For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றும் நாம் உண்மை என நம்பி ஏமார்ந்து வரும் முட்டாள்தனமான 5 மூட நம்பிக்கைகள்!

இன்றும் நாம் உண்மை என நம்பி ஏமார்ந்து வரும் முட்டாள்தனமான 5 மூட நம்பிக்கைகள்!

By Staff
|

நம்மை சுற்றி பல காலமாக பல மூட நம்பிக்கைகள் பரப்பப்பட்டு வருகிறது. உதாரணமாக பூனை குறுக்கே வந்தால் அந்த வழியில் போகக் கூடாது, பயணத்தை நிறுத்திவிட வேண்டும். அது அபசகுனமாக மாறிவிடும், ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை செய்துவிடலாம்... என்பதில் ஆரம்பித்து... விண்வெளியில் இருந்து பார்த்தால் சீப்பெருஞ்சுவர் தெரியும், தீபாவளி அன்று இந்தியா மட்டும் வெளிச்சமாக தெரியும், இது நாசா வெளியிட்ட படம் என்று கூறுவது வரை நம்மை சுற்றி கூறப்படும் விஷயங்கள், கூற்றுகள் முற்றிலும் மூடத்தனமாக நம்பப்படுபவை.

பூனை என்ற விலங்கு மக்கள் வாழும் இடத்தில் அதிகம் வாழக் கூடியது. பண்டையக் காலத்தில் மக்கள் வாழும் இடத்தில் முக்கியமாக பெண்கள், குழந்தைகள் இருக்கும் இடத்தில் போரிட மாட்டார்கள். ஆகவே, போர் தொடுக்கு செல்லும் வழியில் குறுக்கே, எதிரே பூனை வருவதை பார்த்தால்... அப்பகுதயில் மக்கள் குடியிருப்பு இருக்கக் கூடும் என்று கருதி வழித்தடத்தை மாற்றி செல்வார்கள். ஆனால், இது இப்போது ஒரு அபசகுனமாக காணப்படுகிறது.

அதே போல தான் ஆயிரம் முறை போய் வந்து கல்யாணம் பண்ணலாம் என்பது ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணம் பண்ணலாம் என்று திரிந்தது. இதெல்லாம் பழமொழி சார்ந்த மூட நம்பிக்கைகள். ஆனால், இன்றளவிலும் அறிவியல் ரீதியாக என்று கூறி பரப்பப்படும் மூட நம்பிக்கைகளும் சிலவன இருக்கின்றன. அவை என்னென்ன... அது சார்ந்த உண்மை கூற்று என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீனப்பெருஞ்சுவர்!

சீனப்பெருஞ்சுவர்!

நெடுங்காலமாக விண்வெளியில் இருந்து பூமியை பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் கோடு போல தெரியும் என்ற கூற்று பரப்பப்பட்டு வருகிறது. சிலர் சர்வதேச விண்வெளி மையம் எனப்படும் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் தெரியும் என்று கூறி வந்தனர்.

ஆனால், விண்வெளியில் எங்கிருந்து பார்த்தாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தவொரு கட்டிடமும், நினைவிடங்களும், அற்புதங்களும் தெரியாது என்பதே உண்மை. இது சாத்தியமற்றது.

Image Source: Twitter

சூயிங்கம்!

சூயிங்கம்!

அனைவரும் தங்கள் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது இதை கேட்டிருப்பார்கள். பெரும்பாலும் அவரவர் அம்மா தான் இதை கூறி இருப்பார்கள்.

சூயிங்கம் விழுங்கி விட்டால் அது வயிற்றில் வருடக் கணக்கில் தங்கிவிடும் என்பதே இந்த கூற்று. ஆனால், சூயிங்கம் வாய், வயிறு, குடல் என எங்கும் ஒட்டிக் கொள்ளாது என்பதே உண்மை.

முடி, நகம்!

முடி, நகம்!

இதை பலரும் அறிந்திருப்பீர்கள். இன்றும் பலர் இதை உண்மை என்று நம்பி வருகிறார்கள். அதாகப்பட்டது, ஒரு மனிதன் இறந்த பிறகும் அவனது உடலில் முடி, மற்றும் நகம் வளர்ந்துக் கொண்டே இருக்கும் என்று கூறப்படுவதே இந்த கூற்று. ஆனால், உண்மை யாதெனில், நமது உடலிலேயே நீர் இன்றி அல்லது நீர் அவசியமின்றி காணப்படுபவை முடியும், நகமும் தான்.

மற்றப்படி அனைத்து உடல் பாகங்களுக்கும் நீர் அவசியம், நீரின் பங்கு கொண்டிருக்கும். இறந்த பிறகு நீரின் பங்கு இழந்து அவை சுருங்கிவிடும். அப்படியாக சருமம் சுருங்கி விடுவதால் முடியும், நகமும் வளர்வது போன்ற பிம்பம் மட்டுமே உருவாகிறதே தவிர. முடியும், நகமும் உண்மையில் இறந்த பிறகு வளர்வது இல்லை.

நீலம், பச்சை!

நீலம், பச்சை!

இரத்தம் உடலுக்குள் இருக்கும் போது நீளம் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். உடலை விட்டு வெளியே வந்த பிறகு அல்லது வரும்போது தான் அது சிவப்பாக மாறுகிறது என்ற கூற்றும் நாம் பல காலமாக கேட்டு வருவது தான்.

உண்மையில் இரத்தத்தின் நிறம் உடலில் இருந்து வெளிவரும் போது மாறும். ஆனால், நீலம் அல்லது பச்சை நிறத்தில் இருந்து சிவப்பாக அல்ல. உடலுக்குள் ப்ரைட் ரெட் நிறத்தில் இருக்கும் இரத்தமானது, உடலில் இருந்து வெளியேறும் போது ஆக்ஸிஜனேட் ஆவதால் டார்க் ரெட் நிறமாக மாறுகிறது.

மூளை!

மூளை!

பெரும்பாலும் அறிவியல் ரீதியாக கூறப்படுபவை என்று பகிரப்படும் கூற்று இது. அதாவது, நாம் பிறப்பதில் இருந்து இறக்கும் வரை நமது மூளையின் பத்து சதவித திறன் அல்லது ஆற்றலை தான் பயன்படுத்துகிறோம். மற்ற 90% வீணாக தான் இருக்கிறது என்று கூறுவார்கள். அதற்காக மனிதனின் பத்து சதவித மூளை மட்டும் வைத்துக் கொண்டு மீத 90 சதவித மூளையை வெட்டி வீசிவிடலமா?

ஒருவர் புத்திசாலியாக இருந்தாலும் சரி, முட்டாளாக இருந்தாலும் சரி... அனைவரும் அவரவர் மூளையை நூறு சதவிதம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். நாம் உறங்கிவிட்டாலும் கூட உறங்காமல் வேலை செய்துக் கொண்டிருக்கும் மூளை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Myths That We Still Believe

Human beings tend to believe everything they tell us, it does not matter if we listen to them on the radio, on television or on the internet. Here you have five myths that you surely believe are true but in reality are not.
Desktop Bottom Promotion