிட்டு, ஜோடி புறாக்கள் ஜூட் விட்டுடுச்சு. இதை போட்டோ எடுத்து வேற ஷேர் பண்ணியிருக்காங்க.

  ஓடவும் முடியாது...

  ஓடவும் முடியாது...

  என்கிட்டே இருந்து யாராலையும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர்ன்னு லேப் அட்மின் யாராச்சும் சீன போட்டா அவங்கள இப்படி ஏமாறத முயற்சி பண்ணுங்க. பயப்புள்ளைங்க எப்படி எல்லாம் யோசிக்குதுங்க. சிசிடிவி கேமரா குவாலிட்டியில கண்டிப்பா இது நிஜாமான வியூ போல தான் தெரியும்.

  இதெல்லாம் தகுமா?

  இதெல்லாம் தகுமா?

  சினிமா, ட்ராபிக், ஷாப்பிங், பஸ், ஆட்டோன்னு எங்க இருந்தாலும் புள்ளத்தாச்சி பொண்ணுன்னா நாம கொஞ்சம் வழிவிட்டு, அவங்கள முன்னாடி போக விடுவோம், அவங்களுக்கு கொஞ்சம் உதவி பண்ணுவோம். ஆனா, இப்படி எல்லாம் டகால்ட்டி வேலை பண்ணா பிறகு யாரு தான் ஹெல்ப் பண்ண வருவாங்க சொல்லுங்க. தியேட்டர்குள்ள தர்பூசணி எடுத்துட்டு போறதுக்கு எல்லாமா புள்ளத்தாச்சி வேஷம் போடுறது?

  இனிமேல் கேட்ப...

  இனிமேல் கேட்ப...

  ஃபிரெண்ட ஃபேக் அக்கவுண்ட் மூலமா ஏமாத்திட்டு இருக்காப்புல போல தம்பி. நாம எல்லாம் அந்த காலத்துல, ஜிப் போடல பாருடா ஏப்ரல் ஃபூல்ன்னு சொல்லி ஏமாத்திட்டு இருந்தோம். இந்த காலத்துல ஸ்மார்ட் போன வெச்சு, சோஷியல் மீடியா வழியா ஃபேக் அக்கவுண்ட் க்ரியேட் பண்ணி. ஒரு பொண்ணு மாதிரி பேசி, பழகி ஏமாத்துறாங்க. அதுவும் இந்த பையன எல்லாம் பாருங்களேன்... பத்து வயசு இருக்குமா இவனுக்கு எல்லாம்... இந்த வயசல என்ன வேலை பண்ணுது பாருங்க...

  பல்பே!

  பல்பே!

  இப்படி பல்பு வாங்குற நிறையா மன்மத குஞ்சுகள் ஃபேஸ்புக்ல இருக்குங்க. அது பையனா பொண்ணான்னு கூட தெரியாம மொக்கை போட்டு பேச ஆரம்பிச்சுடுவாங்க.. அடேய் நான் பையன் டா... இது என் ஃபேக் அக்கவுண்ட்ன்னு சொன்னால்லும் நம்ப மாட்டாங்க. அவங்கள எல்லாம் இப்படி ஏமாத்தி சாவடிக்கலாம்.

  கடவுளே!

  கடவுளே!

  மனுஷங்க தப்பு பண்ணா, கடவுள் கிட்ட போய் முறையிடலாம்.. அந்த கடவுளே தப்பு பண்ணா யார்க்கிட்ட போய் முறையிடுறது. ஏன் ஃபாதர்... மத்தவங்க பிரேயர் பண்ணும் போது பேசுனா, கவனமில்லாம இருந்தா நீங்க அதட்டி பிரேயர் பண்ண வைக்கலாம். நீங்களே இப்படி மத்தவங்கள கவனிக்காம மொபைல் நோண்டிக்கிட்டு இருக்கிறது எல்லாம் சரிதானா?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Fun Images Show How Cheaters Wins in Real Life!

  For the right result, you need a good plan and its clear execution in order to get out of the situation in the way that will be most convenient for you. Take a master class from these amazing people.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more