For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் ஏன் சபரிமலைக்கு போகக்கூடாது? அனிதா குப்புசாமி சொல்லும் காரணங்கள்...

By Mahi Bala
|

சமீபத்தில் கேரளா, சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குப் பெண்கள் போகக்கூடாது என்று இருந்த தடையை நீக்கி, பெண்களும் போகலாம் என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உருவாகி வருகின்றன.

நாட்டில் பலராலும் இந்த வரவேற்கப்பட்டாலும் சிலர் தொடர்ந்து இதுகுறித்த சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில், நம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒருவரான, நாட்டுப்புறப் பாடகர் அனிதா குப்புசாமி தன்னுடைய யூடியூப் சேனலில் சபரிமலைக்கு பெண்கள் ஏன் போகக்கூடாது என்பது பற்றிய ஒரு விடியோவை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் அவர் குறிப்பிடுகின்ற காரணங்கள் என்ன என்பது பற்றி இங்கே பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் 1

காரணம் 1

உச்சநீதி மன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தாலும், இந்த நீதிபதிகள் குழுவில் மொத்தம் 4 பேர் இருந்திருக்கின்றனர். மூன்று பேர் ஆண். ஒருவர் பெண். மூன்று ஆண் நீதிபதிகளும் கோவிலுக்குள் பெண்கள் போகலாம் என்று சொன்னாலும் அந்த பெண் நீதிபதி தன்னுடைய தரப்பு வாதத்தை வைத்து, பெண்கள் போகக்கூடாது என்று வாதாடியிருக்கிறார். ஒரு பெண்ணே அப்படி ஒரு வாதத்தை வைக்கும்பொழுது, நிச்சயம் அதற்கு ஏதாவது காரணம் இருக்குமல்லவா என்று தன்னுடைய முதல் காரணத்தை குறிப்பிடுகிறார்.

MOST READ: ஆயுள் விஷயத்தில் விதி மாறுமா? எந்தெந்த பாவத்தால் ஆயுள் குறையும் என விதுர் நீதி சொல்கிறது?

காரணம் 2

காரணம் 2

பெண்கள் கோவிலுக்கு போகலாம் என்று வாதிடுகிறவர்கள் சிலர், பெண்கள் ஏன் போகக்கூடாது. ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பவளும் தாய் தானே. தாய்மைக்குரிய விஷயம்தானே பெண் என்பவள் என்று கேட்கிறார்கள்? மாதவிடாயைக் காரணம் காட்டுகிறார்கள். இந்த மாதவிடாய் தான் உயிர்த் தோற்றத்தின் அடிப்படை. என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சிலர் வாதிட்டாலும் அதிலுள்ள அறிவியல்பூர்வமான காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

காரணம் 3

காரணம் 3

நம்முடைய முன்னோர்கள் எதையுமே காரணம் இல்லாமல் சொல்லவில்லை. அதன்பின் நிச்சயம் அறிவியல் காரணங்கள் இருக்கும். அதில் முதன்மையானது என்னவென்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் பிராணன் என்ற ஒன்று உண்டு. அதுதான் உயிர் (ஆற்றல்). இந்த பிராணனாது, சூரியக் கதிர்வீச்சுகளால், மேல்நோக்கிதான் செயல்படும். ஆனால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அது கீழ்நோக்கியே சுற்றிக் கொண்டிருக்கும். அந்த சமயங்களில் அடிவயிற்று வலி உண்டாகும். கொஞ்சம் கஷ்டப்படுவதுண்டு.

MOST READ: உலகம் முழுவதும் துரதிஷ்டம் தரும் மாய எண்களாக நம்பப்படும் எண்கள் என்னென்ன?

காரணம் 4

காரணம் 4

பெண்ணுக்கு ஒரு குழந்தைப் பிறப்பை உருவாக்குவதற்கான வுலைகள் உள்ளே நடப்பது தான் மாதவிலக்கு நாள். தேவையற்ற கழிவுகளை நீக்கி, பெண் புனிதமடையும் நாள் தான் இது. இதுபோன்ற செயல் நடந்து கொண்டிருக்கும்போது, பெண் கோவிலுக்குச் சென்றால், பிராண்ன சக்தி செயல்பட ஆரம்பித்துவிடும். கருவளம் கெட்டுப்போகும். இதனால் கருமுட்டை உருவாகாது. ஆரோக்கிய கருமுட்டை இருக்காது. இதனால் கரு கலைந்துபோகும், கருமுட்டை உருவாகாது. மலட்டுத்தன்மை ஏற்படும் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த விஞ்ஞான காரணங்களுக்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் கோவிலுக்குப் பெண்கள் இந்த சமயங்களில் போகக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

காரணம் 5

காரணம் 5

மாதவிடாய் காலங்களில் போகாமல் இருக்கலாம். மற்ற நாட்களில் ஏன் போகக்கூடாது என்று கேட்கிறார்கள். ஆனால் ஐய்யப்பன் கோவிலைப் பொருத்தவரையில், ஐய்யப்பனுக்கு 40 நாட்கள் தொடர்ந்து பெண்களுக்கு மாலை போட்டுக் கொள்ள முடியாது. கருத்தரிக்கும் காலகட்டமாக இருந்தால், கல், முள்ளில் நடப்பது, மலையேறுவது போன்ற காரணங்களால் கருச்சிதைவு ஏற்படும். கரு தங்காது என்ற காரணங்களால் தான் போகக்கூடாது என்று சொல்லப்படுகிறது.

MOST READ: உங்க கையில இந்த முக்கோண வடிவ ரேகை ஏதாவது இருக்கா? அதோட அர்த்தம் என்னனு தெரியுமா?

இப்படி சில காரணங்களைக் குறிப்பிடுகிறார். இதில் உள்ள காரண காரியங்களை நீங்களே ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள். இந்த காரணங்கள் ஏன் சபரிமலைக்கு மட்டும் சொல்லப்படுகிறது என்பதும் யோசிக்க வேண்டியது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

folk singer anitha kuppusamy reveal about sabarimala judgement

here we are giving some points about folk singer anitha kuppusamy reveal about sabarimala judgement.
Story first published: Tuesday, October 9, 2018, 13:40 [IST]